மொழி பெயர்ப்புக் கருவி

Monday, July 19, 2010

ஸ்டிக்கர் பொட்டால் பெண்களுக்கு ஏற்படும் ஆன்மிகபலக் குறைவும் உடல் நலக்குறைவும்(பாகம்1)


திலர்தவர்மம் என்பதே சுடரொளிக்காலம்

பெண்களைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட மங்கலம் பொருந்திய குங்குமம் தற்போது ஏற்பட்டுள்ள கலாச்சார சீரழிவால் ஸ்டிக்கர் பொட்டாக மாறி பெண்களை மட்டும் அல்ல எதிர்கால சந்ததிகளையே கேள்விக் குறியாக்கியுள்ள அவலம் பற்றிய ஒரு கட்டுரையே இது.

இதில் பல அதீத விசயங்களை குறிப்பிட்டுள்ளேன்.நடு நெற்றியில் உள்ள லலாட மத்தியை(புருவமத்தி என்றும் அழைக்கப்படும்)நெற்றிக்கண் என்றும் அழைக்கப்படும்.இதன் மூலம் திபேத்திய லாமாக்கள் மற்றவர்களின் ஆரா என்ற ஒளியுடலை காண உபயோகிக்கிறார்கள்.எனவேதான் சிவனுக்கு இந்தக் கண்ணை வெளிப்படையாக தெரியும் வண்ணம் படங்களாக வைத்துள்ளார்கள்


பழங்காலத்திலும் இக்காலத்திலும் மந்திரவாதிகள்,ஆண்களையும் பெண்களையும் வசியம் செய்து மயக்கி கொண்டு செல்ல நெற்றியின் நடுவே இருக்கும் ஆக்கினைச் சக்கரத்தின் மூலமாகவே வசியம் செய்யும் சக்தியை செலுத்துவார்கள்.மேலும் அந்த பொட்டு வைக்கும் இடம் பீனியல் மற்றும் பிட்யூட்டரி சுரப்பிகளின் கட்டுப்பாட்டு புள்ளியாக அக்குபங்சரில் (EXTRA-1 IN DU-MERIDIAN)(DU AND REN மெரிடியன்களைப் பற்றி பின்னொரு கட்டுரையில் காண்போம்)பயன்படுத்தப்படுகிறது. 

மேலும் அந்தப் புள்ளியை சித்தர்கள் திலர்த வர்மம் என வர்மப்பிரிவில் குறிப்பிடுகின்றனர்.யோக சாதன முறைகளில் இதை ருத்ர க்ரந்தி என அழைக்கப்படுகிற்து.படத்தில்

காண்க. `ஆக்கினைச் சக்கரம் என்றால் கட்டளையிடும் சக்கரம் என்று பொருள்.இந்த ஆக்கினைச் சக்கரத்தால்தான் ஹிப்னடிசம் , மெஸ்மரிசம், மனோவசியம் என்ற அறிதுயில், ஏன்? செய்வினை, ஏவல்,பில்லி சூன்யம்(PHYCHIC ATTACKS&EVIL SPIRITS ATTACHMENTS)போன்றவற்றையும் செயல்படுத்த முடியும். 


மேலும் clairvoyance என்ற தொலைவில் உணர்தல் போன்றவற்றிற்கும்,அதிகமாக உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய்களைக் களையவும்,வந்த நோய்களை கட்டுப்படுத்தவும் இந்த ஆக்கினைச் சக்கரம் நல்ல நிலையில் இருப்பது அவசியம்


ஆக்கினைச் சக்கரம் யோக சாதன முறைகளிலும் முக்கிய இடத்தை வகிக்கிற்து. தியான முறைகளின் மூலமாக முக்தியை அடைவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

எனவே பெண்களை இது போன்ற தொல்லைகளிலிருந்து காப்பாற்றவும்

ஏற்படுத்தப் பட்டதே இந்த மங்கலம் பொருந்திய குங்குமம்.நல்ல மஞ்சளையும் வெண்காரத்தையும்(சிலர் நன்றாக ஒட்டுவதற்காக நல்லெண்ணெயும் சேர்ப்பார்கள்) சேர்த்தரைத்து மங்கல மந்திரங்களை ஓதி
செய்யப்படும் குங்குமம், பெண்களைப் பல விதஙகளிலும் காக்கிறது.
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் உடலிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளுக்கு கட்டுப்பாட்டுக் கட்டளைகளை,இரத்தத்தில் வேறு வேறு வகையான சுரப்பு நீர்களை கலப்பதன் மூலம் செயல்படுதுகிறது.

