மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, January 4, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(19)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் 1)

வாஸ்து சாஸ்திரம் என்று அழைக்கப்படும் மனையடி சாஸ்திரம் பற்றி இந்தப் பதிவில் கூற இருக்கிறேன். 1996 ஆம் ஆண்டு நான் எனது பூர்வீக இடத்தில் வீடு கட்ட அனைத்து விதமான கடன்களும் பெற்று (P.F LOAN,HOUSE BUILDING ADVANCE,BANK LOAN,CASH ON HAND) வீட்டை ஒரு வழியாக கட்டி முடித்தேன்.
முடித்தவுடன் 1996ம் ஆண்டு மே மாதம்,எனக்கு வந்தது பணி மாறுதல் உத்தரவு அரியலூருக்கு.


இந்த சந்தர்ப்பத்தில் நான் ஒரு விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன்.1996ம் ஆண்டு மாசி மாதம் ரோகினி நட்சத்திரத்தன்று எங்கள் குருநாதரின்
குருநாதர் கோட்டைச்சாமி ஐயா அவர்களின் குருபூஜை முடித்துவிட்டு பரமக்குடி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன்.மதியம் 3 மணி இருக்கும், அப்போது ஒரு சித்த புருஷன் வந்து உன்னை அரியலூருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம்,என்றார்.அப்போது என் மனம் அவ்வளவு பரிபக்குவத்தில் இல்லை.அலுவலகத்திலும் பல பிரச்சினைகள்,எனவே மனம் அமைதியாய் இல்லை.நான் அவரைப் பார்த்து எனது அலுவலக ஆட்கள் அனுப்பி வைத்த ஆளோ என்ற எண்ணத்தில் ''நீங்கள் யார் என்னை அரியலூர் அனுப்பி வைக்க என்று கேட்டேன்''.


அதற்கு அவர் கூறினார் நான் யார் என்று உன்னால் கண்டு கொள்ள முடியவில்லையா?இது போன்ற அஞ்ஞான மனநிலையில் இருந்து உன்னை பரிபக்குவ நிலைக்கு கொண்டு வரவே நாங்கள் உன்னை அரியலூர் அனுப்புகிறோம் என்றார் அவர்.


மறுபடியும் மேலும் மேலும் எனக்கு சந்தேகம் வந்த வண்ணம் இருந்தது.எனென்றால் எனக்கு உற்ற நண்பர்கள் எல்லாம் சுய நலவாதிகளாக மாறி, துரோகிகளாய் மாறிய நேரம்.அவர் மேலும் என்னிடம் 4 மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது யார், யார் அரியலூரில் இருக்கும் போது என்னென்ன விடயங்களை கற்றுத் தருவார்கள் என்று சொன்னார். அது போக வீட்டைப் பற்றிய வாஸ்துவைப் பற்றியும் ஒருவர் சொல்லிக் கொடுப்பார் என்றார்.


அப்போது ஒரு விடயம் கவனித்தேன்,அவர் கிழிந்த ஒரு துண்டு மட்டுமே இடுப்பில் அணிந்து இருந்தார்.அதுவும் மிக அழுக்கான நிலையில் இருந்தது.பேசிக் கொண்டே மாலை நேரத்து சிற்றுண்டி சாலை ஒன்றிற்கு அவரை அழைத்துச் சென்றேன்.


அவரையும் என்னையும் யாரும் கவனிக்கவேயில்லை. அவர் உடையைப் பார்த்து அருவருப்புக் கொள்ளவோ, சிற்றுண்டிச் சாலையில் உட்கார்ந்து சாப்பிட எதிர்ப்போ தெரிவிக்கவில்லை.மாறாக மிக மரியாதையாக நடந்து கொண்டார்கள்.பல முறை நான் மிக உரத்த குரலில் பேசிய போதும் யாரும் என்னையோ அவரையோ திரும்பிப் பார்க்கவும் இல்லை.அவர் எங்கள் இருவரைச் சுற்றி ஒரு மாயத் திரையை ஏற்படுத்தி இருந்தார் என்பது புரிந்தது.பிறகே எனது மனச் சஞ்சலத்தை விட்டு அவர் சொல்வதைக் கவனித்தேன்.


அவர் கூறியபடியே எல்லாம் நடந்தது.அரியலூர் சென்றேன்.அவர் கூறிய பேர்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவராக வந்து என்னிடம் ஒவ்வொரு விடயத்தைக் கற்றுக் கொடுத்தார்கள்.இப்படியும் நடக்குமா என்று இன்றும் அதிசயித்துக் கொண்டு இருக்கிறேன்.ஆனால் ஒன்று தெளிவாக புரிந்தது. ''என் செயலாவது யாதொன்றும் இல்லை''.  


