மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, February 16, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் 6(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 2)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 1) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும். 

''வாதமாய்ப் படைத்து,பித்த வன்னியாய்க் காத்து,சிலேத்துமமாய்த் துடைத்து என்பார்கள்.''

விளக்கம்;-வாதம் என்பது பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தியால் உடல் வளர்க்கப்படுகிறது.பின் 20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான(வன்னி) நெருப்பு சக்தியால் காக்கப்பட்ட உடல் பின் 45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தியால் (சளி தொண்டையில் அடைத்து ஒரு விக்கலுடன் உயிர் பிரிகிறது) உடல் சக்தியெல்லாம் துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரிகிறது.

காலையில் இஞ்சி,கடும்பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம்-உண்டிடில்
கோலை ஊன்றிக் குறுகி நடந்தவர்
கோலை விட்டு குலாவி நடப்பரே.

இதில் காலையில் இஞ்சி,மதியம் சுக்கு,மாலையில் கடுக்காய் என்று பொருள் எடுக்கக் கூடாது.காலைப் பருவமாகிய பிறந்தது முதல்,20 வயது வரை வாதம் ஆன காற்றின் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், வாதக் கதிப்பினால் வரும் வியாதிகளைக் களைய இந்தப் பருவத்தில் இஞ்சியை வருடம் ஒருமுறை ஒரு மண்டலம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இது போலவே  20 வயதிலிருந்து 45 வயது வரை பித்தமான (வன்னி) நெருப்பு சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில், பித்தக் கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு சுக்கை சுத்தி செய்து வருடம் ஒருமுறை ஒரு மண்டலம்  மருந்தாகத் தர குணமாகும்.
   
45 வயதிலிருந்து ஆயுள் அந்திம காலம் முடியும் வரை சிலேற்பனமான நீர் சக்தி அதிகமாக இருப்பதால், இந்தப் பருவத்தில்,
சிலேற்பன 
கதிப்பினால் வரும் வியாதிகளுக்கு கடுக்காயை சுத்தி செய்து கீழ்க் குறிப்பிட்ட முறைகளின் படி சாப்பிட்டு வர, 

உடல் சக்தி காக்கப்பட்டு, சிலேற்பனக் கதிப்பு துடைத்து அழிக்கப்பட்டு உயிர் பிரியாமல் காக்கப்படுகிறது.இதனால் இது காயகற்பத்தில் தலையாயதாகவும் செயல்படுகிறது.கடுக்காய்க் கற்பம் எனப் போற்றப்படுகிறது.  



இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 3)'' என்ற பதிவில் தொடரும்.



அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

11 comments:

  1. //இதில் காலையில் இஞ்சி,மதியம் சுக்கு,
    மாலையில் கடுக்காய் என்று பொருள் எடுக்கக் கூடாது//

    ஆஹா ஆரம்பமே ஆப்பா

    இது தான் தமிழ் உள்ள வில்லங்கமே
    முன்னோர்கள் சொன்ன அர்த்தம் வேற

    நான்(ங்கள்) விளங்குகின்ற அர்த்தம் வேற

    பதிவு மிக அருமை
    நன்றி சாமீ ஜி

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
    பல சித்த மருத்துவ செய்முறைகள் பரி பாஷைகளாகவே இன்னும் பரிமாறப்பட்டு வருகின்றன.எடுத்துக்காட்டாக என் மாமா அவர்கள் என் அத்தையிடம் மருந்துகளை எடுத்து வரச் சொல்லும் போது வெள்ளை எடுத்து வா என்றால் நீற்றுச் சுண்ணாம்பு எடுத்து வர வேண்டும் என்று பொருள்.துவர் எடுத்து வா என்றால் கொட்டைப் பாக்கு எடுத்து வர வேண்டும் என்று பொருள் .இது போல இடத்துக்கு தக்கவாறு பொருள் கொள்ள வேண்டும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. தொடர்ந்து கடுக்காய் சாப்பிடலாமா ?
    ஆவாரை பூ தினசரி சாப்பிடலாமா ?

    ஆவாரையை பற்றி பதிவு வருமா ஜி ?

