மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, August 25, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(1)

சித்தர்களின் மெய்ஞானத்தினால் கண்ட விஞ்ஞானப் பேருண்மைகளை அலசி ஆராய்ந்து கண்ட உண்மைகளை இங்கு விரித்துக் கூறுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

அவன் அவள் அது எனும் மூவினைமயிற் 
தோற்றிய திதியேஒடுங்கி மலத்து உள
ஆதி அந்தம் என்பனார் புலவர்.(சிவஞான போதம் முதற்சூத்திரம்)

அவன் என்றால் சிவன் =  புரோட்டான் (PROTON) 
அவள் என்றால் பார்வதி = எலக்ட்ரான்(ELECTRON)
அது  என்றால் மாயா =  நியூட்ரான் (NEUTRON)

அவன் என்பது சும்மா இருக்கும் (சக்தி இல்லாவிட்டால் சிவனேன்னு சும்மா கிட) , அணுவின் உட் கருவுக்குள் புரோட்டான் சிவனைப் போல் சும்மா இருக்கும் ,(உமா காந்தாய ,காந்தாய காமிகார்த்தப் ப்ரதாயினே)அதே சமயம் அணுவின் உட்கருவை சுற்றி வரும் சக்தியான எலக்ரானை இழுத்து வைக்கிறது .இந்த ஈர்ப்பே அணுக்கட்டமைப்பை தீர்மானிக்கிறது.இந்த உலகத்தை கண்ணுக்கு தோற்றம் பெற வைக்கிறது.
சக்தி என்பது இயக்கத்தின் இருப்பிடம்,இயக்கத்தின் பிறப்பிடம்,சக்தியின் உறைவிடம்.இது அணுவின் உட்கருவை இடைவிடாமல் சுற்றி வருகிறது.
ஒரு குடத்திற்குள் இரண்டு பந்தைப் போட்டு சுழற்றினாலே ஒன்றை ஒன்று மோதிக் கொள்ளாமலோ தொடர்ந்து இயக்க சக்தி கொடுக்காமல் சுழன்று கொண்டே இருக்கச் செய்யவோ முடியாது.


ஆனால் எலெக்ட்ரானை ஆரம்ப இயக்க சக்தி எங்கிருந்து வந்தது.எங்கேயிருந்து தொடர்ந்து இயக்க சக்தி அதற்கு வருகிறது ,எது இத்தனையும் செய்கிறது.இத்தனை அண்ட பேரண்டங்களையும்,சூரிய,சந்திர நட்சத்திர கூட்டங்களையும் ஒன்றோடொன்று மோதாமல் அந்தந்த நிலைகளில் நிலை நிறுத்துவது எது .இந்த அண்ட பேரண்ட விதி முறைகளை உருவாக்குவது எது.


ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உண்டான ஒன்றை விஞ்ஞானத்தால் அறிய முடியாது அதன் எல்லையைத் தெரிந்து கொள்ள முடியாது.மனிதன் 
இயற்கையை புரிந்து கொண்டு அதன் விதிகளை நகல் எடுக்க முயற்சித்தால் இயற்கை அதன் விதிகளையே மாற்றிக் கொள்ளும்.
அதையே திரு வள்ளுவர் 


ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினும் தான்முந் துறும்.


 இயற்கையான ஊழை (இயற்கை விதிகளை) எது வெற்றி கொள்ளும்?
அப்படி ஒன்று வெற்றி கொள்ளுமாறு வந்தாலும் அதன் முன்னர் இயற்கை, தனது இயற்கை விதிகளை மாற்றிக் கூட வெற்றி கொள்ள வந்த ஒன்றை தான் வெற்றி கொள்ளும்,அது விஞ்ஞானமாக இருந்தாலும்.


ஒரு புரோட்டான் (PROTON)  ஐ அதி வேகத்துக்குள்ளாக்கி மற்றொரு புரோட்டான் (PROTON)  னுடன் மோதவிட்டால் பெருவெடிப்பின் போது என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் எண்ணி செயல்பட்டார்கள், இயற்கை அதன் விதிகளையே மாற்றிக் கொள்ளும் என்பதற்கேற்ப அங்கே ஒன்றுமே நடக்கவில்லை.