இனி வாஸ்துவுக்கு வருவோம்.கிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து. என்ன இவ்வளவு எளிதாக முடித்துவிட்டீர்கள் என்று கேட்கிறீர்களா?விளக்குகிறேன்.


இந்தப் பதிவை ஏன் எழுதுகிறேன் என்றால் நிறைய பேர் கடன்,நிறைய வாங்கி வீட்டைக் கட்டியவுடன் பெருங் கஷ்டத்திற்கு உள்ளாவர்.அது அளவுக்கு அதிகமான கடனினாலும் இருக்கலாம்.திட்டமிடாத செய்கையாலும் இருக்கலாம்.ஆனால் வாஸ்துவினால் இருக்கலாமோ என்று சந்தேகித்து மீண்டும் செலவு செய்து வீட்டை மாறுதல் செய்து, கட்டிட செலவுகளால் சிரமப்படுகிறார்கள்.நானும் அதே சூழ்நிலையைச் சந்தித்து மிகவும் கஷ்டப்பட்டவனே!அது போன்ற நிலையை நமது வலைப்பூ வாசகர்களுக்கு ஏற்படாமல் காக்கவும்,வந்திருந்தால் போக்கவுமே இந்தப் பதிவு.


பதிவு மிகப் பெரியதாகப் போவதால் இதை இரண்டாக வெளியிடுகிறேன்.பதிவின் தொடர்ச்சி சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(20)(மனையடி சாஸ்திரம் என்ற வாஸ்து சாஸ்திரம் பாகம் இரண்டில் காணுங்கள்)



அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

11 comments:

  1. சார் பதிவு மிக அருமையாக உள்ளது. சித்தரை நேரில் சந்தித்த அனுபவம் மெய்சிலிர்க்க வைத்தது. நீங்கள் பேசும் போது அவர் சித்தர் என தங்களால் உணர முடிந்ததா. மீண்டும் நீங்கள் வேண்டும் போது அவரை சந்திக்க அனுமதி தந்தார்களா.

    வாஸ்து பற்றி எல்லோரும் குழப்பிக்கொண்டிருக்க தெளிவான நீரோடை போல் ஆரம்பிக்கிறது தங்களது பதிவு. அடுத்த பதிவை படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    மிக்க நன்றி.
    சு. மணிகண்டன்

    ReplyDelete
  2. //கிழக்கேயிருந்து வரும் சூரிய சக்தியையும்,வடக்கேயிருந்து வரும் காந்த சக்தியையும் வீட்டுக்குள் தேக்கி வைப்பதே வாஸ்து//

    எளிமையாக புரியும்படி உங்கள் பதிவு இருக்கிறது ஐயா, மிக்க நன்றி.

    உங்கள் அடுத்த பதிவிற்கு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. சாமீ ஜி

    இது வரை வாஸ்து பற்றி கேள்விபட்டது, படித்ததை விட மிக சிறந்த
    பதிவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை

    பதிவை எதிர்நோக்கும்
    உங்கள் அன்பன்
    ஷரீப்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மணிகண்டன் அவர்களே,
    சித்தர்கள் யாரும் தங்களைச் சித்தர் என்று சொல்லிக் கொள்வதில்லை.சித்த புருஷர்கள் மிகவும் அழுக்காக கிழிந்த உடையில் இருப்பது,அவர்களை யாரும் எளிதில் அவர்களை அணுகக் கூடாது என்பதற்காக.இல்லையெனில் அவர்களைக் கடவுளாக்கி வழிபட ஆரம்பித்துவிடுவோம்.அதை அவர்கள் விரும்புவதில்லை.நான் வேண்டும் போதோ விரும்பும்போதோ அவர்கள் என்னை சந்திப்பதில்லை.அவர்கள் விரும்பும் போது மட்டுமே யாரையும் சந்திக்கிறார்கள்.
    அவர் எனது குறிப்பிட்ட வயது முடிந்தவுடன் என்னைச் சந்திக்க வருவதாகக் கூறியுள்ளார்.அவர் வரவை ஆவலுடன் எதிர் நோக்கி அந்த நேரத்திற்காக காத்துள்ளேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    மீதமும் அடுத்த பதிவாக தயாராகிக் கொண்டு இருக்கிறது.பார்த்துப் பயனடையுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ஷரீஃப் அவர்களே,
    அனைத்துமே எல்லாம் வல்ல ஈசன் செயல்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. தங்கள் பதிலுரைக்கு மிக்க நன்றி ஐயா.

