மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, March 9, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(28)


அன்புள்ள பதிவு வாசகர்களே,
உலகில் நாம் பிறந்தது எதற்காக என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா!!!என்ற கேள்விக்கு என்னதான் செய்யச் சொல்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது.


அதை பட்டினத்தார் கூறுகிறார்.
ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு! செல்வமெல்லாம் அன்றென்றிரு!
ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு!
பசித்தோர் முகம் பார்!
நல்லறமும் நட்பும் நன்றென்றிரு!
நடு நீங்காமலே நமக்கு இட்டபடி என்றென்றிரு!
மனமே உனக்குபதேசமிதே!
நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு!
பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை 
அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு!
சுற்றத்தை அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு!
வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு!
நெஞ்சே உனக்குபதேசமிதே!
ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு! செல்வமெல்லாம் அன்றென்றிரு!
ஒன்றென்றிரு! தெய்வம் உண்டென்றிரு!
உயர் செல்வமெல்லாம் அன்றென்றிரு!

நெஞ்சே உனக்குபதேசமிதே!

மேலும் பட்டினத்தார் கூறுகிறார்.
மனித யாக்கை நிலையாமை பற்றிப் பாடுகிறார்.


ஒரு மடமாதும் ஒருவனுமாகி
இன்ப சுகம் தருமன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து
பனியிலோர் பாதி சிறுதுளிமாது
பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதுமலர் உண்டு கமடம் இதென்று
பார்வை மெய் வாய் செவி
கால் கைகள் என்ற உருவமுமாகி
ஒளிர் வளர் மாதம் ஒன்பதும்
ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
ஒளிநகை ஊரல் இதழ் மடவாரும்
உவந்து முகந்திட வந்து தவழ்ந்து
மடியில் இருந்து மழலை மொழிந்து
வாஇரு போவென நாமம் விளங்க
உடைமணி ஆட அரைவடம் ஆட
உண்பவர் தின்பவர் தங்களோடுண்டு 
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடிய பாலரோடு ஓடி நடந்து
அஞ்சு வயதாகி விளையாடியே!!!
உயர்தரு ஞான குருவுபதேசம் 
முத்தமிழின் கலையும் கரைகண்டு
வளர் பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறு பிராயமும் வந்து
மதன சொரூபன் இவனென மோக
மங்கையர் கண்டு மருண்டு திரண்டு
வரிவிழி கொண்டு சுழியை அறிந்து
மாமயில் போல் அவர் போவது கண்டு
மனது பொறாமல் அவர் பிறகோடி
தேடிய மாமுதல் சேர வழங்கி
வளமையும் மாறி இளமையும் மாறி
வன்பற் விழுந்து இருகண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாத விரோத குரோத மடைந்து
செங்கையில் ஓர் தடியும் ஆகியே!!!
வருவது போவது ஒரு முதுகூனும்
மந்தியெனும்படி குந்தி நடந்து
மதியும் அழிந்து செவிதிமிர் வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து
கலகலவென்று மலஜலம் வந்து
கால்வழி மேல்வழி சார நடந்து
கடன் முறை பேசும் எனவுரை நாவும்
உறங்கி விழுந்து கைகொண்டு மொழிந்து
கடைவழி கஞ்சி ஒளுகிட வந்து
பூதமும் நாலு சுவாசமும் நின்று
நெஞ்சு தடுமாறி வரும் நேரமே!!! 
வளைபிறை போல எகிறும் உரோமமும்
சடையும் சிறு குஞ்சியு மிஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல எமதூதர்கள் வந்து
வலைகொடு வீசி உயிர்கொடு போக
மைந்தரும் வந்து குனிந்தழ நொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாள்கினரே இவர் காலம் அறிந்து
வரிசை கெடாமல் எடும் எனஓடி
வந்திள மைந்தர் குனிந்து சுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வென நொந்து
விறகிட மூடி அழல் கொடு போட 
வெந்து விழுந்து குறிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீருமிலாத உடம்பை
நம்பும் எனை இனியாளுமே!!!!!!!!!  


சம்சார பந்தத்தில் கிடந்துழலும் உங்களுக்காக நான் வருந்துகிறேன். நீங்களோ பந்தங்களை விட்டுவிட்டேனே என்று எனக்காக வருந்துகிறீர்கள். உடலுக்காக வாழ்ந்த வாழ்க்கை முடிந்தது. ஐம்புலனைச் சுட்டறுத்து ஆருயிர் யாத்திரையும் தொடங்கியாயிற்று வருந்தாதீர்கள். இனி வீடு நமக்கு திருவாலங்காடு.ஓடு நமக்குண்டு வற்றாத பாத்திரம். உடையோ முழந்துண்டு. உண்டுறங்க புறந்திண்ணையுண்டு. இனி ஈடு இணை யார் நமக்குண்டு!!!!!


விட்டுவிடப் போகுதுயிர்.விட்டவுடன் உடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்.பட்டதெல்லாம் போதும்.இனி எந்நேரமும் சிவனை ஏற்றுங்கள் போற்றுங்கள்.சொன்னேன் அதுவே சுகம்.


