மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 23, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(23)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
சென்ற வாரம் எனது பதிவு வாசகியான திரு வினொதினி அவர்கள்///அடிக்கடி பதிவை நிறுத்திடுவேன், நிறுத்திடுவேன் என்று சொல்லி பயமுறுத்தாதீர்கள். தங்களுக்கு comments போடநினைத்தால் நல்லாயிருக்குநல்லா எழுதுறீங்க என்று மட்டும் தான் பொதுவா எல்லோராலும் சொல்ல முடியும். அதை எத்தனை தடவை தான் போடுவது? ஏனெனில் நீங்கள் எழுதும் Subject வித்தியாசமானது. பொதுவா அது பற்றி எல்லோருக்கும் தெரியாது. அதனால் விவாதிக்க முடியாது. அத்துடன் அது சீரியஸ் மாற்றா் என்பதால் ஜோக்கும் விடமுடியாது. வியந்து பார்த்து அறிந்து கொள்ள மட்டுமே முடியும். எனவே இனி வாசகர்களை தயவு செய்து பயமுறுத்தாதீர்கள். தொடர்ந்து செல்லுங்கள். வாழ்த்துக்கள்./// என்று குறிப்பிட்டார்கள்.

பதிவை நிறுத்திவிடுவேன் என்று பல தடவை நான் கூறவில்லை.ஒரே ஒரு தடவை குறிப்பிட்டேன்!பயமுறுத்த எனக்கு எவ்விதத்திலும்,அனுமதியும் கிடையாது.


எனக்கு தெரிவித்த மாதிரி இறைவன் எல்லோருக்கும் தெரிவிக்க மாட்டானோ!என்றெண்ணித்தான் இப்படிச் சொன்னேன்! ஆனாலும் மக்கள் படும் துயர் என் கண்ணில் வரவழைக்கும் கண்ணீர் உங்களுக்குத் தெரியாது!ஆனாலும் மக்கள் தங்கள் துயரை தாங்களே தீர்த்துக் கொள்ள முடியாமல் இருக்கும் இந்த நிலைதான் மிகவும் மனம் வருந்தும் நிலை.

பாரதியார் பாடல்தான் நினைவுக்கு வருகிறது. ''நெஞ்சு பொறுக்குதில்லையே!என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது'' கீழ்க்கண்ட ஒளிக்காட்சிகளைக் காணுங்கள்.











மற்றபடி நான் யார் உங்களுக்கு வரும் உணர்வுகளை இறைவன் உணர்த்துவதைத் தடுக்க!நான் யார் என் பதிவைத் தடுக்க!நீங்கள் கேட்டால் நான் எதைத் தர மறுப்பேன்.

இறைவன் மனித ரூபத்தில் வந்திருக்கிறான்,வந்து கொண்டும் இருக்கிறான், இனியும் வருவான்.மனித ரூபத்தில் வந்து தன்னலமில்லாமல் கேட்டால்,அது இறைவனே எனக் கொண்டு என்னுயிரைக் கேட்டாலும் தருவேன்.

உங்களுக்கு என்ன உடற் பிரச்சினை கேட்டாலும், நான் எந்த எதிர் பார்ப்பும் இன்றி கூறத் தயார். நான் சாதாரணமானவன். என்னிடம் ஒன்றும் இல்லை. நீங்கள் தட்டினால் திறப்பேன்.கேட்டால் கொடுப்பேன். நான் ஒரு வாயிற்காப்போன்.

நான் சுய உணர்வுடன் இருக்கும் காலம் சில காலம்.அதற்குள் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் உரைக்கும் வார்த்தை என்று கொள்ளுங்கள். சித்தம் போக்கு சிவன் போக்கு என்று கொள்ளுங்கள். ஆனால் நான் எப்போது நிற்பேன் என்று எனக்குத் தெரியாது, நடப்பேன் என்று தெரியாது. 

எனது வலைப்பூவில் இணைப்பு கொடுத்திருக்கும் உறவுக்காரன் வலைப்பூவின் ஆசிரியர் பாரதியாரின் பேரன்.அவர் துறவு கொள்ள, புத்த துறவிகளுக்கான பயிற்சியில் உள்ளார்.அது இறைவன் அவருக்குக் காட்டிய வழி.
  
தீர்மானிப்பவன் இறைவன். அது நீங்கள் என்றாலும் இறை எனக் கொள்வேன். தடுப்பவர்அல்லது கொடுப்பவர் யார் என்றாலும் அது இறை எனக் கொள்வேன்.எல்லாம் அவன் செயல்!உங்கள் கடிதத்தில் குறிப்பைப் பார்த்து வெகு நேரம் சிரித்தேன்.நான் பயப்படும் படியானவன் அல்ல!

