தமிழ் மொழியின் தொன்மை அளப்பிடற்கரியது.இந்த மொழியில் இருந்துதான் உலக மொழிகள் தோன்றின என்று ஆராயும் அளவிற்குத் தொன்மை வாய்ந்த மொழி.பழைமையான ப்ராமி எழுத்துக்களாலும், வட்டெழுத்து சங்கிலி எழுத்துக்களாகவும் எழுதி வரப்பட்டது. இப்போது தமிழ் விஞ்ஞான பூர்வமாகவும் உச்சரிப்பு ரீதியாகவும் வாய் மொழி உத்தரவுகளை(VOICE COMMAND) கணினிகள் புரிந்து கொள்ளும் விதமாகவும் உள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் தமிழ் என்பது நம் சித்தர்களின் சர நூல் சாத்திர ரீதியாகவும் தமிழ் எழுத்துக்கள் இத்தனைதான் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது பற்றிய விவரங்கள் இதோ கீழே விவரிக்கப்பட்டுள்ளன.
உயிர் எழுத்துப் பன்னிரண்டும் வலது நாசியில் ஓடக் கொண்டிருக்கும் சூரிய கலையைக் குறிக்கும்.அதாவது அந்த சூரிய கலை 12 அங்குலம் ஓடுவதை 12 உயிரெழுத்துக்களாக்கி இருக்கிறார்கள்.நெடில் ஏழும் உடலில் உள்ள ஏழு சக்கரங்களைக் குறிப்பன.இதைக் குறிக்கவே திருக்குறளில் ஏழு சீர்களை வைத்துள்ளார். மேலும் 133 அதிகாரங்களையும் வைத்துள்ளார். அதாவது 1+3+3=7.
குறில் எழுத்து ஐந்தும் ஐந்து பஞ்ச பூதங்களையும், பொறிகள் ஐந்து, பஞ்சேந்திரியங்கள்,புலன் ஐந்தைக் குறிக்கும்.நெடில் ஏழு எழுத்துக்களும்,குறில் ஐந்து எழுத்துக்களும் வைத்ததன் மற்றொரு காரணம் மனிதன் நெடிய ஆயுள்,நெடிய புகழ், நெடிய ஞானம் பெற வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு குறிலை குறைவாகவும் நெடிலை அதிகமாகவும் வைத்தார்கள்.
மெய்யெழுத்துக்கள் 18 வைத்ததன் காரணம் இடது நாசியில் ஓடும் சந்திர கலை 16 அங்குலம் ஓடுகிறது.அத்துடன் மனம், உயிர் இரண்டும் சேர்ந்து 18 மெய்யெழுத்துக்களாக வைத்துள்ளார்கள்.இந்தப் பதினெட்டு மெய்யெழுத்துக்களைக் குறிப்பாகக் கொண்டே சித்தர்கள் பதிணெண்பேர், தேவாசுர யுத்தம் 18 வருடம், இராம ராவண யுத்தம் 18 மாதங்கள், மகாபாரதப் போர் 18 நாள், சேரலாதன் இமவானுடன் போர் செய்தது 18 நாழிகை,அய்யப்பன் கோவில் படி 18, 18ம் படிக்கருப்பசாமி என்பதுவும், யோகாசனத்தில் உள்ள தடைகள் 18 ,இப்படி 18 ஆக வைத்துள்ளார்கள்.
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு,ஒரு நாழிகையான 24 நிமிடத்திற்கு 360 மூச்சு(இதை வைத்தே வட்டத்துக்கு 360 பாகைகள் வைக்கப்பட்டது ), ஒரு மணி நேரத்துக்கு 900 மூச்சு, ஒரு நாளைக்கு 21,600 மூச்சு வீதம் ஓடுகிறது.இந்த 21,600 மூச்சுக்களைக் குறிக்கவே 216 உயிர் மெய் எழுத்துக்கள் உருவாக்கப்பட்டன.
மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம்.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
மூச்சை இப்படி 21,600 வீதம் செலவு செய்தால் ஆயுள் 120 வருடம்.மூச்சின் விகிதம் கூடினால் ஆயுள் குறையும். மூச்சாற்றலை அதிகம் விரயம் செய்யாமல் பேசும் ஒரே மொழி உலகத்திலேயே தமிழ் மொழி மட்டுமே!
மேலும் தனிநிலை என்பதான ஆயுத எழுத்தை முக்கண் முதல்வனான பரமசிவனுக்கு இணையாக வைத்தார்கள்.
தமிழ் என்ற சொல்லே ஒரு வல்லெழுத்து(த), மெல்லெழுத்து(மி), ஒரு இடையின எழுத்து(ழ்) எனக் கோர்த்து உருவாக்கப்பட்டது.
இப்படி தமிழ் மொழி எழுத்துக்கள் பல காரணங்களை வைத்து எழுத்தாக்கம் செய்துள்ளார்கள்.ஆனால் எவ்வித அறிவும் இல்லாமல் அறிஞர்கள் என்று சொல்லும் சிலர், எழுத்துச் சீர்திருத்தம் என்றும் கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்று கூறித் திரிகிறார்கள்.
கிளவியாக்கம் என்பது சொல்லாக்கம் என்பதுவே!இந்த சொல்லாக்கப்படுவதற்கு பல விதிமுறைகளோடு இயற்கையோடு இயைந்த மொழி நம் தமிழ்மொழி!
கிளவியாக்கம் என்பது சொல்லாக்கம் என்பதுவே!இந்த சொல்லாக்கப்படுவதற்கு பல விதிமுறைகளோடு இயற்கையோடு இயைந்த மொழி நம் தமிழ்மொழி!
தமிழர்களைக் கொல்கிறார்கள் என்றால் தமிழையும் கொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.தமிழ்த் தாய் வாழ்த்தில் கூறியது போல உலக வழக்கு அழிந்து,ஒழிந்த ஆரியம் போல் இராமல் இளமைப் பொலிவோடு இருக்கும் தமிழணங்கை சீரழிக்க வடமொழி அறிஞர்கள் வடமொழியில்,இறந்து போன கிரந்த எழுத்துக்களை மீண்டும் உயிரளிக்க, தமிழில் ஒருங்குறியாக்கத்தில்(UNICODE) கிரந்த எழுத்துக்களைச் சேர்க்க முயற்சி நடந்து(UNICODE CONSORTIUM) வருகிறது.
ஞானத் தமிழ் மொழி நம் தமிழ்.அது சாகாமல் காப்பாற்றும் முயற்சி நாம் கண்டிப்பாக எடுத்தாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.விழிப்புணர்வு பெறுவோம்.
இதையும் பாருங்க!!!!
http://groups.google.com/group/theyva-thamizh/browse_thread/thread/652838d48e5cfd1b?hl=ta#
இதையும் பாருங்க!!!!
http://groups.google.com/group/theyva-thamizh/browse_thread/thread/652838d48e5cfd1b?hl=ta#
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்