மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 29, 2012

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 54)சதுரகிரி மாவூற்று 1


சித்தர்கள் பற்றி பல விடயங்களை விளக்கி உள்ளேன் என்றாலும் அவர்களின் திறன்களோ, கொள்கைகளோ, செயல்பாடுகளோ வரைமுறையில் அடக்க முடியாது. எதற்காக இதை செய்கிறார்கள் என்று நம் சாதாரண அறிவைக் கொண்டு யோசிக்கவோ அளவிடவோ முடியாது. ஆனால் இயற்கையும் அவர்கள் நில் என்று சொன்னால் நிற்கும்.எனவேதான் அவர்களால் இயற்கை அற்புதங்களை சமைக்க (உண்டாக்க) முடிந்தது.


இப்போதும் இவர்கள் இவர்கள் இறைவன் அருளால் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார்கள்.அப்படி இறைவன் இவர்களோடு திருவிளையாடல் புரிந்த ஒரு தலத்தைப் பற்றிய பதிப்பே இது.இதில் முதலில் இந்த இடத்தைப் பற்றி சதுரகிரித் தல புராணத்தில் குறிப்பிட்டுள்ள பக்கங்கள் சிலவற்றைத் தருகிறேன்.அதில் நான் வைத்திருப்பது மிகப் பழைய புத்தகம் என்பதால்,அதில் 55&56 ம் பக்கங்கள் விடுபட்டுள்ளன.இருந்தாலும் முக்கிய விடயங்கள் விட்டுப் போகவில்லை.


இந்த இடத்திற்கு வத்திராயிருப்பிற்கு வந்து,அங்கிருந்து மஹாராஜபுரம் வழியாக தம்பிபட்டி செல்லும் பாதையில் பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி,ஏதேனும் ஆட்டோவிலோ,நடந்தோ இரண்டு கிலோ மீட்டர் வரை சென்றால் மாவூற்று என்ற இத்தலத்தை தரிசிக்கலாம்.










இப்படி இறைவன் சித்தர்களோடு சித்தர்களாய் கலந்திருந்த இடம் இது.இந்த இடத்துக்குத்தான் முதலில் சதுரகிரி செல்பவர்கள் செல்ல வேண்டும்.இந்த  மாவூற்று என்ற தீர்த்தத்தில் குளித்துவிட்டு உதயகிரி நாதனை தரிசித்துவிட்டுத்தான் சுந்தர மஹாலிங்கத்தையும் , சந்தன மஹாலிங்கத்தையும் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது ஐதீகம்.பதிவு பெரிதாகப் போனதால் இதையே இரட்டைப் பதிவாக இன்றே படங்களுடன் வெளியிடுகிறேன்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

1 comment:

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்