    ReplyDelete
  4. மிக முக்கிய அவசியமான பதிவுகளை இடுகிறீர்கள் மிக்க நன்றி ஐயா

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
    கடுக்காயை எப்படி சுத்திகரம் செய்து,எப்படிப்பட்ட அனுப்பானங்களில்,எந்தெந்த காலங்களில் தொடர்ந்து சாப்பிட வேண்டும் என்ற என்ற விவரங்கள் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து கற்பங்கள் அனைத்தும் தொடரும்.அதைத் தொடர்ந்து ஆவாரை பற்றியும் விவரங்கள் வெளிவரும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    மக்களின் அறியாமை போக்குவதே சித்தர்களின் கொள்கை.அறியாமை அழிந்தால் இல்லாமை இல்லை.நோய்கள் இல்லை.முட்டாள் தனமான மூட பக்தி இல்லை.இப்படிப்பட்ட குறைகள் இல்லாத நிறைவான சமுதாயம் காண இவை அவசியம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. Dr.Rajasekar எழுதிக் கொள்வது:
    நல்ல அருமையான கோர்வை.
    தமிழ் , சீன மருத்துவ முறையில்
    ஆசனங்களையும் சேர்த்து-
    urinary system - kidney function-
    கழிவுப் பொருட்களை நீக்குதல் குறித்த
    உங்கள் பார்வை மற்றும் பதிவு -
    சிறந்த தொகுப்பு.
    மாலை மூன்று மணியில் இருந்து
    ஐந்து மணிக்குள் இடைப் பட்ட காலத்தில்,
    நன்கு நீர் அல்லது பழச் சாறு அருந்தச்
    சொல்வதும் இதனால்தான் என்று அறிகின்றேன்.
    வாழைத் தண்டு - உணவில் சேர்த்துக் கொள்ளுதல்
    இதன் பொருட்டே என்றும் நம்புகின்றேன்.
    சந்தனாதி மற்றும் தொட்டார் சிணுங்கி
    நன்னாரி போன்றவைகள் எல்லாம் உங்களைப் போன்ற
    ஆர்வலர்கள் வகைப் படுத்தியதும் எதற்கென்று
    இப்போதல்லவா விளங்குகின்றது.!
    சமீபத்தில் சினேகாவின் ஆகர்ஷன சக்திக்கு
    அதாவது வசீகரிப்புக்கு என்ன காரணம் என்று
    maruthamalar.blogspot - ல் படித்தேன்....இப்படிப்பட்ட
    பதிவுகளுக்கு மத்தியில்- தங்களது பதிவு தனித்துவம்
    வாய்ந்தது.தொடர்க உங்கள் தமிழ் பணி.
    ayurexpress.நெட்

    ReplyDelete
  8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ARISE & SHINE" Dr.Rajasekar Athiappan ,M.D. www.ayurvetha.com, அவர்களே, தங்களின் தள முகவரியை இங்கே வெளியிடுகிறேன்.அது பலருக்கு பயன்படும்.ஐயா தங்கள் ஆராய்ச்சித் திறன் மிகமிக உயர்ந்ததாக உள்ளது.தங்கள் பாராட்டுதல்களுக்கு நன்றி.எனது பணிப்பழு காரணமாக பதில் தாமதமாக இட்டதற்கு நான் வருந்துகிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. Excellent.start and explanation. Im reading your posts backwards through time and its very informative. Your heart is pure enough to do this knowledge charity. Pray the almighty bless your family for generations

    bhaskaran

    ReplyDelete
  10. ஐயா திரு பாஸ்கரன் அவ்ர்களே,
    தங்களது கருத்துரைக்கு நன்றி,இறைவனுடைய பேனாதானே நான்.இறைவன் எழுதினால் எழுதுவுவேன்.எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி எழுதி மேற்செல்லும்.அதன் கைப் பாவைகளே நாம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. அன்பு நண்பர் அழகப்பன் அவர்களுக்கு...காலையில் இஞ்சி,மாலையில் சுக்கு,இரவில் கடுக்காய் என்பதை தவராக புரிந்து கொண்டிருந்த என் போன்றோருக்கு தங்களின் விளக்கம் மிக அருமை. இது தெரியாமல் கடுக்காய் பொடி வாங்கி தண்ணீரில் கலந்து குடித்து கொண்டிருந்தேன். தங்களின் கட்டுரைகள் மிக அருமை. இத்தனை வருடங்கள் தங்களோடு தொடர்பு கொள்ளாமல் போனதுக்காக வருந்துகின்றேன். இனி நமது நட்பு தொடரும். வாழ்க வளமுடன் !

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்