மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, August 18, 2011

மதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறும் மதியில்லா ஆலோசகர்களும்

மதிகெட்ட மத்தியஅரசும், அரசாங்கத்துக்கு(ஆரோக்கியம் பற்றி) ஆலோசனை கூறும் மதியில்லா அரசியல் ஆலோசகர்களும்(பாகம்2)
அன்புள்ள பதிவு வாசகர்களே,

என்டோ சல்பானை 177 நாடுகளில் தடை செய்ய ஒத்துக் கொண்டபோது இந்தியா மட்டும் இதை தடை செய்ய ஒத்துக் கொள்ளாததே, மேற்கண்ட தலைப்பை நான் வைக்கக் காரணம்.மேலும் என்டோ சல்பானின் வீரியம் கொண்ட வேறொரு பூச்சி மருந்தைக் கண்டு பிடிக்கும் வரை இந்த மருந்தை தடை செய்யக் கூடாது என்பதே இந்திய அரசாங்கத்தின் வேண்டு கோள்.


என்டோ சல்பான் பயங்கரத்தை இங்கே சற்று பாருங்கள்.நான் இதைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்திருந்தாலும்,இந்த மருந்தை பல வேதியியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதன் விளைவுகளைக் கண்டாலும்,நானும் இந்த விஷமூட்டப்பட்ட உணவுகளையே உண்ணும் கையறு நிலையிலேயே உள்ளேன்.


இதை கடந்த 40 வருடங்களாக விவசாயிகள் உபயோகித்து வந்ததின் பலன் அடுத்த நமது தலைமுறை பாவம் வெகுவாக கஷ்டப்படப் போகிறது(எனது மகள்கள் உட்பட). கடந்த போக அரிசி விளைச்சலில் தஞ்சாவூர் பகுதிகளில் தெளிக்கப்பட்ட என்டோசல்பானின் அளவு என்ன தெரியுமா? 2,75,000 லிட்டர்.இவையெல்லாம் எங்கே போகப் போகிறது தெரியுமா? நம் வயிற்றுக்குள்தான்!!!!!!!!!!!!!!!!!!!!






நன்றி பூவுலகு


என்டோ சல்பான் என்ற பூச்சி மருந்தை தெளித்ததன் விளைவை முதன்முதலில் கண்டு கொண்டது அரசோ அல்லது அரசு இயந்திரங்களோ இல்லை.ஒரு பொதுத் தொண்டு நிறுவனமே இதை ஆராய்ச்சி செய்து வெளிக் கொண்டு வந்தது.


கேரளாவில் என்டோசல்பான் தெளித்ததால் விளைந்த கடுமையான விளைவுகளை அனுபவித்ததை பார்த்த பின் அங்குள்ள கேரள அரசு இதை தடை செய்துள்ளது.


ஹிட்லர் விஷவாயுக் கூண்டுக்குள் அடைத்து பலரை கொன்றதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நாம் நம் நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிமக்கள் போல நம் அரசாங்கத்தாலேயே விஷம் புகட்டப்படுகிறோம்.நம் மரணத்தைத்தான் இந்த அரசாங்கம் விரும்புகிறதா??????????மரணம் என்றாலும் பரவாயில்லை, மேற்குறிப்பிட்டவாறு பல அங்க ஹீன குறைபாடுகளினால் துன்புற்று வாழும் வாழ்வை பரிசாக கொடுத்தால்?????????  


மேலும் நம் வயிற்றில் பால் வார்க்கும் விடயம்,தமிழ்நாட்டிலும் நம் தமிழக அரசும் இப்போது(நேற்று நடந்த விவசாய மானியக் கோரிக்கையின்போது) இந்த கடும் விஷமான என்டோ சல்பானை தடை செய்துள்ளது.வாழ்க!!!! தற்போதைய தமிழக அரசு.


அடுத்து இதே போன்ற விஷயத்தின்(விஷங்களின்) தொடர்ச்சியை அடுத்தடுத்த நோயணுகா விதிகள் பதிவுகளில் விவரிக்கிறேன்.

