மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, November 23, 2010

சித்தர்களின் விஞ்ஞானம்பாகம்( 7)


சித்தர்கள் விஞ்ஞானத்தில் மிக முக்கியமானது பரிபாஷை என்பது.இது மிகப் புரியாததும் கூட.இதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள அந்தந்த சித்தர்களின் நிகண்டுகளைப் படித்து மனப்பாடம் செய்வதோடு, மூலிகைகளின் குணபாடத்திலும் விற்பன்னராக இருந்தால் மட்டுமே பாடல்களுக்கு சரியான பொருள் தெரிந்து கொள்ள முடியும். 


நிகண்டு என்றால் ஒரு பொருளைக் குறிக்கும் பல பெயர்களைக் கொண்ட பரிபாஷைத் தொகுப்பே.அதில் போகர் பாடல்களைப் படிக்க போகர் நிகண்டு படித்துத் தேர்ந்தால் மட்டுமே போகர் பாடல்களுக்கு தெளிவான,சரியான விளக்கம் பெற முடியும்.எடுத்துக் காட்டாக கீழ்க் கண்ட பாடலைப் பாருங்கள்.

யானைக்கண் ஒரு பிடியும் அரசன் விரோதி இளம்பிஞ்சும்
கானக் குதிரை மேற்தோலும் காலில் பிடியாய் மாட்டியதும்
தாயைக் கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல்
தமிழும் வடுகும் குணமாகும்.

யானைக்கண் ஒரு பிடியும்=யானைக்கு இன்னொரு பெயர் அத்தி,யானையைப் போல் பலம் கொடுப்பதாலும்,யானைக் கண்ணின் வடிவத்தை ஒத்திருப்பதாலும் அத்திப்பழத்தை யானைக்கண் என்றும் கூறுவார்கள். அத்திப் பழம் ஒரு கைப்பிடியும்

அரசன் விரோதி இளம்பிஞ்சும்=கனிகளின் அரசன் எலுமிச்சம் பழம்,அதன் விரோதி புளி.அதாவது புளியம்பிஞ்சு
கானக் குதிரை மேற்தோலும்=மாம்பழம் பழுத்துவிட்டால் அதனுள் இருக்கும் கொட்டைக்குள் இருக்கும் பருப்பு ஆடும்,காற்றடிக்கும்போது மொத்த மாம்பருப்புக்களும் ஆடும்போது குதிரைகள் ஓடுவது போல சத்தம் வரும் எனவே மாம்பழத்திற்கு கானக்குதிரை என்று பெயர்மாம்பழத்தின் மேற்தோலும்( இதையே அமுக்கிறாக் கிழங்கின் தோல் என்றும் கூறுவார்கள்.ஆனால் அமுக்கிறாக் கிழங்கிற்கு அசுவம்,குதிரை,என்றுதான் கூறுவார்களே தவிர,கானக் குதிரை என்று கூற மாட்டார்கள்)
காலில் பிடியாய் மாட்டியதும்=விளாம் பிசின் காலில் ஒட்டினால் போகவே போகாது.தோல் உரிந்தால்தான் போகும்.எனவே இது விளாம் பிசின் 
தாயைக் கொன்றான் பூச்சாற்றில் தட்டியே அரைத்து உண்பீரேல்=தாயைக் கொல்வது வாழை,பக்கக் கன்றுகள் வந்துவிட்டால் தாய் வாழை சாய்ந்துவிடும்,எனவே வாழைப் பூச்சாற்றில் மேற்கண்ட பொருள்களை தட்டி அரைத்து உண்டால்
தமிழும் = தமிழ் நாட்டில் மிக அதிகமாகக் காணப்படும் வெட்டையும்
வடுகும் குணமாகும் = வடுக நாடான ஆந்திராவில் காணப்படும் இரத்த வெட்டையும் குணமாகும். 

அத்திப் பழம் ஒரு கைப்பிடியும்புளியம்பிஞ்சுமாம்பழத்தின் மேற்தோலும்,விளாம் பிசினும்,வாழைப் பூச்சாற்றில் மேற்கண்ட பொருள்களை தட்டி அரைத்து உண்டால்தமிழ் நாட்டில் மிக அதிகமாகக் காணப்படும் வெட்டையும்,வடுக நாடான ஆந்திராவில் காணப்படும் இரத்த வெட்டையும் குணமாகும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்







  

Post Comment

8 comments:

  1. அன்பரே ,
    அருமை மிக அருமை !!!! ., கோடான கோடி நன்றிகள்.,
    இப்படிக்கு
    புலிப்பாணி சித்தர் அடிமை ,
    சித்தர் பைத்தியம்

    ReplyDelete
  2. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,நம் நாட்டுச் சித்தர்களின் பெருமையையும் விஞ்ஞானத்தையும் சொல்ல ஒரு பதிவு போதாது.இன்னும் வரும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. ஆஹா என்ன அருமையான விளக்கம் நன்றி ஐயா

    "" கானேன்ற கவரிமான் பித்துதன்னை
    கருவான ஈரலுட தைலம் வாங்கி
    வானென்ற தயிலமதில் பித்துப்போட்டு
    உருவான நாதமுடன் புனுகு சேர்த்து ""

    கவரிமான் பிச்செடுத்து அதன் ஈரலுடன் தைலம் வாங்கி முன்சொன்ன பிச்சை போட்டு நாதமுடன்

    1.பிச்செடுத்து ???
    2.நாதமுடன் ???

    இதில் இந்த இரண்டு வார்த்தைகளுக்கு அர்த்தம் விளங்கவில்லை.

    நன்றி
    உங்கள் அன்பன் அனாதி

    ReplyDelete
  4. பித்து என்பது உயிர்ச்சத்து. இது பற்றிய பதிவு பின்னால் வருகிறது.பிறகு இதைப் படித்தால் நன்கு புரியும்.தங்களின் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் இருந்தால் பல விஷயங்களை தனியாக விவரிக்கலாம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. mikka nanri saamee

    saamee enra sollukku (saavai Meeriyavar)enna villakkam
    ethunai visaya gnanam thangalidam
    enni viyakkiren

    emailil thodarbu kolkiren saamee

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி அவர்களே,
    இறைவனுக்கே நன்றி.இது போன்ற விஷயங்களை அறிய சந்தர்ப்பம் ஏற்படுத்திய இறைவனுக்கு என் நன்றி.அறிவில் அறிவை அறியும் பொதுவில் ஆனந்தத் திரு நடம் இறை நடனம்.அறிந்ததை அறிவிப்பதே என் கடமை என்னும் கடன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. நன்றி அய்யா
    நல்ல பதிவு இரத்த வெட்டை என்றால் என்ன அய்யா

    இப்படிக்கு
    உண்மையுள்ள
    ம.சரவணன்

    ReplyDelete
  8. நன்றி அய்யா
    நல்ல பதிவு இரத்த வெட்டை என்றால் என்ன அய்யா

    இப்படிக்கு
    உண்மையுள்ள
    ம.சரவணன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்