அந்த புரோட்டான் (PROTON), எலக்ட்ரான்(ELECTRON), நியூட்ரான் (NEUTRON)
என்பவை அனைத்தும் உயிரற்ற வஸ்து என நினைத்து செயலாற்றிக் 
கொண்டிருக்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அஞ்ஞானிகள்.


 புராதான இந்துக்களுக்கும்,சித்தர்களுக்கும் அணுவின் கட்டமைப்பைப் பற்றியும் அவற்றை ஒன்றிலிருந்து (ஒரு உலோகக் கட்டமைப்பில் இருந்து ஒரு உலோகக் கட்டமைப் பிற்கு)ஒன்றிற்கு மாற்றும் வல்லமையும் பெற்றிருந்தார்கள்.
திரு ஆன்மீகப் பேரொளி பரமஹம்ச யொகானந்தரின் ஒரு யோகியின் சுய சரித்தத்தில் அஃறிணைப் பொருள்களுக்கும் உயிர் உண்டு என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.அந்தப் பக்கங்களை அப்படியே நகலாகத் தருகிறேன்.நன்றி .ஒரு யோகியின் சுய சரிதம்.


தாவர வர்க்கங்களினால் தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகங்களாக மாற்றினார்கள்.நம் நாட்டில் தங்கச் சுரங்கங்கள் அதிகம் இல்லை.எனில் எங்கிருந்து வந்தன நம் நாட்டில் இவ்வளவு தங்கமும்,செல்வமும். இந்த உலோகம் மாற்றும் வித்தையை ரச வாதம் என்றும் தங்கம் செய்யும் வித்தையை வகார வித்தை எனவும் பரிபாஷையில் அழைத்தனர்

சித்தர்களின் ரச வாதம் என்பதை மிக மிக ரகசியமாக வைத்திருந்தார்கள்
 இதோ ஒரு சித்தர்களின் ரகசியம். 
இது எனது முப்பாட்டனார் காலத்தில் கடுக்காய் மையினால் ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுத்தப்பட்ட கையெழுத்துப் பிரதி.அந்தப் பக்கங்களை அப்படியே நகலாகத் தருகிறேன்.இது போன்ற சித்த ரகசியங்களை இனி அதிகம் காண்போம். இட்டால் செம்பை(தாமிரம்{COPPER}),பொன்னாக்கும் {GOLD} தங்கப் பச்சிலையைப் பற்றிக் கூறி பட்டணத்துப் பரதேசிகளைப் பனங்காட்டைச் சுற்றி தேடிக் கண்டுபிடித்துக் கொள்ளச் சொல்கிறார்.அப்படி மிக எளிமையாக கிடைக்கும் மூலிகையே அது என்கிறார்.எனில் நம் நாட்டில் தங்கத்திற்கு குறைவேது.


மேலே கண்டதும் ரச வாத சூத்திரமே.ஞானம் அறிந்தவர்களுக்கு அறியும்படிக்கு கைகூடும்.
மேலே கண்டுள்ளதும் தங்கம் செய்யும் வித்தையான வகார வித்தையே.
தங்கத்தை பத்து என்றும்,சொக்கம் என்றும்,பத்தரை மாற்றுப் பசும் பொன் என்றும்,பிரம்மன் என்றும்,காஞ்சிரம் என்றும்,பறி என்றும், வகாரம் என்றும் அழைப்பர்.


அடர் கந்தக அமிலமும்,ஹைட்ரோ குளோரிக் அமிலமும் சேர்ந்ததை ராஜத்திராவகம் என்பர். அது கண்ணாடியைத் தவிர எல்லாவற்றையும் கரைக்கும்.அது போல எல்லாவற்றையும் உருக்க சித்தர்கள் குரு என்ற ஒன்றை வைத்திருந்தனர்.
முட்டாள் சீடன் ஒருவனை அதி புத்திசாலியாக்குபவர் குரு.அது போல் 
கீழ்நிலையில் (மகா முட்டாளாய்) இருக்கும் உலோகத்தை மேல் நிலைக்கு மாற்றுவதே குரு.இதில் வைத்திய குரு, வாத குரு ,ஞான குரு(முப்புளி) என மூன்றாகக் கூறுவார்கள்.
அதுபற்றி இனி வரும் தொடர்களில் காண்போம்.   

                                                                         

Post Comment

No comments:

Post a Comment

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்