மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, December 20, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 51)கலிக்கம் 2


இதற்கு முந்தைய பதிவு சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 50) கலிக்கம் 1 படித்த பின் இந்தப் பதிவையும் சேர்த்துப் படிக்கவும். 


கலிக்கம்:- கண்ணில் விடும் மருந்துகளால் உடல் நோய்களை குணமாக்குதல்.

இங்கு கண்ணில் விடும் மருந்துகளை (கலிக்கம்) பார்ப்போம்.
இந்தக் கண்ணில் விடும் மருந்துகள் கண்ணில் உள்ள நோய்களைக் குணமாக்குவததோடு,இரத்த ஓட்டத்தில் உடனடியாகக் கலப்பதன் மூலம் உடலில் ஏறிய விஷம், வர்மம்,வாதம் 80,நெடு மயக்கம்(கோமா),மூளையில் ஏற்படும் இரத்த உறைவு(அதன் மூலம் ஏற்படும் பக்க வாதம்) ஆகியன தீரும்.


ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான மருந்துகளும் உள்ளன.மொத்தமாக நமது நலத்தைப் பெருக்க (நோயணுகா விதி) நோயணுகவிடாமல் தடுக்க உள்ள வழிமுறைகள் என்னும் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள கலிக்கத்தை இங்கே தருகிறேன்.


அஞ்சனம்:- அஞ்சனம் என்பது கண்களுக்கு தீட்டும் மையே!!!
பார்வதி தேவியை,அஞ்சன மையிடும் அம்பிகே!!!  என்றழைப்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு.பெண்களும்,ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளலாம். 


அஞ்சனக்கல் என்ற சுறுமாக்கல்லை பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள்,கண் பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும்.
எனது உறவினரும் பலருக்கு ஆன்மீக குருவாகத் திகழும் ஆன்மீகச் செம்மல் அமரர் திரு மிஸ்டிக் செல்வம் அவர்களும் இதைப் பற்றி தமது ஆன்மீகத் திறவுகோல் என்ற நூலில் விவரித்துள்ளார்.


முஸ்லீம் அன்பர்கள் ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த சுருமாவை கண் பட்டைகளில் போட்டுப் பின் தொழுகை செய்வதை கடமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.


கண்மை தயாரிக்கும் முறை:- வெள்ளைக் கரிசலாங்கண்ணியின் இலைகளைத் தண்ணீர் சேர்க்காமல் இடித்துச் சாறு எடுக்கவும்.25 செமீ நீள அகலமுள்ள வெள்ளைத் துணியை எடுத்து அந்தச் சாற்றில் ஓரிரு முறைகள் சாறு காலியாகும் வரை உலர்த்தி,மீண்டும் தோய்த்து மீண்டும் உலர்த்தி,பின் அந்தத் துணியை உருட்டி திரியாகச் செய்து கொள்ள வேண்டும்.பின் விளக்கெண்ணெயை ஊற்றிய விளக்கில்,மேற்படி கரிசலாங்கண்ணிச் சாறு ஊட்டிய திரியைப் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.


 ஒரு புது மண் சட்டியில் தோல் நீக்கிய சோற்றுக் கற்றாழைச் சாற்றை ஐந்து தடவை,தடவி காயவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.அந்தச் சட்டியை அந்த விளக்கின்மீது மூன்று புறமும் செங்கலிட்டு காற்று உள்ளே புகுந்து விளக்கு எரியுமாறு கவிழ்த்து வைத்துவிடவும்.அந்த விளக்கு தொடர்ந்து எரியுமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.


மறுநாள் அந்த கற்றாழை தடவிய புதுச் சட்டியில் படிந்திருக்கும் கரியை வழித்தெடுத்து போதுமான அளவு சிற்றாமணக்கெண்ணெய் விட்டுக் குழைத்து வெள்ளிச் சிமிழில் பத்திரப்படுத்தி கண்ணுக்கு தீட்டி வர கண் ரோகங்கள் அனைத்தும் குணமாகும்.கண்ணொளி ஒரு காதந் தூரம் காணும்.அதாவது ஒரு காத தூரம் இருக்கும் பொருள்களும் கண்ணுக்குத் தெரியும்.


இப்படிப்பட்ட வெள்ளைக் கரிசலாங் கண்ணி,மஞ்சள் கரிசலாங் கண்ணி,மற்றும் பொன்னாங் கண்ணி, ஆகியவற்றுக்கு சோழர்கள் காலத்தில் வரி விதிக்கப்பட்டது.அதற்கு கண்ணிக் காணம் என்று பெயர்.வரி செலுத்தினாலும் இதன் அருமை மற்றும் பெருமை எண்ணி அக்காலத்தில் உபயோகித்தார்கள். இன்றோ நாம் இலவசமாய்க் கிடைத்தாலும் உபயோகம் அறியாது,இதன் அருமை மற்றும் பெருமை தெரியாது வெளிநாட்டு விஷங்களை மருந்தென்று பெருமை பேசித் திரியும் அவலம் நேராது.


வீட்டில் உள்ள பேரில் பாதிப் பேராவது கண்ணாடி போடாமல் இருப்பதில்லை.காரணம் இது போன்ற மிக நல்ல வழக்கங்கள் வழக் கொழிந்து போனதே!!!கண்மைக்கு போய் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்று கேட்பது புரிகிறது????
கண்ணில் போடும் கலிக்க மருந்துகளால், உடலில் உள்ள ராஜ கருவிகளான ஈரல், மண்ணீரல், சிறு நீரகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளும்,குற்றங்களும்,நஞ்சுகளும் நீங்கி உடல் நோயினின்றும் நீங்கி புத்துணர்வு பெறும்.


