மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, January 22, 2012

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 53)நசியம் 1


நசியம்
மூக்கில் இடும் முக்கிய நசிய (மூக்கிலிடும் மருந்து) மருந்தை இங்கே விவரிக்கிறேன்.


நசியம் என்பது மூக்கிற்கு மருந்திடுவதாகும்.இரு மாதங்களுக்கு ஒரு முறை இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.


இவ்வாறு முறையாக நசியம் செய்து வந்தால் தலைக்கனம், தலைவலி, கழுத்து வலி, நரம்பு வலி, வாய்க் கோணுதல் போன்ற வாதம்(முக வாதம்), பக்க வாதம், காக்காய் வலிப்புப் போன்ற கடுமையான நோய்கள் நம்மை அணுகா, வேலைப் பழுவினாலும் வரும் கோபம், பரபரப்பு, போன்ற உணர்வுகளாலும் தலைவலியில் மன இறுக்கம் (STRESS) உண்டாகிறது.


இதனால் பலவித பிணிகள் உண்டாகின்றன.பிணிகளில் 70% மன இறுக்கத்தினால் உண்டாகின்றது. இரத்த அழுத்தம், இருதய நோய் சம்பந்தமான வியாதிகளும் மன இறுக்கத்தினால்தான் உண்டாகின்றன.மன இறுக்கம் தலைப்பாகத்தில் உண்டாக்கும் வெப்பத்தினால்(காப்பி, டீ, குளிர் பானங்கள் குடிப்பதனாலும்,வெந்நீரில் குளிப்பதனாலும்,இதே விளைவுகள் உண்டாகின்றன.) இரத்தக் குழாய்களின் கன பரிமாணம்(DENSITY) மாறுபட்டு அவைகளின் சுருங்கி விரியும் (ELASTICITY) தன்மை பாதிக்கப்படுகின்றது.
     
நார்மல்
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குரி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குரி) 85க்கு கீழ்
அதிகபட்ச நார்மல்
130 - 139
85 - 89
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1
140 - 159
90 - 99
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 2
160 - 179
100 - 109
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 3
180 - க்கு மேல்
110 - க்கு மேல்


 இதயத்திலிருந்து ரத்தத்தை, உடலின் பல பாகங்களுக்கு அனுப்புவதில் குறைபாடு, ரத்தத்தை, “பம்ப்’ செய்யும் இடது இதய கீழறை தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் குறைபாட்டைத் தான், “ஹார்ட் பெய்லியர்’ என்கிறோம்.“ஹார்ட் பெய்லியர்’ என்றதும், நம் வாழ்வு முடிந்து விட்டது எனக் கருத வேண்டாம். இதயத்தின் இடது கீழறை சுருங்குவதில் குறைபாடு, “சிஸ்டாலிக் பெய்லியர், சிஸ்டாலிக் டிஸ்பங்ஷன்’ (LVSD LEFT VENTRICULAR SYTOLIC DYSFUNCTION) என்றழைக்கப்படுகிறது. இதய கீழறை விரிவடைவதில் குறைபாடு, “டயஸ்டாலிக் பெய்லியர், டயஸ்டாலிக் டிஸ்பங்ஷன் ‘(LVDD LEFT VENTEICULAR DIASTOLIC DYSFUNCTION ) எனப்படுகிறது.


 இதனால்சிஸ்டாலிக்(இதயம் சுருங்கும்போது உள்ள இரத்த அழுத்தம்),டயஸ்டாலிக்(இதயம் விரியும்போது உள்ள இரத்த அழுத்தம்,அழுத்தங்கள் மாறுபடுகின்றன.விளைவு இரத்த ஓட்டம் சீர் கெட்டு இரத்த அழுத்த நோயோ, இருதய நோயோ உண்டாகின்றது.


