மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, July 22, 2010

இயற்கையை சரிசெய்ய இனி சித்தர்களால் மட்டுமே முடியும்


பெண்கள் ஸ்டிக்கர்பொட்டினை பரவலாகப் பயன்படுத்திவருவதால் ஏற்படும் தீங்குகளைப் பார்த்தோம்.அதே போல்,மாறிவிட்ட உணவுப்பழக்கம்,நஞ்சாகிவிட்ட உணவு,மன இறுக்கமாகிவிட்ட தினசரி வாழ்க்கை இவற்றினால் ஆண்களின் ஆண்மைத்தன்மை குறைந்துவருகிறது.

உடலில் சேரும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் வேலை.பெரும்பாலும் யூரியாவே மனித உடலிலிருந்து வெளியேறுகிறது.எனவே,அதை யூரின் என்றழைக்கிறார்கள்.அதே சமயம், யூரியா போன்ற ரசாயன உரங்கள் கலந்த உணவைச் சாப்பிடும் நாம் யூரியாஉணவையே சாப்பிட்டுவருகிறோம்.இதனால்,மனித உடலை பாதுகாக்கும் சிறுநீரகம்,இன்று தன்னையே பாதுகாக்க போராடிவருகிறது.

அக்கு பக்சர் தத்துவங்களின்படி பாலின உறுப்புக்களையும்,சிறுநீர் சம்பந்தப்பட்ட உறுப்புகளையும் (GENITO-URINARY PARTS)பார்த்துக்கொள்வது சிறுநீரகமே!அந்த சிறுநீரகமே பாதிக்கப்படும் போது அது இனப்பெருக்க மண்டலத்தை அம்போ என்று விட்டுவிடுகிறது


மேலும்,நாகரீக மனிதனின் கண்டு பிடிப்பான் பாலிதின் பொருட்களின் பயன்பாடு காரணமாக நிலத்தடி மாசு,நிலத்தடி நீர் குறைவது போன்றவை மட்டுமின்றி,அவை எரிக்கப்படும்போது வெளியாகும் டையாக்ஸின் என்னும் வேதிப்பொருள் காற்றையும் அசுத்தமாக்கி, ஆண்களின் ரத்தச்சிவப்பணுக்களையும்,உயிரணுக்களையும் கொன்று வருகிறது.

புன்மையான அறிவுள்ள மனிதன்,அதீத விஞ்ஞானியாக தன்னைக் கருதிக்கொண்டு, ஒன்றை அழிக்கவோ,உண்டாக்கவோ ஒரு வழியைக் கையில் எடுக்கும்போது, இன்னொரு பெரிய அபாயமான விளைவுக்கு வித்திட்டுவிடுகிறான்.பிறகு நாம் இது வரை கடைப்பிடித்து வந்ததெல்லாம் தவறு என்று புலம்புவதும் வாடிக்கை யாகிவிட்டது.


மனித உற்பத்திக்காக இறைவன்,ஆண்களின் விந்துப்பையை உடலுக்கு வெளியே,இரண்டு தொடைகளுக்கு நடுவே அமைத்திருக்கிறார்.இதன்மூலம்,ஒவ்வொரு ஆணின் உடலின் சராசரி வெப்பத்தை விடவும்,ஒன்று அல்லது இரண்டு டிகிரி குறைவான வெப்பமே விந்துப்பையின் அருகில் இருக்கும்.இதன்மூலம்,விந்தணுக்களின் எண்ணிக்கையும்,விந்துப்பையும் பாதுகாப்பாக இருக்கும்.


