மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, June 5, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 7)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 6) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.

கடுக்காய்ப் பொதுக்குணம்

கடுக்காயானது வாதம், பித்தம், சிலேத்துமம் என்னும் முத்தோஷங்களின் விகற்பத்தால் ஏற்படும் வியாதிகளை நீக்குகிறது. ஆனால் புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, ஆகிய இம்மூன்று சத்துக்களும் பித்த விகற்பத்தை நீக்குகின்றன. 

கடுக்காயில் உள்ள கசப்பு, துவர்ப்பு, உறைப்பு ஆகிய இம்மூன்று சத்துக்களும் கப விகற்பத்தை நிவர்த்தி செய்கின்றன.

துவர்ப்பு, உறைப்பு இவ்விரண்டும் வாத விகற்பத்தை நிவர்த்தி செய்கின்றன. இவையெல்லாம் கடுக்காயில் இருக்கின்றன.

கடுக்காயின் விஷேஷ குணம் கீழ்க்காணும் ரோகங்களில், கடுக்காய் அதிகமாக கீழ்க்காணும் நோய்களில் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படுகிறது, அவையாவன,
இருமல் ரோகம், சுவாச ரோகம், மூல ரோகம், குஷ்ட ரோகம், இரைப்பை சம்பந்தமான ரோகம், குரற்கம்மல் ரோகம், சுர ரோகம், அஜீரண ரோகம், வயிற்றுப் பொருமல் ரோகம், வாந்தி ரோகம், விக்கல் வியாதி, தாக ரோகம், சொறி, மஞ்சட்காமாலை, குன்ம ரோகம், மண்ணீரல் ரோகம், கல்லடைப்பு, ஈரல் ரோகம், மது மேகம், இந்திரிய சிராவக ரோகம், வீக்கங்கள், பிரமேகம், புண்கள், வயிற்றுக் கட்டிகள், சங்கிரகணி {சங்கடங்கள் தோற்றுவிக்கும் கிரகணி,இதை ஆங்கில வைத்தியத்தில் IBS (IRRITABLE BOWEL SYNDROME) என்பார்கள்}, இருதய ரோகங்கள், முதலியவைகளுக்கு அருமையான அமிர்தமாக கடுக்காய் வேலை செய்கிறது.

இன்னும் இது மூளையையும் இருதயத்தையும் பலப்படுத்துகிறது. ஞாபக சக்தியை விருத்தியாக்குகிறது. மல பந்தம் முதலிய கட்டுக்களை நீக்குகிறது. பைத்தியம், மனக்கிலேசம், சித்தப் பிரமை, ஆகிய மனம் சம்பந்தமான வியாதிகளில் மிக அதிகமாக உபயோகப்படுகிறது.

பெரு வியாதி,மார்பு துடித்தல், தொந்தசுரம், வாத மூல ரோகம், ஆகியவைகளுக்கும் உபயோகப்படுகிறது. கபம் முதலிய துர் நீர்களை வறளச் செய்து குணப்படுத்துகிறது. வயிற்றிலுள்ள உள்ளுறுப்புக்களை பலப்படுத்துகிறது.இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. காக்கை வலிப்பு(கால்,கை வலிப்பு), பக்க வாதம், ஆகிய வியாதிகளிலும் பயன்படுகிறது.கடுக்காயை உபயோகிப்பதில் பல மர்மங்களும் உள்ளன.அந்த மர்மங்களும் பின் வரும் பதிவுகளில் விளக்கமாக வெளியிடப்படும்.

இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 8)'' என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

 1. ஜி கடுக்காயை தொடர்ந்து வருடம் முழுவதும் சாப்பிடலாமா ?

  ReplyDelete
 2. கடுக்காயை வருடம் முழுவதும் சாப்பிடலாம்.அதை சாப்பிடும் முறை பற்றி கீழ்க்கண்ட பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.இதை சரியாகக் கடைப் பிடித்தால் நோய்களே நம்மை அணுகாது.
  http://machamuni.blogspot.com/2011/03/6-5.html
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete
 3. அன்புமிக்க திரு ரா.சின்னதுரை அவர்களே,
  சில பல நாட்களுக்குப் பின் உங்கள் கருத்துரைக்கு பதில் எழுதுகிறேன்.இறைவன் இந்தப் பேனாவை சற்றுக் கீழே வைத்து ஓய்வெடுக்க விட்டு விட்டான்.இனி சற்றுக் கட்டுரைகள் தொடரும்.
  மிக்க நன்றி
  என்றென்றும் பேரன்பினால்
  சாமீ அழகப்பன்

  ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்