மேலும் அந்த சுரப்பிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது.சுருக்கமாகச் சொன்னால் உடலின் முழு செயல்பாடும் பிட்யூட்டரி சுரப்பியின் கட்டளையின்படியே நடக்கும்.இப்படிப்பட்ட சுரப்பிகளின் தலைவனை கட்டுப்படுத்தும் கட்டளைச் சக்கரத்தை குளுமையாக வைத்திருக்கவே குளுமையை கொடுக்கும் மஞ்சளை வெண்காரத்துடன் சேர்த்து சிவப்பாக மாற்றி உபயோகிக்க சித்தர்கள் கொடுத்துள்ளார்கள்.(சிவப்பாக மாற்றி உபயோகிக்கும் ரகசியம் பின்னொரு கட்டுரையில் காண்போம்).
பிட்யூட்டரி சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்களுள் ஒன்று TSH (THYROID STIMULATING HARMON)தைராய்டு சுரப்பியை செயல்படுத்த வைக்கும்.தைராய்டு சுரப்பியில் இருந்து சுரக்கும் சுரப்பி நீர்கள் இரண்டும்(T3,T4) பெண்களின் மாதாந்தர விலக்கை(MONTHLY PERIODS) நிர்ணயம் செய்கிறது.இதே சுரப்பு நீர்கள்தான் ஒரு பெண்ணை முழுமையான பெண்ணாகவும் வைத்திருக்கும் எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பையும் நிர்ணயம் செய்யும்.


ஒரு பெண் எந்த நட்சத்திரத்தில் தனது முதல் ருதுவான மாதாந்தர விலக்கை(MONTHLY PERIOD) அடைகிறாளோ அதே நட்சத்திரத்தில் மீண்டும் மீண்டும் 27 நாட்களுக்கு ஒரு முறை மாதாந்தர விலக்கானால் மட்டுமே அவர்களது ருது ஜாதகமே வேலை செய்யும்.ருது ஜாதகமே பொய்யாகப் போகும் நிலைமையை இந்த ஸ்டிக்கர் பொட்டுக்கள் உருவாக்கியுள்ளன.


தற்போதுள்ள நிலையில் தைராய்டு சுரப்பி பிரச்சினைகளுக்கு எல்ட்ராக்ஸின் போன்ற மருந்துகளை ஆயுள் முழுவதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.இதன் பின் விளைவுகள் என்னென்ன என்று இங்கு சொல்லாமல் விடுகிறேன்.எஸ்ட்ரோஜன்(ESTROGEN)சுரப்பு குறைவதாலும் உடலுக்கு குளுமை தரும் மஞ்சளை தேய்த்துக் குளிக்காததாலும் உடலெங்கும் ரோமம் அதிகமாக வளர்ந்து பெண்கள்,ஆண் தன்மை கூடுவதால் மலட்டுத் தன்மைக்கும் ஆளாக நேரிடுகிறது.இதனால் எதிர்கால சந்ததிகள் பிறப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.அவையெல்லாம் சித்தர்கள் அருளால் தீரவே இந்தக் கட்டுரை.


எனவே ஸ்டிக்கர் பொட்டை தவிர்த்து குங்குமம் இட்டு மங்கலம் காப்பதுடன் நம் நலமும்
காப்போம்.

Post Comment

8 comments:

 1. தங்களின் மின்னஞ்சலுக்கு நன்றி... அரிய பல தகவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறேன்.. வாழ்த்துக்கள்.!

  ReplyDelete
 2. மச்சமுனி ப்ளாக் எழுத்தாளர்க்கு வணக்கம்

  நல்ல கருத்துகள் நண்பரே

  இக்காலபெண்கள் வேகமாக இருக்கிறார்களே தவிர இது போன்று நம் முன்னோர் கொடுத்து சென்ற நல்ல பழக்கவழக்கம் எல்லாம் காணாமல் போய்கொண்டு இருக்கிறது.