இந்நிலையில்,இன்று பேண்ட்டும்,ஜீன்ஸீன் நவநாகரீக ஆடையாகிவிட்டதாலும்,நவீன உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதாலும்,விந்துப்பைகளின் வெப்பம் அதிகரித்து
ஆண்மைக்குறைவை விரைவாக்கி வருகின்றன.நமது பாரம்பரிய உடைகளான வேட்டி,லங்கோடு(அக்காலத்து உள்ளாடை) அணியும்வரை இந்தப்பிரச்னை வந்ததில்லை;லங்கோடு அணிந்துவந்ததுவரை இந்தியாவில் குடலிறக்கநோய் வந்ததில்லை; லங்கோடு மறைந்தது;குடலிறக்கம் பல லட்சம்பேர்களைக் கொன்று வருகிறது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில்,இன்றும் இந்தியாவில் துறவிகளின் உள்ளாடையே லங்கோடுதான்.லங்கோடு அணிவது இந்துதர்மத்தின் வானப்பிரஸ்தத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் முக்கியமான ஒன்றாகும்.

தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் 18 முதல் 30 சதவீதம் வரை இந்தியர்கள் ஆண்மைக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்த எண்ணிக்கை வெகுவிரைவில் 50 முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்கும் என ஒரு மருத்துவ ஆராய்ச்சிக்குறிப்பு தெரிவிக்கிறது.இது உள்ளூர் பிரச்னை அல்ல;உலகளவிலான பிரச்னை.

சில மாதங்களுக்கு முன்பு,ஒரு அமெரிக்க மருத்துவ ஆய்வின்படி,கி.பி.2050 ஆம் ஆண்டில் உலகின் வாழும் அனைத்து ஆண்களும் மலடர்களாகிவிடுவர் என தெரிவிக்கிறது.

இந்நிலையில்,நமது முன்னோர்களாகிய படைத்தல்,காத்தல்,அழித்தல் ஆகிய முத்தொழில் புரியும் வல்லமை கொண்ட,அஷ்டமாசித்தாடிய சித்தர்களால் மட்டுமே இந்தச் சீரழிவை சரிசெய்து ந்மது சந்ததிகளையும், மனித குலத்தையும்,நமது பூமியையும் காப்பாற்றிடமுடியும்.

ஆனால் சித்தர்களின் பேரறிவினால் கண்டறிந்த சித்த வைத்தியம்,யோகம்,ஞானம்,ரச வாதம்,ஞான சரநூல், மரணமில்லாப் பெரு வாழ்வு,ஆகியவற்றை மக்களுக்கு அளித்து; மக்கள் தொண்டே மஹேசன் தொண்டு என்று நம்மோடு வாழ்ந்து, நம்மோடு என்றும் ஊடாடி நிற்கும் சித்தர் அடி போற்றி !அவர்களின் கருணையைப் பெற்று மனித குலம் காப்போம்!

Post Comment

4 comments:

 1. சித்தர்மலைக்குச்(நீங்கள் சதுரகிரி என்பீர்கள்) சென்றுள்ளீர்களா?
  சிற்றிடம் பற்றிட வெற்றிடம் சுற்றிட
  மற்றிடம் கற்றிட
  பற்றிடம் பற்றிடா
  சுற்றிடும் வெற்றிடம் பற்றிடும் சிற்றிடம்
  வெற்றிடம்..வெற்றிடம்..வெற்றிடம்..

  என்னிடம் நிறைய சித்தர் பாடல்கள் உள்ளன..பொருள் அறியா..

  ReplyDelete
 2. திரு ராவணன் ஐயா அவ்ர்களே,
  சித்தர் மலையான சதுர கிரியில்,திருகுக்கல் மொட்டை,தவசிப்பாறை,கண்ணாடிப் பாறை,யம புரக் கானல்,மேலும் பல இடங்களுக்கும் சென்று உள்ளேன்.பல மூலிகைகளையும் தரிசித்துள்ளேன்.அவற்றில் சில பயன் படுத்திப் பார்க்கவும் செய்துள்ளேன்.இன்னும் பல எழுதிய பின் இவற்றுக்கு வருகிறேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  அன்பன்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. vanakkam iyya poombalai enra mooligai engay erukkirathu enru ungalukku therinthal thayavu seythu sol;lvum

  ReplyDelete
 4. தகவலுக்கு நன்றி

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்