வீடு வாசல் மாடு மனை,இவைகளையெல்லாம் சிறிது மறந்து சித்தத்தை சிவனிடம் செலுத்துங்கள்.
பாவம் செய்யாதிருக்க வேண்டுமானால், பக்தி செலுத்துங்கள். அது ஒன்றுதான் சிறந்த வழி.
பக்தி கொண்டாடுவோம்!!!
தெய்வபக்தி கொண்டாடுவோம்!!!

தெய்வபக்தி கொண்டாடுவோம்!!!
பவ சாகரத்திலே கிடந்து தவியா விதத்திலே உழன்று
பக்தி கொண்டாடுவோம்!!!

பவ சாகரத்திலே கிடந்து தவியா விதத்திலே உழன்று

பக்தி கொண்டாடுவோம்!!!
பணிவோடு நின்று திருநீறணிந்து
மறவாத சிந்தை கொண்டு
தெய்வபக்தி கொண்டாடுவோம்!!!

பணிவோடு நின்று திருநீறணிந்து
மறவாத சிந்தை கொண்டு
தெய்வபக்தி கொண்டாடுவோம்!!!
பரிவு கொண்டு புகழ் துதி புரிந்து எதிர் தலைவணங்கி உளமுருகி நின்று 
பக்தி கொண்டாடுவோம்!!!
பரிவு கொண்டு புகழ் துதி புரிந்து எதிர் தலைவணங்கி உளமுருகி நின்று 
பக்தி கொண்டாடுவோம்!!!
நிகழும் நோக வாழ்வதே சதமென
அனுதினமும் மாயமாக நோக வலையினில்
உழலும் காமசோக ரோகமதமதில்
உழலும் பாவியாகி இடர்பட
அகமும் வாடி நோய்களாலே மெலியவும்
அமுதமாகி ஏங்கிடாமல் ஒழுகிட
வகையிலாது சேய்களோடும் மனைவியும்
கதறி வீழ நாடிபேத கணமதில்
நமனும் வந்து இறை கவரவும்
பிணமாய் சுடலை எண்டி
நமதுடலும் வெந்தழியும் நாளிலே!!!!

நம் நாடு எங்கே!!!!!!!
பெரும் வீடு எங்கே!!!!!
காப்பு நஞ்சை எங்கே!!!!!!
தோப்பு புஞ்சை எங்கே!!!!!!
அதிகாரம் எங்கே!!!!!!
வியாபாரம் எங்கே!!!!!!
மனைவி மக்கள் எங்கே!!!!!!
வைத்த ரொக்கம் எங்கே!!!!!
வாங்கின வட்டி எங்கே!!!!!!
இரும்புப் பெட்டி எங்கே!!!!!!
அவையெல்லாம் கூட வருமோ அங்கே!!!!!!
நாடி வருவதெது பாவ புண்ணியமல்லாது
நாமரையில் அணியும் கோவணமும் வராது!!!!!
நன்றுணர்ந்து கொண்டு சிந்தையும் தெளிந்து கும்பிடுங்கள் என்றும்!!! தவநிலை நாட்டும்!!!!
அருளமுதூட்டும் பதவி காட்டும் 
பக்தி கொண்டாடுவோம்!!!
தெய்வபக்தி கொண்டாடுவோம்!!!அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

 1. மிக அற்புதமான பதிவு... ப‌ட்டின‌த்தாரின் பொன்னேடுக‌ளில் பொறிக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ வாக்குக‌ள்.

  ஞாப‌க‌ப்ப‌டுத்திய‌த‌ற்கு மிக‌வும் ந‌ன்றி.

  http://anubhudhi.blogspot.com/

  ReplyDelete
 2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சங்கர் குருசாமி அவர்களே,
  பட்டினத்தார் பாடல்கள் நம் வாழ்நாளில் என்றும் மறக்கக் கூடாதவை.அவை நம் உயிரோடு, உடலோடு இறண்டறக்கலக்க வேண்டியவை. அவற்றை உயிரோடு கலந்தால் அஞ்ஞானம் விலகும். ஞானம் கைகூடும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. குருஜி வணக்கம், தங்களுடைய வலைப்பூவை, கடந்த ஒரு மாத காலமாக வாசித்து வருகிறேன், தற்போதைக்கு சித்தர்களின் விஞ்ஞானம், மனையடி சாஸ்திரம் வரை வாசித்திருக்கிறேன்.
  எனக்கு தியானம் கற்றுகொள்ள விருப்பம், அடியேனுக்கு தங்களின் குருவருள் கிட்டுமா.

  சரவணன், நைஜீரியா,
  மின்னஞ்சல்:saravanan_agni@yahoo.com

  ReplyDelete
 4. அன்புமிக்க திரு சரவணன் அவர்களே,
  கருத்துரைக்கு நன்றி!!!!!தங்களுக்கு தனியாக பதில் அனுப்பப்பட்டுள்ளது.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்