மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, February 6, 2011

சுயநலமில்லாத பொது நல சமுதாயத்தை சித்தர்கள் விரும்புகிறார்கள்

சுனிதா கிருஷ்ணன் என்ற இந்தப் பெண்மணியின் போராட்டம்,காயமுற்ற போதும்,அடிபட்டபோதும் வீறு கொண்டு எழும் தன்மை என்னை வியக்க வைக்கிறது.இந்தப் பெண்மணியைப் பாராட்ட ஒரு பதிவு கட்டாயம் போட்டே ஆக வேண்டும் என்றுதான் இந்தப் பதிவு.


பதினான்கு பேரால் கற்பழிக்கப்பட்டு அதன் பின் இரண்டு வருடங்கள் ,உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு பின் சமுதாய ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டு வெகுவாக பாதிக்கப்பட்டும், மீண்டும் வீறு கொண்டு எழுந்து வந்து தன்னைப் போல பாதிப்படைந்தவர்களை மீட்டு தன்னலம் கருதாது சேவை புரியும் இவர் வாழும் தெய்வம்.


இந்த முயற்சியில் வலது காது கேட்காத நிலையை அடைந்தது.இவரின் செயலாளர் ஒருவர் கொல்லப்பட்டார்.


இவரால் காப்பாற்றப்பட்ட குழந்தைகளில் ப்ரனிதா என்ற பெண் குழந்தை ஒரு விலை மாதாக்கப்பட்டவரின் குழந்தை,அந்த விலை மாதுக்கு ஹெச் ஐ வி.இவரின் வயதின் காரணமாக விலை போகாத விலை மாதாகையால்,ஆள்பிடித்து வர இந்தக் குழந்தையை ஏவ,ஆள் பிடிக்கப் போன அந்தக் குழந்தை,தானே கொடுமைக்கு ஆளாகி மூன்று பேரால் கெடுக்கப்பட்டு மிக மோசமான நிலையில் மீட்கப்பட்டது.


ஷாகீன் என்ற குழந்தையை ஒரு இருப்புப் பாதையில் கண்டெடுத்தபோது அந்தக் குழந்தையின் குடல்கள் வெளியே கிடந்தது.அந்தக் குழந்தை பலரால் உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டு குற்றுயிரும் குலை உயிருமாகக் கிடந்தது.20 க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டு அக்குழந்தைக்கு உயிரூட்டப்பட்டது.


அஞ்சலியின் தந்தை குடிக்கு அடிமையான பெருங்குடிகாரன்.தன் மகளை நிர்வாணப் படங்கள் எடுப்பதற்காக விற்றுவிட்டான்.இப்படி 3,4,5 வயது பெண் குழந்தைகள் சாதாரண காரணங்களுக்காக,விற்கப்படுகின்றன,கொடுமைப் படுத்தப்படுகிறார்கள்,எனில் வயது வந்த பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகள்!!!!!!!!!!!!


இதைக் கண்டவுடன் என் இரண்டு பெண் குழந்தைகளுக்கும் வர்மப் பிரயோகம் பற்றிக் கற்றுக் கொடுத்து, அவசியம் ஏற்படும் போது உபயோகப் படுத்திக் கொள்ள அனுமதியும் கொடுத்துவிட்டேன். 


   எனது வலைப்பூவில் இந்த வார்த்தைகளை ஏற்கெனவே பொறித்து வைத்துள்ளேன்.ஒவ்வொரு அநீதியின் போதும் அறச்சீற்றம் கொண்டு நீ பொங்குவாயானால், நீ என் தோழர்.” இந்த வார்த்தைகளின்படியே சுனிதா கிருஷ்ணன் இப்படி அநீதிகளைக் கண்ட போது பொங்கி எழுந்தார்,எழுந்து கொண்டிருக்கிறார்,இன்னும் எழுவார்.அதனால் இவர் என் தோழி. 
  
நீங்களும் என் தோழர் ஆக வேண்டும் என்றால் அநீதிகளைக் கண்டு பொங்கி எழுங்கள்.அநீதிகளைத் தட்டிக் கேளுங்கள்.அதனால் உங்களுக்கு சிறு,சிறு பாதிப்புகள் நேரிட்டாலும், ஏன் உயிரையே இழக்க நேரிட்டாலும் மனம் கலங்காதீர்கள்.


ஒரு உயிர் ஒரு முறைதான் போகப் போகிறது.அதை நினைத்து தினம் தினம் செத்து செத்துப் பிழைக்காதீர்கள். தைரியமாக தீமைகளை எதிர்த்துப் போராடுங்கள்.உங்கள் சந்ததியினருக்கு இது போல இருக்கக் கற்றுக் கொடுங்கள்.


நமது நாட்டின் லஞ்சப் பணம் மேலை நாட்டு வங்கிகளில் முடங்கி கிடப்பதைப் பாருங்கள்.லஞ்சம் கொடுக்காதீர்கள்.லஞ்சம் கேட்கும் அவனே நீங்கள் கொடுக்காமல் போராடினால், பின் லஞ்சம் வேண்டாம் இந்தா என்று அந்த வேலையைச் செய்து தருவான்.நமது பணம் எவ்வளவு அயல் நாட்டில் கிடக்கிறது என்று பாருங்கள்.
இது இந்தியாவில் இருந்தால் பணப்புழக்கம் எவ்வளவு அதிகரிக்கும்.எத்தனை திட்டங்களுக்கு பயன் படும்.இது பத்து வருட மொத்த இந்தியாவின் பட்ஜெட் தொகை.கொஞ்சமாவது யோசிங்க!!!!







நன்றி புதிய தலைமுறை


நான் இதே போல கடந்து வந்த பாதைகள் கரடு, முரடானவை,முள்காடுகள் நிறைந்தது.பல முறை என்னைக் கொல்ல அடியாட்கள் ஏவப்பட்டுள்ளார்கள்.
போராடியே இறைவன் அருளால் வெற்றி பெற்றுள்ளேன். இறைவன் அருள் இல்லாவிட்டால் என்னைத் தற்காத்துக் கொள்ள இத்தனை விடயங்கள்தான் எனக்குத் தெரிய வந்திருக்குமா!!!
 

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்



Post Comment

5 comments:

  1. என்ன கொடுமை ஜி
    படிக்கும் போதே கண்ணீர் வருகிறது

    ReplyDelete
  2. ஒவ்வொரு கஷ்டம் ஆண்டவன் கொடுக்கும் பொது
    பின்னாடி தான் அதனால் நாம் என்ன கற்று கொண்டோம்
    என்பது தெரிய வருகிறது

    ReplyDelete
  3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரிஃப் அவர்களே,
    அதுதான் நான் சொல்லும் விடயமும்,கருத்தும்.மக்களை (மாக்களாக) சிந்திக்கும் திறன் அற்றவர்களாக இருக்கும் நிலையில் இருந்து சிந்திக்கும் நிலைக்குத் தூண்ட முயற்சி செய்து வருகிறேன்.இறைவனின் அருட் கருணை என்ன செய்ய நினைத்திருக்கிறதோ!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. ஐயா அழுகையை வரவழைத்தது இந்த பதிவு எதைச்சொல்லி சமாதானம் ஆக்குவது மனத்தை,

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு அனாதி அவர்களே,
    இறைவன் நமக்கு எல்லா விதத்திலும் வழிகாட்டுவான். இதைச் சொல்லியே மனம் ஆறுதல் பெற வேண்டி இருக்கிறது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்