மொழி பெயர்ப்புக் கருவி

Thursday, February 10, 2011

சில தனிப்பாடற் காட்சிகள் 15

நமது செந்தமிழ்ப் புலவரான அன்பர்,அவரது நண்பர் செந்தமிழ்ப் பெரும் புலவரிடம் நூறு ரூபாய் கடன் கொடுத்திருக்கிறார்.அதை செந்தமிழ்ப் புலவர் திருப்பிக் கேட்க போனார்.


செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் 100/= தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா,நான் உங்களுக்கு நூறு ரூபாய் தர வேண்டும்.தருகிறேன்.என்றார்.


செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் இருநூறு தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா நான் இரு(ம்) நூறு தருகிறேன் என்றார்.


செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் முந்நூறு தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா,நான் ரூபாய் (முன் கூறியபடி)நூறு தருகிறேன் என்றார்.

செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் நாநூறு தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா,ரூபாய் (நான்)நூறு தருகிறேன் என்றார்.


செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் ஐநூறு தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா,ரூபாய் (ஐ)(ஐயமில்லாமல்)நூறு தருகிறேன் என்றார்.


செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் அறு நூறு தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா,பேச் சறு(பேச்சை அறுத்தால்) நூறு ரூபாய் தருகிறேன் என்றார்.



செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் எழு நூறு தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா, எழு (எழுந்தால்) நூறு ரூபாய் தருகிறேன் என்றார்.




செந்தமிழ்ப் புலவர்;-ஐயா,நீங்கள் எனக்கு ரூபாய் எண்ணூறு தர வேண்டும்.


செந்தமிழ்ப் பெரும் புலவர்;-ஐயா,ரூபாய் எண்(எண்ணிய)நூறு தருகிறேன் என்றார்.


எப்படி சொல்விளையாட்டு என்று கூறி,நூறு ரூபாயை செந்தமிழ்ப் பெரும் புலவர் கொடுக்க,  செந்தமிழ்ப் புலவர் பெற்றுக் கொண்டு அருமை,அருமை என்றார்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Post Comment

4 comments:

  1. வார்த்தை ஜாலம்
    அRUமை

    ReplyDelete
  2. புலவர்களின் புலமை வியப்பு,

    ஐயா நன்று, தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரிஃப் அவர்களே,
    தமிழின் அருமை.சொன்னால் நமக்குப் பெருமை.இன்னும் பல பாடல்கள் இருக்கின்றன.எழுத நேரம்????????????
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    தமிழ் ஒரு கடல்.அதில் நீந்துவதும் இன்பம்.சுவைப்பது இன்பம்.கேட்பது இன்பம்,இதை பாரதி தாசன் ''சாகும் வரை தமிழ் பயின்று வாழ வேண்டும்,என் சாம்பலிலும் தமிழ் மணந்து வேக வேண்டும்''
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்