    ReplyDelete
  8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மணிகண்டன் அவர்களே,
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. அன்பரே ,
    அருமையான விளக்கங்கள் !!! . நன்றிகள் பல வாஸ்து அறியாமல் எனது பெற்றோர் விடு கட்டி பல இன்னல்களுக்கு ஆளானோம் .

    இப்படிக்கு
    புலிப்பாணி சித்தர் அடிமை ,
    சித்தர் பைத்தியம் .

    ReplyDelete
  10. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு புலிப்பாணி அவர்களே,
    வாஸ்து என்றால் என்ன என்று தெரியாமல் இருப்பதால்தானே மிக அதிகமான ஆசாமிகள் மக்களை மிக அதிகமாக ஏமாற்றுகிறார்கள்.நான் மீன் பிடித்துத் தர மாட்டேன்.ஆனால் மீனைப் பிடிக்க கற்றுக் கொடுக்கின்றேன்.கற்பவர்கள் கற்றுக் கொள்ளுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. அன்பு நண்பருக்கு வணக்கங்கள் பல.
    உங்களின் நலம்பயக்கும் பதிவுகளுக்கு நன்றி.
    நேற்றைய தினத்தில் தங்களோடு பேசிக்கொண்டிருந்தது - பயனுள்ளதாக,
    மகிழ்ச்சியுள்ளதாக இருந்தது.
    குளம்பி என்ற கொட்டைவடிநீர்- காபி அருந்துவது குறித்த பதிவு ஒன்றைப் பார்த்தேன்.
    மனிதர்கள், தோடு உணர்ச்சிக்கு கொஞ்சம் மயங்குபவர்கள்.
    நமது வாய்- உதடு இந்தப் பகுதிகளில் இதன் தேவை சற்று அதிகம்.
    அதனால்தான் சிலபேர் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
    எதையாவது குடிக்கக் கற்றுக் கொண்டாலும் பிரச்சினை ஒன்றுதான்.
    பெண்களுக்குக் காபி- ஆண்களுக்கு மது .
    திராட்சை இரசம்(வைன்) கண்டுபிடித்தவன் யூதன்.
    அரேபியன் காபியைக் கண்டுபிடித்தான்.
    சோடாவைக் கண்டுபிடித்தவன் அமெரிக்கன்.
    இந்த மூன்றும் உலகத்தை ஆட்டிப் படைக்கின்றது என்றால் அது மிகையில்லை.
    ஆனால் காபியில் சில நன்மைகளும் உண்டு என்பதை நாம் மறுப்பதற்கில்லை.
    தற்கொலை உணர்வைத் தடுக்கும் ஆற்றல் காபிக்கு உண்டு.
    ஏனென்றால், காபியில் அளவுக்கு அதிகமான anti-oxidant உள்ளது.
    இந்தப் பழக்கங்களைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பது பற்றி இளந்தலைமுறைக்கு நாம் கற்றுக் கொடுக்கவேண்டும்.
    ஏற்கெனவே குடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஏதாவது மாற்று சொல்லித்தானே ஆக வேண்டும்.
    Ganoderma என்ற மலேசியக் காளான் காபி சந்தையில் இருப்பது நாம் அறிந்ததே.
    அதை நல்லதொரு மாற்றாக நாம் அறிமுகப் படுத்தலாம்.
    அல்லது நாமே சொந்தமாக தயாரிக்கும் காபி சூத்திரம் ஒன்றை நான் தர ஆசைப் படுகின்றேன்.
    ரோபெஸ்டா காபிக் கொட்டை - 200 gm.
    கொத்துமல்லி-50 gm.
    வெந்தயம் -25gm.
    மூன்றையும் பக்குவமாக வறுத்துக் கொள்ளவும்.(இதை மட்டுமே விற்று ஒருவர் நல்ல தொழில் செய்கின்றார்.)
    இது பில்டர் காபி வகை.
    இன்ஸ்டன்ட் காபி என்பது மிகக் கேடு.
    இன்ஸ்டன்ட் காபியினால் ஆண்மை குறையும்.

    "ARISE & SHINE"
    Dr.Rajasekar Athiappan,M.D.,
    www.ayurexpress.com
    - Enrich Life-

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்