அக்குபஞ்சரில் சோடா புட்டிக் கண்ணாடி மாட்டிக் கொண்டு உள்ள நபரை (லிவர் மேன்)ஈரல் குறைபாடுள்ள மனிதன் என்பார்கள்.இப்போது புரிகிறதா கண்ணுக்கும் ஈரலுக்கும் உள்ள தொடர்பு?????


பதிவு மிகப் பெரியதாகப் போய்விட்டது.சொல்ல நிறைய விடயம் இருப்பதால் பதிவை மூன்றாகப் பிரித்து தொடர் பதிவாக பதிவிடுகிறேன்.அடுத்த பதிவு சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 52)கலிக்கம் 3 ஐ சேர்த்துப் படிக்கவும். 
   
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

10 comments:

  1. குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணி
    மை எடுத்து புருவத்திற்க்கு
    தடவ அடர்த்தியாக வளரும்
    என்று எனது தாயார் எனக்கும் செய்ததாக
    சொன்னார்கள்

    பார்வை தெளிவாகும் என்றும் தெரிந்து கொண்டேன்

    நன்றி ஜி

    ReplyDelete
  2. தங்கள் இபோழுதெல்லாம் பதில்
    அளிப்பதில்லயே ???

    தங்கள் பதிலை பார்த்தால் உங்களுடன்
    நேரில் பேசுவது போன்று இருக்கும்

    தயவு செய்து வாசகர்களின் பின்னூட்டத்திற்கு
    பதில் தாருங்கள் சாமீ ஜி

    நன்றி

    ReplyDelete
  3. பாவா ஷெரீஃப் அவர்களே,
    அவசியம் ஏற்பட்டால் பதில் கொடுக்கிறேன்.உங்கள் கேள்விகளுக்கே பதில் தந்துகொண்டுதான் இருக்கிறேன் மிகத் தாமதமாக!!!!இதை கவனிக்கவில்லையா????
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. இப்படி முறைப்படி தயாரிக்கப்பட்ட கண்மை எங்கு கிடைக்கும் எனவும் கூறினால் நலம்..

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  5. திரு சங்கர் குருசாமி அவர்கள் கேட்டுள்ளார்.///இப்படி முறைப்படி தயாரிக்கப்பட்ட கண்மை எங்கு கிடைக்கும் எனவும் கூறினால் நலம்..///இது போன்றே பொதுவாக சித்த மருந்துகள் பற்றிக் குறிப்பிடும்போது பெரும்பாலானவர்கள் கேட்கிறார்கள்!!! இப்படி முறைப்படி தயாரிக்கும் கண்மை நமக்கென நாம் செய்தால் நன்மைகள் உண்டு.சித்த மருத்துவத்தை அதிக
    அளவில்(LARGE SCALE) செய்வது என்பது முடியாத இயலாத காரியம்.மிக வேகமாக அரைக்கும் எந்திரங்களில் பொடி அரைத்தால்,சாறு எடுத்தால் மூலிகைப் பொடிகள்,சாறுகள் சூடாகி அனைத்தும் வெந்து போகும்.அதனால் எந்தப் பயனும் இல்லை.மிக்ஸியில் போடும் அருகம்புல் சாற்றிலோ, அல்லது கடைகளில் விற்கும் மூலிகைப் பொடிகளோ பெரும்பயன் ஏதுமில்லை. அது போலவே இந்தக் கண்மை நீங்கள் வீட்டில் செய்து கொள்ளவே தந்துள்ளேன்.இதனாலேயே ஊருக்கு ஒரு சித்த வைத்தியர் பரம்பரையாக இருப்பார்.திருவாளர் அரசு இத்தகைய சூழ்நிலையை அறவே ஒழித்து வருகிறது.இதற்கு மேல் இதனை விவரித்தால் அரசாங்கத்தின் செயல்பாடு பற்றி நான் கடுமையாகவே விமரிசிக்க வேண்டி வரும்.இது போன்று கேட்டுக் கொண்டிராமல் நீங்களே மிக எளிதாகவே நீங்களாகவே வீட்டிலேயே செய்யலாம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. வணக்கம் தங்களுடைய ஈ-மெயில் விலாசம் தாருங்கள்

    ReplyDelete
  7. Respected sir ,u r doing good job. keemti up.God 'sis always with u

    ReplyDelete
  8. ஐயா முறைப்படி தயாரித்த கரிசாலை கண்மை , அத்தி கண்மை , பொன்னாகண்ணி கண்மை கிடைக்ககிடைக்கும் தொடர்பு: 9840272425

    ReplyDelete
  9. சுவாமி ஜி என் பெயர் ஆஷா.நான் எடுக்கும் முயற்சிகளும் தோல்வியை தழுவுகின்றது.என் மணவாழ்க்கையும் சரியில்லை.நான் நம்பினவர்கள் எல்லோரும் என் மனம் வேதனை படும்படி நடந்து கொண்டு இருக்கின்றனர்.எனக்கு வேலையில் வெற்றியும் இழந்தவற்றை மீண்டும் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுமாறு மிக தாழ்பணிநீது கேட்டுக்கொள்கிறேன் நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்