இதயம் சுருங்கும்போதுள்ள இரத்த அழுத்தம் இதயம் என்ற பம்பினால் ஏற்படுத்தப்படும் இரத்த அழுத்தம்.இப்படி இதயம் சுருங்கும்போது ஏற்படுத்தும் அழுத்தத்ததை, இதயம் விரியும் போது இரத்தக் குழாய்களில் இரத்தம் மோதும் போது வெளியே விரிந்து மீண்டும் இரத்தத்தில் ஏற்படுத்தும் இரத்த அழுத்தம்  இரத்தக் குழாய்கள் "ZIG ZAG" ஆக பயணித்து அவைகளின் சுருங்கி விரியும் (ELASTICITY) தன்மையினால், இரத்தக் குழாய்கள் வழியாக கீழ்க்கண்ட மாதிரியாக பாய்ந்தோடி இரத்த அழுத்தத்தை உடலெங்கும் நிரவுகிறது. இதையே நாம் இரத்தக் குழாய்களில் தொட்டு உணர்ந்து நாடித் துடிப்பு என்கிறோம்.இந்த நாடித் துடிப்பினால் இரத்தத்தில் உள்ள பொருள்களின் மாறுபாட்டைக் கொண்டு நோயறிதலே நமது நாடி சாஸ்திரம்.பெரு விரலின் கீழ் ஓரங்குல அளவில், இந்த நாடி மூலம் வாத பித்த கபம் போன்றவற்றை தெளிந்து உணர்ந்து அதை தீர்ப்பதே சித்த மருத்துவரின் முறை.



அல்லோபதி மருத்துவர் நோயாளர் அவரிடம் சென்றால் என்ன செய்கிறது என்று நோயாளரிடம் கேட்பார்.ஆனால் ஒரு தேர்ந்த சித்த மருத்துவர்(எனெனில் நன்கு நாடிப் பரிசோதனையில் தேர்வதற்கே குறைந்தது நான்கு வருடங்கள் ஆகும்) உங்களுக்கு இதெல்லாம் செய்கிறதா?இந்த வகை நோய் இருக்கிறதா?உடலின் இந்த இடத்தில் பிரச்சினை என்பதை புட்டு புட்டு வைப்பார்.நாடிப் பரிசோதனையில் கால் பங்கு வியாதி,சித்த மருத்துவரிடம் வந்துவிடும்.மேலும் அரைப் பங்கு மருந்தால் தீரும்.மீதமுள்ள கால் பங்கு செய்யும் தர்மத்தால்தான் தீரும் என்று அகத்தியர் கூறுகிறார். 
    
நார்மல்
சிஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குரி) 130க்கு கீழ்
டயஸ்டாலிக் இரத்த அழுத்தம்
 (மி.மீ மெர்குரி) 85க்கு கீழ்
அதிகபட்ச நார்மல்
130 - 139
85 - 89
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் -1
140 - 159
90 - 99
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 2
160 - 179
100 - 109
இரத்த கொதிப்பு ஸ்டேஜ் - 3
180 - க்கு மேல்
110 - க்கு மேல்


 இதயத்திலிருந்து ரத்தத்தை, உடலின் பல பாகங்களுக்கு அனுப்புவதில் குறைபாடு, ரத்தத்தை, “பம்ப்’ செய்யும் இடது இதய கீழறை தசைகள் சுருங்கி விரியும் தன்மையில் ஏற்படும் குறைபாட்டைத் தான், “ஹார்ட் பெய்லியர்’ என்கிறோம்.“ஹார்ட் பெய்லியர்’ என்றதும், நம் வாழ்வு முடிந்து விட்டது எனக் கருத வேண்டாம். இதயத்தின் இடது கீழறை சுருங்குவதில் குறைபாடு, “சிஸ்டாலிக் பெய்லியர், சிஸ்டாலிக் டிஸ்பங்ஷன்’ (LVSD LEFT VENTRICULAR SYTOLIC DYSFUNCTION) என்றழைக்கப்படுகிறது. இதய கீழறை விரிவடைவதில் குறைபாடு, “டயஸ்டாலிக் பெய்லியர், டயஸ்டாலிக் டிஸ்பங்ஷன் ‘(LVDD LEFT VENTEICULAR DIASTOLIC DYSFUNCTION ) எனப்படுகிறது.



