மொழி பெயர்ப்புக் கருவி

Monday, June 27, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 8)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 7) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.


''க''வது(ஒன்றாவது) மர்மம்
கடுக்காயை மென்று தின்பதால் தீபாக்கினி அதிகப்பட (பசி அதிகப்படும்) ஏதுவாகும்.சூரணம் செய்து சாப்பிடுவதால் தாராளமாகப் பேதியாகும் (இதையே அவன் எனக்கு கடுக்காய் கொடுத்துவிட்டான் என்பார்கள்). கஷாயஞ் செய்து பானஞ் செய்து வந்தால் மலத்தை பந்தப்படுத்தும்.


இதனைச் சுட்டுக்கரியாக்கிப் பொடித்து வஸ்திரகாயஞ் செய்து(துணியில் சலித்து) தகுந்த அனுப்பானங்களில் உண்ண வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் மூவகைத் தோஷங்களையும் சாந்தப்படுத்தும்.
  
கடுக்காயை உபயோகிப்பதில் இன்னும் பல மர்மங்களும் உள்ளன.இரண்டாவது மர்மம் முதல் அந்த மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.
   


இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 9)'' என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்