மொழி பெயர்ப்புக் கருவி

Monday, February 7, 2011

ஒளி உருவச் சித்தர்கள்'(பாகம் 1)

இந்த வலைப்பூவின் ஆரம்பத்தில் கண்ட ஒளியுருருவச் சித்தர்கள் என்ற பதிவைப் பாருங்கள். அந்தப் பதிவில் கண்ட எனது குருநாதரின், குருநாதரான திரு சர.கோட்டைச் சாமி அவர்கள், ஜீவ சமாதியில், சென்ற ஆண்டுக்கு முந்தின ஆண்டு குருபூஜையன்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்தான் அவை.

இதிலிருந்து அவர் ஒவ்வொரு குருபூஜையன்றும் அவர் ஒளியுடம்போடு இங்கு வருவது தெளிவாகத் தெரிகிறது. இந்த வலைப் பூப்பதிவையும் பார்த்துவிட்டு வாருங்கள். 
குருபூஜையன்று (மாசி மாதம் வரும் முதல் ரோகணி நட்சத்திரத்தன்று, குரு பூஜை நடை பெறும்) பகலில் எல்லாக் கோவில்களிலும் நடை பெறும் பூஜை போன்று எல்லாக் காரியங்களும் நடக்கும்.

ரோகணி நட்சத்திரம் என்பது பொதுவாக ஞானிகள் சீவ சமாதி அடைய தேர்ந்தெடுக்கும் நட்சத்திரமாக உள்ளது.எனது அம்மாவின் தாத்தாவும் எனது பூட்டனாரும் ஆன திரு சாந்தலிங்கம் என்ற புழுகாண்டியா பிள்ளையவர்கள் ஜீவசமாதியடைந்தது மார்கழி மாதம் ரோகணி நட்சத்திரத்தன்றுதான்.

எனவே அனைவரும் வந்து அருட்பெருஞ் சோதி ஆண்டவரின் மெய்யருள் பெற்று உய்யுமாறு வேண்டுகிறோம். எங்களது சபையை பெரிய மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் கொண்ட சபையாக எண்ண வேண்டாம்.

நாங்கள் நாளது தேதி வரை உபதேசத்துக்கு என்று அன்று செலவாகும் நாட்டுச் சர்க்கரை, பசும் பால், நாட்டுப் பழம், இரவு விழித்திருக்க சுக்குக் காப்பி,இஞ்சி இந்தச் செலவுகளுக்கு வெறும் ரூபாய் 100/= மட்டும் வாங்கி வந்தோம்.

இது நான் உபதேசம் வாங்கும் காலத்தில் வெறும் ரூபாய் 25/= மட்டுமே பெற்று வந்தோம்.

இப்போது சபைக்கான கட்டடம் இடியும் நிலையில் உள்ளது.  இப்போது ஒவ்வொரு ஆயுட் கால நபரும் ரூபாய் 500/= மட்டும் கட்டிட நிதியாக வசூலித்தும் இன்னும் எங்கள் கட்டிட நிதி ரூ2,00,000/= த்தைத் தாண்டவில்லை. அதையும் கொடுக்க இயலாத நபர்கள் இருப்பார்கள் என எண்ணி குரு நாதர் திருமிகு ஆன்மீக குரு திரு சர.கோ.பார்த்தசாரதி அவர்கள்,இதையும் மூன்று பங்காக்கி 8 ம் நிலைக்கு ரூபாய் 250/= ம்,9 ம் நிலைக்கு ரூபாய் 150/= ம்,10 ம் நிலைக்கு ரூபாய் 100/= யாகவும் வசூலிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். 

இதே உபதேசத்தைக் கொடுக்க மற்ற சபைகளில் 36 உபதேசங்களாக இதே உபதேசத்தைப் பிரித்து, உபதேசத்துக்கு ஒரு பவுன் தங்கக் காசாக குரு தட்சணையாக வசூலித்தவர்களும் உண்டு. வசூலித்துக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

கட்டிடமே இடிந்து விழும் நிலை ஆனாலும் கட்டிடம் கட்டக் கூட நிதி வசூலிக்க மனம் இல்லாமல்(மிகவும் ஏழையான நபர்கள் உபதேசத்திற்கு வந்தால் அவரது சிறப்பு அதிகாரத்தை உபயோகித்து இலவசமாகவும் உபதேசம் கொடுத்துள்ளார்கள்). 

இந்த சலுகைகளினாலும் இரக்க சுபாவத்தினாலும் வசதியுள்ள நபர்கள் கூட இங்கே ஏமாற்றும் போக்கும் உள்ளது. தெரிந்தும் தெரியாதது போல குருநாதர் இருக்கிறார்.

நான் இதை அனுமதிக்கக் கூடாது என்னும் போது மருமகனே இதை நம்மிடம் ஏமாற்றினால் இந்த உலகை எல்லாம் காத்து ரட்சிக்கும் மகா மாயையை ஏமாற்ற முடியுமா!!!! நானும் அவர் வழியே போகலாம் என்று எண்ணம் கொண்டுவிட்டேன். எல்லாம் இறைவன் செயல்.

அவள் பார்த்துக் கொள்ளட்டும். செய்வதும் நாமல்ல. செய்யத் தூண்டுவதும் நாமல்ல, நடப்பவை நல்லதாக நடக்கட்டும், நடக்கப் போவது அவள் எண்ணமாக இருக்கட்டும்.

தத்வ மசி,தத்வ மசி,தத்வ மசி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!        

குரு பூஜைக்கு வரும் நபர்கள் செய்யும் மொய்ப் பணத்தில் குரு பூஜை நைவேத்தியம் செய்யப்படும். அதிலும் குரு பூஜைக்கான அன்ன தான அரிசிச் செலவு நாளது தேதி வரை குருநாதர் வீட்டுச் செலவுதான்.

இந்த அழைப்பிதழ் நாளது தேதி வரை கையால் என் குருநாதராலும், அவரின் வாரிசுகளாலும்தான், போஸ்ட் கார்டில் எழுதி அனுப்பப்பட்டு வந்துள்ளது.
இந்த முறையே சபை அன்பர்களான திரு ஜகதீஷ், திரு ஆர்த்தி பாபு, திரு ருக்மாங்கதன், திரு ஜனார்த்தனன், திரு ஜவஹர், திரு கோபுநாத் அவர்களின் கொடையால் இந்த அழிப்பிதழ் திருப்பணி இனிதே நிறைவடைந்தது.

மேலும் இந்த சபை உபதேசம் பற்றிய விவரம், கூட்டம் பற்றிய விவரம் பற்றி,குறுஞ் செய்தியாக  வெளியிடும் சபை அன்பர் திரு தினகரன் பற்றியும் இங்கு நினைவு கூற விரும்புகிறேன்.நன்றி தினகரன்.   
    
பகலில் மதியம் 12 மணி முதல் 1.30 மணி வரை குரு பூஜையும் அதனையொட்டி அன்ன தானமும் நிகழும்.வெளியூரிலிருந்து வந்த அன்பர்கள் சேவை செய்த களைப்புத் தீர ஓய்வெடுப்பார்கள். பக்கத்து ஊர் அன்பர்கள் தங்கள் ஊர்களுக்குப் போய் மீண்டும் இரவு கூட்டத்துக்கு வருவார்கள்.        

இரவு 10 மணிக்கு மேல் சித்தர்கள் பாடல்களின் விளக்கம், மற்றும் சந்தேகம் தெளிதல், கேள்வி பதில் அனைத்தும் நடை பெறும். இதில் உப தேசம் வாங்கிய வாங்காத அன்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
   
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்