மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, October 23, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 46)கருணை

அன்புள்ள பதிவு வாசகர்களே,

முதலில் தாமதத்திற்கு வருந்துகிறேன்.நான் சென்ற மாதம் மதுரை அருகே உள்ள அழகர் கோயில் சென்றிருந்தேன்.அங்கே உள்ள சிறப்புக்கள் பல, அவற்றில் சிலவற்றை கீழே கொடுத்துள்ளேன்.

அங்கே மாலை 6.30 மணிக்கு மட்டும் தினமும் தோசை பிரசாதம் கொடுப்பார்கள்.மாலை 4 மணிக்கே அதற்கு பதிவும் செய்யலாம்.அந்த தோசை சுடப்படுவது ஒரு சிறப்பு வாய்ந்த தோசைக் கல்லில் என்பதே அதன் சிறப்பு.அழகர் கோவில் மூல விக்கிரகம் எந்த உலோகக் கலவையால் செய்யப்பட்டிருக்கிறதோ, அதே உலோகக் கலவையால் செய்யப்பட்டுள்ளது.




மூலவர் விக்கிரகத்தில் அபரஞ்சிப் பொன் என்ற உயர்ந்த பொன் சேர்க்கப்பட்டுள்ளது.அந்தப் பொன் உடலில் சேர்ந்தால் உடலில் நோய்கள் அணுகாது.ஏழைகளும் பயன் பெறும் வகையில் அந்நாளில் சித்தர்கள் செய்து வைத்த ஏற்பாடுகள் பல.அவற்றுள் ஒன்றே இது.

மேலும் பல கோயில் தலங்களில் இது போன்ற பல உடல் நலம் காக்கும் ஏற்பாடுகளை சித்தர்கள் செய்துள்ளனர்.மேலும் இந்த அழகர் மலையில் மேலே ராக்காச்சி அம்மன் கோயில் ஒன்றுள்ளது.அங்கே ஒரு எந்திரம் ஸ்தாபனம் செய்து வைத்துள்ளார்கள்.அதனடியில் இருந்து ஒரு எந்நாளும் வற்றாத ஊற்றொன்று வந்து கொண்டிருக்கிறது.

அதன் தண்ணீரை நாற்பத்தெட்டு நாட்கள் அருந்தினால் தீராத நோயெல்லாம் தீரும் என்று சித்தர்கள் நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதே போல மலையில் மேலும் இரு ஊற்றுக்கள் உள்ளன.ஒன்று கருட தீர்த்தம்.மற்றொன்று அனுமந்த தீர்த்தம்.



அனுமன் சிறிய திருவடி என்றழைக்கப்படுபவர். கருடன் பெரிய திருவடி என்றழைக்கப்படுபவர்.
இருவருமே திருமாலின் வாகனங்களாகக் கருதப்படுவதுடன்.இருவருமே சாதாரணப் பிராணிகளாய் இருந்து சிரஞ்சீவிகளாய் ஆனவர்கள்.அப்படிப்பட்ட சிரஞ்சீவித் தன்மையை அளிக்கும் மூலிகைகளின்மேல் பட்டு வரும் தண்ணீரில் இருந்து வரும் தீர்த்தமே இது.

மேலும் ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். மலையில் அங்கங்கே சில சிறு விலங்குகளையும்,பல குரங்குக் கூட்டத்தையும் கண்டேன்.அவற்றின் சுதந்திரத் தன்மையையும் கண்டு மகிழ்ந்தேன்.அதே வேளையில் மனிதனின் சுயநலத்தாலும், அலட்சியத்தாலும், வேகமான வாகனங்களாலும் அவை அழிந்து வருவதையும் கண்டேன்.      

கண்ணெதிரே தேவஸ்தான வேன் ஒரு குரங்குக் குட்டியை அடித்துவிட அந்தத் தாய்க் குரங்கும்,அந்தக் குரங்குக் கூட்டமும் சேர்ந்து அழுததையும் பார்க்க மிக்க வேதனையும், வருத்தமுமாய் இருந்தது. 

எனவே தயவு செய்து அனைத்து மனிதர்களுக்கும் ஓர் வேண்டு கோள். சின்னஞ் சிறு உயிர்களையும் நம் உயிர் போல நினைத்து தயவு செய்து காப்பாற்றுங்கள். காக்க உங்களுக்கு நேரமில்லாவிட்டாலும் அழிக்காமல் இருக்க முயலுங்கள்.