மேலும் எனது வலைப்பூ விடயங்களைப் P.D.F கோப்பாக மாற்றி சேமிக்க வலைப் பூவின் கீழ்ப்பக்கத்தில் ஒரு கருவிப்பட்டை இணைத்துள்ளேன்.மொழி மாற்றம் செய்து படிக்க வலைப் பூவின் மேல் பக்கத்தில் ஒரு கருவிப்பட்டையையும் இணைத்துள்ளேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

7 comments:

  1. பூச்சி மருந்துல இவ்வளவு கொடுமையா ?

    எந்த விசயத்திலும் கேரளா காரன் முன்னோடியா இருப்பாங்க
    ஆனா பாழா போன நம்மூரு அரசியல் வியாதிகள் நம்மள வாழ விடமாட்டாய்ங்க

    மொதல்ல என்டோசல்பான ஆதரிக்கிற அரசியல்வாதிகளை படுக்க வைச்சு
    கவுண்டமணி செந்திலுக்கு கருங்குரங்கு ரத்தத்த ஊத்துனா மாதிரி இந்த மருந்த
    ஊத்திவிடனும்

    ReplyDelete
  2. அன்புமிக்க திரு பாவா ஷெரீஃப் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!! ///மதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறும் மதியில்லா ஆலோசகர்களும்///என்ற இந்த பதிவுத் தொடர்ச்சியில் இன்னும் இது போன்ற பலவிடயங்களில் மத்திய அரசாங்கம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதையும்,அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக விவரிக்க இருக்கிறேன்.பார்த்து வரவும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. இயற்கை விவசாயத்தில் எந்த மேல் வருமானமும் அரசியல்வாதிகளுக்கு இருக்காது.. எனவே அதை அவர்கள் ஊக்குவிப்பது கடினமே..

    நமக்கு தெரிந்த வட்டாரங்களில் சற்று சிரமப்பட்டாவது இதை கொண்டுவந்தால் நன்று..

    பகிர்வுக்கு நன்றி..


    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  4. அன்புமிக்க திரு சங்கர் குருசாமி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!! ///மதிகெட்ட அரசாங்கமும், ஆரோக்கியம் பற்றி ஆலோசனை கூறும் மதியில்லா ஆலோசகர்களும்///என்ற இந்த பதிவுத் தொடர்ச்சியில் இன்னும் இது போன்ற பலவிடயங்களில் மத்திய அரசாங்கம் எப்படி நடந்து கொண்டிருக்கிறது என்பதையும்,அது என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதையும் தெளிவாக விவரிக்க இருக்கிறேன்.நாம் என்ன செய்தால் நலம் என்பதற்கு திரு நம்மாழ்வார் அவர்களின் கட்டுரைகளையும் அவரின் செயல்பாடுகளையும் விவரிக்க இருக்கிறேன்.
    அதன் மூலம் சாதிக்கப்பட்டுள்ள விடயங்களையும்,இனி செய்ய வேண்டிய விடயங்களையும்,விவரிக்க இருக்கிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. அன்பு ஐயா,
    தமிழவேள் வணக்கங்கள்.

    நாட்டை நச்சுச்சூழலில் இருந்து மீட்க இது போன்று விழிப்புணர்வு கட்டுரைகள் தொடர்ந்து வரவேண்டும். எல்லோரிடமும் போய்ச் சேரவேண்டும்.
    அன்பை மறவா,
    ந.தமிழவேள்

    ReplyDelete
  6. அன்புமிக்க திரு தமிழவேள் நளபதி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
    நாட்டை நச்சுச் சூழலில் இருந்து மீட்க நாம் அனைவருமே பாடுபட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.பல்லாயிரம் வருடங்களாக நம்முன்னோர்கள் அருமையாக பாதுகாத்து வைத்திருந்த நம் பூமியை கடந்த ஒரு நூற்றாண்டுக்குள் கடுமையாக பாழாக்கிவிட்டோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்குமே பாலிதின் பைகள் கிடையாது.மக்களும் இதை பரிபூரணமாக ஆதரிக்கிறார்கள்.நம் ஊரில் ஒரு சிறு பொருள் வாங்கினாலும் ஒரு பாலிதீன்(carry bag)பையாவது கேட்டு வாங்காமல் போக மாட்டார்கள்.இந்த மாதிரியான விழிப்புணர்வற்ற நிலை மாற வேண்டும்.இல்லையேல் இயற்கை நம்மை சீறி சீரழித்துவிடும்.இதை அனைவரும் உணர்ந்தால் நலம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்