இறைவனுக்கு லட்சார்ச்சனை ஏன் செய்கிறார்கள். அவன் நாமம் அவனுக்குத் தெரியாது என்பதற்காகவா! இறைவன் புகழ் பாடினால் இறைவன் தன் படைப்பு தன்னை மறக்கவில்லை என்று மகிழ்கிறான்.புகழ் பாடவில்லை என்றாலும்,இறைவன் வருந்துவதில்லை. அது போல நீங்கள் என்னைப் புகழ்ந்தாலும் சரி!விமரிசித்தாலும் சரி! இரண்டும் ஒன்றுதான்.

நான் இறைவனின் பேனா மட்டுமே! இந்தப் வலைப் பதிவின் படைப்புகளெல்லாம் இறைவனுடையவை. ஒரு கவிஞனின் பேனா,கவிஞன் எழுதும் கவிதைகளைப் படைத்ததாக மகிழ்ந்து கொண்டால் அது எவ்வளவு முட்டாள்தனமோ, அது போல என் படைப்பை, என் படைப்பு என நான் நினைப்பதுவும்.என் படைப்பை நீங்கள் புகழ்ந்தாலோ, அது இறைவனைப் புகழ்ந்த மாதிரியே! புகழவில்லை என்றாலும் ஒன்றுமில்லை.

நான் வேறல்ல இறைவன் வேறல்ல என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்!நீங்களும் இறைவனும் வேறல்ல என்பதை, நீங்களும் உணருங்கள்.

இது அகங்காரமல்ல,அது போலத் தெரிந்தாலும் இதுதான் உண்மை!நீங்கள் சொன்னால் நிறுத்துவதும்,மீண்டும் ஆரம்பிப்பதுவும் அகங்காரமில்லையல்லவா,அதுபோல் இதுவும் அகங்காரமில்லை.


அஹம் பிரம்மாஸ்மி! 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

9 comments:

  1. ஐயா, நான் வேறல்ல இறைவன் வேறல்ல என்று உணர்ந்து இருக்கிறேன் என்ற வரிகளை மீண்டும் மீண்டும் வாசிக்கிறேன்.எந்த ஒரு சாமானியனாலும்
    அவ்வாறு உணர முடியுமா.அகம் புறம் அறியாமல் நியமம் ஏதுமன்றி மனம் போன போக்கில், மனித கூட்டத்தில் மீச்சிறு புள்ளியென வாழும் என்னைப்
    போன்ற எவருக்கும் இது சாத்தியம் தானா? அவ்வாறு கடவுளை உணர்வதற்கான
    அழைப்பும் கடவுளிடம் இருந்து தான் வருகிறது இல்லையா?

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு JAIMANIKA அவர்களே, மீண்டும் வலைப்பூவைப் பாருங்கள்.நான் இப்போது மீண்டும் பல கருத்துக்களை விதைத்திருக்கிறேன். பார்த்து கருத்துரை இடுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. சாமீ ஜி
    ஈழ உறவுகளுக்கு நிச்சயம் விடிவு பிறக்க தமிழனாய் பிறந்த
    ஒவ்வொருவரும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுமாறு
    தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    கண்ணீர் வரவைத்த பதிவு

    ReplyDelete
  4. சாமீ ஜி
    உங்கள் பதிவுகளுக்கு தகுந்த கருத்துரை
    வழங்கும் அளவுக்கு அறிவு எனக்கு இல்லை

    ReplyDelete
  5. சாமீ ஜி
    ஈழ விசயத்தில் அந்த கொடுங்கோலன்
    தமிழகத்திற்கு வந்து தமிழ் கடவுள்களுக்கு
    பலி மற்றும் பூஜைகள் செய்த பின் தான்
    வெற்றி கிடைத்தது என்பது என் கருத்து


    அதற்க்கு முன் எவ்வளவு சூழ்ச்சிகளையும்
    தமிழர்கள் வென்றே வந்துள்ளார்கள்

    ReplyDelete
  6. ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டளை ஆறு

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் .... துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

    ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி
    இன்பத்தில் துன்பம் .... துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி

    சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்

    சொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் துன்பத்தில் இன்பம் பட்டாகும்
    இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
    எல்லா நன்மையும் உண்டாகும்

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும் .........

    நிலை உயரும் போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும் ...........

    உண்மையை சொல்லி நன்மையை செய்தால்
    உலகம் உன்னிடம் மயங்கும் .........

    நிலை உயரும் போது பணிவு கொண்டால்
    உயிர்கள் உன்னை வணங்கும் ...........

    உண்மை என்பது அன்பாகும் பெரும் பணிவு என்பது பண்பாகும்
    இந்த நான்கு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மையும் உண்டாகும்
    எல்லா நன்மையும் உண்டாகும்

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    ஆசை, கோபம், களவு கொள்பவன் பேச தெரிந்த மிருகம்
    அன்பு, நன்றி, கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்

    இதில் மிருகம் என்பது கள்ள மனம்
    உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்

    இந்த ஆறு கட்டளை அறிந்த மனது ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
    ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டளை ஆறு

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    ================================================

    ஆசை, கோபம், களவு தவிர்த்து
    அன்பு, நன்றி, கருணையுடன் மனிதர்கள் வாழ்ந்தால்
    எதற்கு இந்த போர் இந்த வேதனை எல்லாம் ?

