மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, August 25, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 42)ஞானம் 1

ஞானம் என்றால் என்ன????(பாகம்1)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
ஞானம் என்றால் என்ன????ஞானம் அடைவது எப்படி??????நான் ஞானியாகிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது எப்படி????இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.அல்லது எழாமலும் இருக்கலாம்.


எனது நண்பர் ஒருவர் (பெயர் மாணிக்கம்) என்னிடம்"நான் பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன். இந்த பூமியில் நிறைய இன்பங்கள் இருக்கின்றன. அவற்றை அனுபவிக்கவே நான் இங்கே வந்துள்ளேன்.என்னால் தியானம் எல்லாம் செய்ய முடியாது. தியானம் ஏன் செய்ய வேண்டும்" இப்படிக் கேட்டார். 


இதைக் கேட்டவுடன் எனக்கு ஒரு வித்தியாசமான ஆளை சந்தித்துவிட்டேன் என்று எண்ணினேன். இதற்கு பதிலாக ஒரு சிரிப்பை மட்டும் பதிலாக உதிர்த்தேன்.அவர் மீண்டும் என்னைப் பார்த்து "நீங்கள் இரண்டாம் நிலையில் உள்ளீர்கள்,முதல் நிலையில் உள்ளவர்களுக்கு ஏதாவது சொல்லுங்கள்" என்றார்.நான் அதற்கு ஆதிபராசக்தி படத்தில் வருவது போல காளியாத்தா!!! மாரியாத்தா!!! என்று முழு சிரத்தையுடன் சொன்னால் போதும் இறைவனை அடையலாம் என்றேன்.அவருக்கு இது முழு திருப்தி!!!!


இது போதுமா????? போதாது எனில், எது சரி?????.எப்படி இறைவனைக் காணலாம்.அவருடன் அளவளாவலாம்.இறைவன் ஏற்படுத்திய விதிகளை அவரே தளர்த்துவாரா????இறைவனுடன் எப்படிப் பழகலாம்???இறைவனுடன் இறைவனுக்கு வேலைக்காரன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு மகன் போலப் பழகலாமா????இறைவனுடன் இறைவனுக்கு நண்பன் போன்று பழகலாமா???? இறைவனுடன் இறைவனுக்கு சீடன் போலப் பழகலாமா???? கேள்விகள் பல???? விடைகள் கீழே கிடைக்கலாம்!!!!!


இந்த பட ஒளிக்காட்சியை காணுங்கள்!!!!




என் நண்பரோ பிறந்து கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன் என்கிறார்.நந்தனாரோ பிறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.அப்படிப் பிறந்தாலும் இறைவா உனை மறவா வரம் வேண்டும் என்று கேட்கிறார்.எது சரி!!!


சரியை மார்க்கம்.(தாசமார்க்கம்)
எளிய நல் தீபம் இடல் மலர்கொய்தல்
அளியின் மெழுகல் அதுதூர்த்தல் வாழ்த்தல்
பளிபணி பற்றல் பன் மஞ்சனம் ஆதி
தளிதொழில் செய்வது தான்தாச மார்க்கமே
                         (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று தீபம் இடுதல்,கோவில் நந்தவனத்தில் மலர் கொய்து,மாலையாக கோர்த்து இறைவனுக்கு அர்ப்பணித்தல்,கோவிலை தண்ணீர் கொண்டு மெழுகி சுத்தம் செய்தல்,தூர்த்து சுத்தம் செய்தல், இறைவனை வாழ்த்திப் பாடுதல், மற்றும் உள்ள கோவில் காரியங்கள் அத்தனையும் செய்தல், திருமஞ்சனம்,இறைவனுக்கு வேண்டிய அபிஷேக ஆராதனைக்கு வேண்டியவைகளை செய்து,கோயில் தளிகைக்கான பிரசாதத்துக்கு ஏற்பாடு செய்தல்,இறைவனின் அடியார் மற்றும் இறை திருவடிவம் கண்டு பணிதல் ஆகியவை அனைத்தும் சரியை மார்க்கம் ஆகும்.


இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருநாவுக்கரசர். இந்த சரியை மார்க்கத்தை தாச மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு எஜமானனுக்கும் ஒரு வேலைக்காரனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது தாச மார்க்கம் என அழைக்கப்படுகிறது.



கிரியை மார்க்கம்.(சற்புத்திர மார்க்கம்)






பூசித்தல் வாசித்தல் போற்றல் செபித்திடல்
ஆசற்ற நற்றவம் வாய்மை அழுக்கின்மை
நேசித்திட்ட ன்னமும் நீர்சுத்தி செய்தல் மற்(று)
ஆசற்ற சற்புத்திர மார்க்கமாகுமே.
                      (திருமந்திரம்)
இறைவனின் திருக்கோயிலுக்குச் சென்று இறைவனுக்கு பூசனைகள் செய்தல், இறைவன் புகழையும்,அவன் நாமங்களையும், பக்தி கீதங்களையும் வாசித்தல், இறைவனைப் போற்றுதல், மந்திரங்களைச் செபித்தல், குற்றங்களற்ற நல்ல தவம் புரிதல், வாய்மையுடன் இருத்தல், உடலிலும் மனத்திலும் அழுக்கின்றி இருத்தல், மன நேசிப்புடன் தகப்பனுக்கு சோறிட்டு கவனிப்பது போல், கோவில் தளிகையிட்டு இறைவனுக்கு நீர்விளாவி கவனிப்பது ஆகியவை கிரிகை மார்க்கமாகும்.

இந்த மார்க்கத்துக்கு எடுத்துக்காட்டு திருஞான சம்பந்தர். இந்த கிரியை மார்க்கத்தை சற்புத்திர மார்க்கம் என்றும் அழைப்பர்.இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு தகப்பனுக்கும் ஒரு மகனுக்கும் இருக்கும் பாவனை போல இருப்பதால் இது சற்புத்திர மார்க்கம் என அழைக்கப்படுகிறது.





அடுத்து இதே தலைப்பில் சித்தர் விஞானம் 43ல் ஞானம் என்றால் என்ன????(பாகம் 2)ல் இதன் தொடர்ச்சியைப் பார்க்கலாம் .






அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

5 comments:

  1. நல்ல விளக்கங்கள்...

    பகிர்வுக்கு நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அன்புமிக்க திரு சங்கர் குருசாமி அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
    பல ஞான விடயங்களை தெளிவாக விவரிக்க எண்ணியிருக்கிறேன்.இறைவன் சித்தம் எவ்வாறோ அவ்வாறே நடக்கட்டும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. ஐயா,

    வணக்கம்,
    தங்களுடைய பதிவுகள் அனைத்தும் அருமை, தவறான வழிமுறைகள் மக்களை விரைவில் சென்றடைவது போல, நல்ல விஷயங்கள் அவ்வளவு விரைவாக சென்றடைவதில்லை, காரணம் உண்மை எப்போதும் எளிமையாக இருப்பதால் இருக்கலாம்,
    தன்னலம் கருதாத தங்களை போன்ற பெரியோர்களின் நல் வழிகாட்டலில் வாழ்க்கையை நடத்த எல்லாம் வல்ல இறைவன் தங்கள் மூலம் எங்களுக்கும் அருள் புரியட்டும்.

    குருவருள் காக்க,
    சரவணன்,
    நன்றி,

    ReplyDelete
  4. அன்புமிக்க திரு குருவருள் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!! இறைவனுக்கு நன்றி,இத்தனை விடயங்களில் விற்பன்னனாக்கிய இறைக்கு என் நன்றி,அவனுக்கு தெரியும் எதை என்மூலம் வெளிப்படுத்த வேண்டும் எதனை வெளிப்படுத்தக் கூடாது என்பது தெரியாதா?????புரிந்தவர் புரியட்டும் புரியாதவர்கள்,புரியாதே இருக்கட்டும் என்பதே இறைவன் சித்தம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. அற்புதமான விளக்கம்.

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்