இல்லாவிட்டால் நம்மை இயற்கை தண்டித்துவிடும். பிறகு நாம் சுனாமி வந்து தாக்குகிறது, பூகம்பம் வந்து தாக்குகிறது என்று வருந்தினாலும் பயந்தாலும் பயன் இல்லை.முடிந்த வரை மற்ற உயிர்களின் மேல் அன்பாக இருக்க முயலுங்கள். இல்லை இயற்கை நம்மை கொசு அடிப்பது போல அடித்துவிடும். இது வெறும் பயமுறுத்தல் இல்லை. உண்மை.

""தன்னுயிர் போல மன்னுயிர் எண்ண நின் தெய்வ அருட்கருணை செய்யாய் பராபரமே!!!!"" என்றும்
""வாடிய பயிரைக் கண்டபோது வாடினேன்!!!"" என்றும் வள்ளலார் கூறியுள்ளதைக் கடைப் பிடிக்க முயற்சி செய்யுங்கள். இப்படி நாம் இயற்கையைக் காத்தால் இறையாகிய இயற்கை நம்மைக் காக்கும். 

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

7 comments:

  1. மிக்க நன்றி சாமீ ஜி

    அடுத்த பதிவை ஆவலோடு
    எதிர்பார்கிறேன்

    ReplyDelete
  2. அழகர் கோவிலுக்கு சிறு வயதில் சுற்றி பார்பதற்காக
    மாட்டு வண்டியில் பயணம் செய்து
    போனது நினைவில் வந்தது ஜி

    அப்போது இந்து நண்பர்களும் அவர்களது தாய்மார்களும் முஸ்லீம் வீட்டு புள்ள இதுக்கு சாமிக்கு வெட்டின கெடா கறி
    சாப்பாடு கொடுக்க கூடாது ன்னு சொல்லி
    எனக்காக சைவ சாப்பாடு செய்து தந்தது மறக்கவே
    முடியாத ஒன்று மட்டும் அல்ல
    அவர்களது தாய்ப்பாசமும், மதத்தால்
    வேறு பட்டாலும் உணர்வால் ஒன்று என்று செயலில் காட்டிய அந்த அன்புக்கு
    நன்றியாக என்ன செய்யமுடியம்

    நெகிழ்ச்சியான உணர்வு அது

    நன்றி ஜி

    ReplyDelete
  3. குட்டி குரங்கு அடிபட்டது எதோ
    சிறு குழந்தை இறந்தது போலவே
    இருக்கிறது

    ரொம்ப கஷ்டமா இருக்கு

    குரங்கின் குறும்பையும்
    செய்டைகளையும் ரசிக்காதவர்
    மனிதர்களாகவே இருக்க முடியாது

    ReplyDelete
  4. ஐயா , தங்களுக்கு தனி மடல் (sralaghappan007@gmail.com)அனுப்பி இருக்கிறேன்.. தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பார்க்க முடியுமா ?

    நன்றி
    சங்கீதா சிவகுமார்

    ReplyDelete
  5. உலகின் மீது ஆசை பட்டேன்
    உலகிற்கு வந்து ;விட்டேன்
    விளையாட ஆசை பட்டேன்
    விளையாடி ;விட்டேன்
    பேதையின் மீது ஆசை பட்டேன்
    பித்தனாகி ;விட்டேன்
    போதை மீது ஆசை பட்டேன்
    மதி கெட்டு ;விட்டேன்
    பணத்தின் மீது ஆசை பட்டேன்
    பயந்து ;விட்டேன்
    புகழ் மீது ஆசை பட்டேன்
    புண்ணாகி ;விட்டேன்
    எதன் மீது ஆசை பட்டால்
    ஆசையை விட்டுவிடலாம்-? நான் யார்'

    ReplyDelete
  6. தகவலுக்கு(மிரட்டலுக்கும்) நன்றி அய்யா,

    வேதனையாக இருக்கிறது ஐயா, ஒரு ஜீவன் துன்பம் என்னை வெகு துன்பத்தில் ஆழ்த்தி விட்டது.

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்