 நசியம் செய்வதால், மன இறுக்கம் குறைந்து இம்மாதிரியான பிணிகளில் இருந்து நாம் விடுபடலாம்.நசிய மருந்து தயாரிக்கும் முறை மிகமிக எளிமையானது. மருந்து பிரயோகிக்கும் முறையும் மிக எளிமையானது.மருந்து தயாரிப்பதற்கான செலவும் மிகவும் குறைவு.ஒரு நபருக்கு மாசிக்காய் நசியப் பொடி தயாரிக்க 50 பைசா மட்டுமே செலவாகும்.பிரயோகிக்கும் மருந்தோ எள்ளளவுதான்.ஆனால் நமக்குக் கிட்டும் பலனோ மலையளவு.


நசியம் மருந்து தயாரிக்கும் முறைகள்:-

 1)மாசிக்காயை நெய்யில் வறுக்கவும்,வெடிக்கும் தறுவாயில் எடுத்து ஆறவிட்டு நன்றாக பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
 2)மகிழம்பூக்களை மணல்,கல்,தூசி நீக்கி நீரில் கழுவி உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 3)அ.தும்பை வேர்,ஆ)சுண்டை வேர்,இ) நெருப்பில் வாட்டிய இலுப்பைப் புண்ணாக்கு ஆகிய இம்மூன்றையும் சமன் எடை எடுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
 மேற்கண்ட மூன்றும் மூன்று விதமான நசியப் பொடி தயாரிக்கும் முறைகள்.இவை மூன்றுக்குமே ஒரே விதமான பலனைக் கொடுக்கும் தன்மை உண்டு.

நசியம் செய்யும் முறை:- 
 மூக்கின் ஒரு துவாரத்தை அடைத்துக் கொண்டு ஒரு சிட்டிகை பொடியை(இது இரு விரல்களால் எடுக்கும் அளவு) மறு துவாரத்தில் வைத்து மூச்சோடு இழுக்கவும். இவ்வாறு மறு நாசித் துவாரத்திலும் செய்யவும்.இப்படிச் செய்வதால், நரம்பு மண்டலம், சிரசு (தலை), இவைகளில் சேர்ந்துள்ள துர் நீர் அனைத்தும், வழலை என்ற சளியும் தும்மல் மூலம் மூக்கின் வழியாக வெளியேறிவிடும்.தும்மல் முதல் முறை ஒரு மணி நேரம் நீடிக்கும்.அடுத்தடுத்த முறைகளில் இது குறைவாக இருக்கும்.


ரு மாதங்களுக்கு ஒரு முறை நசியம் இட வேண்டுமென சித்தர்கள் கூறியுள்ளனர். ஆனாலும் வள்ளலார் ஆறு மாதங்களுக்கு ஒரு முறையாவது இட வேண்டும் எனக் கூறுகிறார்.


திரு சங்கர் குருசாமி அவர்கள் என் வலைப்பூவில் பல கருத்துரைகளில் கேட்டிருந்த பல விடயங்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக எனது வலைப் பூவில் இது போன்ற கட்டுரைகளையே பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை இங்கு பணிவுடன் குறிப்பிட விரும்புகிறேன்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

2 comments:

  1. சிறப்பான தகவல்கள்.. எனது கருத்துரைகளுக்கு மதிப்பளித்து விளக்கம் அளிப்பதற்கு மிக்க நன்றி..

    எனது சிறிய ஆலோசனை : இதுபோன்ற அரிய மருந்துகள் பலருக்கு பலனுடையதாக இருக்கும் என்பதால், தங்களைப் போன்றவர்கள் சிறிய அளவிலாவது தயாரித்து தேவை இருப்பவர்களுக்கு அளிக்க முன்வரலாமே..

    என்னைப் போல் இப்படிப்பட்ட மூலிகைகள் பற்றிய ஞானம் மிகக் குறைவாக‌ இருப்பவர்களுக்கும், உடல் பிரச்சினை இருப்பவர்களுக்கும், மற்றும் இப்படிப்பட்ட மூலிகைகள் கிடைக்காத சூழலில் வாழ்பவர்களுக்கும் இது மிகவும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன். இது பற்றியும் சற்று சிந்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

    பகிர்வுக்கு மிக்க நன்றி..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்