  ஆண்களுக்கும் இதுபோன்று நல்ல கருத்து இருந்தால் உடனே அனுபவும் எதிர்பார்ப்புடன்..,

  பழனிமணி
  திருச்சி

  ReplyDelete
 3. வணக்கம் ,
  உங்களது பதிவு மிகவும் பயனளிப்பதாக உள்ளது . ஆனால் இன்று போலி இல்லாத குங்குமம் கிடைப்பது மிக அரிதாக உள்ளது . அதற்க்கு ஏதும் வழி இருந்தால் நன்றாக இருக்கும்

  ReplyDelete
 4. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும்,திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கொவிலிலும்,சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலின் அருகே ஒரு ஆன்மீக அன்பர் இது போன்ற குங்குமம்(நாம் பொருட்கள் கொண்டு சென்றால் சொற்ப கூலிக்கு அரைத்து தருகிறார்) கிடைக்கும்.தொட்டு முகர்ந்து பார்த்தால் நல்ல மஞ்சள் மணம் இருந்தால் மட்டுமே நல்ல குங்குமம்.

  ReplyDelete
 5. குருவே சரணம்,

  கபாலீசுவரர் கோயில் அருகே தாங்கள் குறிபிட்டுள்ள அன்பரின் முகவரியும், அலைபேசியும் எண்ணும் கிடைக்குமா?

  குருவருள் துணைநிற்க,
  இப்படிக்கு,
  சரவணன்,
  நன்றி,
  மின்னஞ்சல்: saravananagni77@gmail.com

  ReplyDelete
 6. அன்புமிக்க திரு குருவருள் திரு சரவணன் அவர்களே, கருத்துரைக்கு நன்றி!!!!!
  கபாலீசுவரர் கோயில் அருகே ஒரு நண்பர் அழைத்துச் சென்று காட்டினார்.எனக்கு சென்னையில் முகவரிகளோ மற்ற விடயங்களோ அவ்வளவு குறிப்பாகத் தெரியாது.திரு தமிழவேள் அவர்களை நாடினால் இது விடயமாக பலன் இருக்கும்.அவர் சென்னையில்தான் உள்ளார்.எனது சீடரும் கூட.அவரைப்பற்றி ஒரு இடுகை இட உள்ளேன்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 7. குருவே சரணம்,

  தாமதமான இடுகைக்காக மன்னிக்கவும்,
  இறைவழி மருத்துவர் திரு. தமிழவேள் அவர்களிடம், தாங்கள் சொன்னது போல் குங்குமம் பற்றிய தகவலுக்காக வேண்டிக்கொள்கிறேன்.

  எனக்கு நீண்ட காலமாக இருந்த ஒற்றை தலைவலிக்கு தினமும் இருமுறை குளிர்ந்த நீரில் குளித்தல் மூலம் மிகவும் எளிமையாக தீர்வளித்தார். இதற்கு முன்பு தினமும் வெந்நீரில்தான் குளிப்பேன். தினமும் தலைக்கு குளித்தால் தலைவலி வந்து விடும். அதனால் வாரம் இருமுறை மட்டுமே தலைக்கு குளிப்பேன், கடந்த வாரம்தான் அவரை மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு(தற்போது நைஜீரீயாவில் இருப்பதால் நேரில் சந்திக்க இயலவில்லை) இந்த தீராத நோயில் இருந்து குணமடைந்தேன், உச்சகட்டமாக நேற்று நீச்சல் குளத்தில் நான்கு மணி நேரம் குளித்தும் தலை வலி வரவில்லை. என்னாலேயே இதை நம்ப முடியவில்லை.

  எல்லாம் தங்களின் வழிகாட்டலிலும், இறைவழி மருத்துவர் திரு. தமிழவேள் அவர்களின் அறிவுரையாலும் கிடைத்த குணநலம்,

  இக்காலத்தில் நேரிடையாக பெரும் மருத்துவ சிகிச்சை குணமளிப்பதே சந்த்தேகத்திற்குரியது,
  இதில் நான் ஒரு மின்னஞ்சல் மற்றும் அலைபேசி வழியான அறிவுரை மூலம் குணமடைந்தது என்னக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

  என்னுடைய நீண்ட(கிட்டத்தட்ட பத்து வருடங்களாக) நாளைய ஒற்றை தலிவலிக்காக ஒரு பக்க காதை அறுத்ததுகொண்டதுதான்(அறுவை சிகிச்சை) மிச்சம்.

  தங்களுடைய இந்த சீரிய பணி செவ்வனே தொடர எல்லாம் வல்ல இறைவனின் திருவடி பாதங்களை வணங்கி வேண்டிகொள்கிறேன்.

  குருவருள் காக்க,
  சரவணன்,
  நன்றி,

  ReplyDelete
 8. இந்த கட்டுரையை படித்து தெளிய வேண்டும் என்று பெண்கள் எண்ணினால் கூட தூய்மையான குங்குமம் கிடைப்பது அரிது தான் அன்பரே....

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்