மொழி பெயர்ப்புக் கருவி

Saturday, July 24, 2010

குருநாதரின் பிறந்த நாளில் கலந்து கொண்ட சித்தர்கள்மேலே கண்ட புகைப்படம் எனது குருநாதர் உயர்திரு சர கோ பார்த்தசாரதி அவர்களின் பிறந்த நாளான சித்திரை மாதம்,சித்திரை நட்சத்திரத்தில்,சித்திரா பவுர்ணமியன்று எடுக்கப்பட்டது.

மேற்கண்ட புகைப்படத்தை பெரிதாக்கிப் பார்த்தால் மேல் வரிசையிலுள்ள கருப்புச் சட்டைக்காரரின் வலப்புறம் நீல நிற ஒளியும்,அவரின் வலப்புறம் இருப்பவர்( மூன்றாவது இருக்கும் வெள்ளைச் சட்டைக்காரரின் இடப்புறம் மஞ்சள் ஒளியும் காணப்படும்.

சித்தர்களும் இங்கே வந்து நமக்கு ஒளி ரூபத்தில் காட்சியளிப்பதையே காட்டுகிறது.மேலும் சித்தர்கள்,உயர் நிலை ஆன்மாக்கள்,குல தெய்வங்கள்
ஆகியவர்களின் வடிவங்கள் வட்ட வட்டமாக ஒளி வடிவமாக புகைப்படங்களில் தெரிவார்கள்.

இவை யாவும் அவர்களை ,அவர்களே, உணரா வண்ணம் காத்து வருபவை!

அன்பிற்கும், மரியாதைக்கும், மதிப்பிற்குரிய தொல் திருமாவளவன் அவர்கள் 04-06- 2010 அன்று ஆலங்குளத்தில் உள்ள சங்கீதா திருமண மண்டபத்தில் வைத்து நடந்த சிபியோ அறக்கட்டளை சார்பாக ஏழைகளுக்கு உதவும்  நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

    இந்த புகைப்படத்தில் தொல் திருமாவளவன் அவர்களின்  மேல்புறத்தில் சிவப்புச் சட்டையுடன் இருப்பவர் எனது நண்பர்.அவரது மார்புப் பகுதியில் ஒன்றும்,மேல் வயிற்றுப்பகுதியில் ஒன்றும் ,அவரது வலது கைப்பகுதியில்
ஒரு வட்டமும் தெரிகிறதல்லவா! அவையே   தொல் திருமாவளவன் அவர்களைக் காத்து வரும் உயர் நிலை ஆன்மாக்கள்.

இவற்றின் புனிதத் தன்மைக்கேற்றவாறே  அவற்றின் பிரகாசம் இருக்கும்.அவரது வலது கைப்பகுதியில் இருப்பது ;அவரது மார்புப் பகுதியில்இருப்பதைவிட அதிக பிரகாசத்துடன் காணப்படுகிறது.

இது போன்று ஞானத்தை நாடும் நம்மிடமும் சித்தர்கள்,உயர் நிலை ஆன்மாக்கள்,குல தெய்வங்கள் ஆகியோர்கள்.இருந்து  கொண்டே இருக்கிறார்கள். நாம் அவர்களின் இருப்பை உணராத அளவிற்கு அஞ்ஞானத்தில் உள்ளோம்.


அஞ்ஞானம் அகன்று ஞானக்கனல் எழ சித்தர்களைப் போற்றுவோம்!

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்