    ================================================

    நான் மிகுந்த வேதனையில் இருக்கும் போது கேட்கும் பாடல்

    ReplyDelete
  7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷரீஃப் அவர்களே,
    ஆறு மனமே ஆறு பாட்டையே அப்படியே எழுதிவிட்டீர்களே.ஈழத்தமிழர்கள் பற்றிய என் எண்ணத்தையே இந்தப் பதிவு பிரதிபலிக்கிறது.நான் கஷ்டப்பட்டாலும் தாங்கிக் கொள்ளும் என் மனம்,மற்றவர்கள் கஷ்டப்பட்டால் தாங்காமல் அழுகிறது.இறைவா இவர்களுக்கு இந்த நிலையா என்று.ஆனாலும் இதற்கும் ஓர் முடிவுண்டு.இந்த நிலையும் மாறும்.இத்தனை பேர் மன வேகம் இந்தக் காரியத்தை நடத்தும்.என்ன பூஜை புனஸ்காரம் செய்தாலும் எல்லாம் ஓர் எல்லைக்குள் அடங்கும்.
    இறைவன் மிகப் பெரியவன்,எதை எதற்காகச் செய்கிறான் என்று யாரும் அவ்வளவு எளிதில் அரிந்து கொள்ள முடியாது.என்னை அரியலூருக்கு மாறுதல் செய்தபோது மனதுக்கு சிரமமானதாகத்தான் தெரிந்தது.ஆனால் அதன் விளைவு மிக நல்லதாகத்தான் இருந்தது.தமிழனுக்கு, உணர்வூட்டவும், விழிப்புணர்வூட்டவும் இது போன்ற நிகழ்வுகளை நிகழ்த்திருக்கின்றன.இன்னும் சிங்களப்படைகள், மீனவர்களை கொலை செய்வது, மீன்களைப் பிடுங்குவது, வலைகளைப் பிடுங்குவது,படகுகளை அடித்து நொறுக்குவது என அக்கிரமம் செய்து வரும் வேளையில்,இலங்கைக்கு மின்சாரம் கொடுக்க இந்திய அரசு செய்து வரும் வேலை எதைக் காட்டுகிறது.புரியவில்லையா?ஒட்டு மொத்த தமிழ் மக்களின் விழிப்புணர்ச்சி போதவில்லை.எந்த மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்களோ?அந்தக் கடல் வழியேதான் HIGH TENSION CABLEகள் இணைக்கப்பட உள்ளது.ஒட்டு மொத்த தமிழர்கள் இதற்கு எதிர்ப்பு அளித்தால் இது போன்று தமிழர்களை அசட்டை செய்யும் காரியம் நடக்குமா?இந்தக் குடியரசு தினத்திலாவது தமிழர்கள் விழிப்புணர்வு பெறட்டும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. தங்களின் தெளிவு மிக அழகு ஐயா,

    ReplyDelete
  9. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே, எந்த விடயம் நடந்தாலும் அது அடுத்தவருக்கு நடப்பது வரை செய்தி,நமக்கு வந்தால்தான் அது துன்பம் என்றும் துயரம் என நினைக்கும் போக்கு மாற வேண்டும்.தமிழர்களின் போராடும் குணம் எங்கு சென்றது.ஒரு அரை நூற்றாண்டுக்கு முன் வரை தமிழனைப் போல வீரம் செறிந்து இருந்தவனும், அதை வெளிப்படுத்தியவனும் உலகில் வேறு எந்த இனத்திலும் கிடையாது.அப்படிப்பட்ட தமிழ் இனம் இன்று இப்படி எப்படிப்பட்ட அநியாயம் நடந்தாலும் ஒன்றுக்கும் அசைந்து கொடுக்காத அளவுக்கும், மகா சுயநலமாக இலவசங்களுக்கு காத்திருக்கும்,கேவல நிலைக்கு தமிழன் மாறிப் போனதை எண்ணி என் மனம் மிகவும் வருந்துகிறது.எங்கிருந்தோ ஒரு கதாநாயகன் வந்து நம்மைக் காப்பாற்றுவான் என்று எண்ணிக் கொண்டு அக்கடா என்று இலவசங்களில் மூழ்கிக் கொண்டிருக்கும் போக்கு மாற வேண்டும்.அந்தக் கதாநாயகன் நாம்தான் என்ற எண்ணம் நமக்கு வர வேண்டும்.தனது மொழி, நாகரீகம், சக மனிதன் பாதிக்கப்படும்போது மண்ணாய்க் கிடக்காமல் கிளர்ந்து எழுவது,எப்போது.அந்நாளே பொன்னாள்.ஒரு நன்னாள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்