மொழி பெயர்ப்புக் கருவி

Showing posts with label அக்கு பஞ்சர் அறிவோமா. Show all posts
Showing posts with label அக்கு பஞ்சர் அறிவோமா. Show all posts

Sunday, April 3, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 11(அலகு குத்துதல்)பங்குனி உத்தரம் ஸ்பெஷல்

 பங்குனி உத்தரம் ஸ்பெஷல்
(அலகு குத்துதல்)
அன்பார்ந்த பதிவு வாசகர்களே,
நான் இராமனாதபுரத்தில் முதலில் தொடக்கக் கல்வி சபா நடேசய்யர் தொடக்கப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வி இராஜா மேல்நிலைப் பள்ளியிலும்தான் படித்தேன். அப்போது பங்குனி உத்திரம் என்பது இராமநாதபுரத்தில் எங்களது மிகப் பெரிய திருவிழா.


இராமநாதபுரத்திற்கு நாங்கள் மாறிச் சென்ற புதிதில், அந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் நீர்மோர்ப் பந்தல்களில் இலவசமாக வழங்கப்படும் நீர் மோரையும், பானக்காரத்தையும் (புளிக்கரைசலும், வெல்லமும் தண்ணீரில் கரைத்தது )மாறி மாறிக் குடித்து மாலையில் காய்ச்சல் வந்து அம்மா,அப்பாவிடம் அடி வாங்கியது தனிக்கதை.
  
அந்த பங்குனி உத்திரத்தின் போது சர்ப்பக்காவடி, மச்சக்காவடி, இளநீர்க்காவடி, ரதக் காவடி, பறவைக் காவடி, உடலெங்கும் 108 இடங்களில் அலகு குத்திக் (வேல் குத்தி)காவடி, 1008 இடங்களில் அலகு குத்திக் (வேல் குத்தி)காவடி, 108 தீச்சட்டி காவடி என்று பல வகைக் காவடிகள்வரும்.அவை நீல கண்டியூரணி அருகில் உள்ள கோவிலில் இருந்து தொடங்கி கேணிக்கரை அருகில்(புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள) வழிபடு முருகன் கோவில் வரை(கிட்டத்தட்ட இரண்டரை கிலோ மீட்டர்) ஊர்வலமாக வருவார்கள்.


இதில் அக்கு பஞ்சர் எங்கு வருகிறது. அலகு குத்தும் கொக்கிகளும்,வேல்களும் அக்கு பஞ்சர் புள்ளிகளில் குத்தப்படுவதைக் கவனியுங்கள். முதுகில் குத்தப்பட்டுள்ள அலகுகலும், கொக்கிகளும் சிறுநீர்ப்பாதையில் உள்ள சக்திப் பாதையில் குத்தப்பட்டுள்ளன.அதனால் அந்தப் புள்ளிகளுக்கு உரிய உள்ளுறுப்புக்கள் சக்தியூட்டப்பட்டு பலம் பெறுகின்றன.
       
சிறுநீர்ப்பை சக்திப் பாதை கண்களுக்கு அருகில் ஆரம்பித்து முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.
























கன்னத்தில் குத்தப்படும் அலகுகள், இரைப்பை,  பித்தப்பை, இதயம், பெருங்குடல் சக்தி நாளங்களில் சக்தியூட்டுகின்றன.


இதயம் சக்தி நாளம் வாயில் முன் நாக்கில் திறக்கிறது. ஸ்பிளீன் (மண்ணீரல்) சக்தி நாளம் வாயில் நாக்கின் பின் பகுதியில் திறக்கிறது. நாக்கில் அலகு குத்தும் நபருக்கு இதயத்தாக்குதல் (HEART ATTACK) வருவதேயில்லை. மண்ணீரல் சக்தி நாளமும் தூண்டப்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு உடலில் உள்ள நோய்களும் குணமாக்கப்பட்டு, எதிர்காலத்தில் வரவிருக்கும் நோய்களும் வர விடாமல், அலகு குத்துதலினால் உடல் காக்கப்படுகிறது.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Monday, February 21, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 11

கண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க.


கண்களுக்கு அருகிலிருந்து ஆரம்பிப்பதால் கண் பார்வைக் குறைவையும் இது போக்கும்.















 சிறுநீர்ப்பை சக்திப் பாதையின் 11 வது புள்ளி எலும்புகளை சரி செய்யும்(INFLUENTIAL POINT FOR BONE),12 வது புள்ளி தோல் அழற்சிகளை(SKIN ALLERGY) சரி செய்யும்,13 வது புள்ளி நுரையீரலை(LUNGS) சரி செய்யும்,14 வது புள்ளி இதய உறையை சரி செய்யும்,15 வது புள்ளி இதயத்தை(HEART) சரி செய்யும்,16 வது புள்ளி அனைத்து விதமான ஒவ்வாமையையும்(ALL ALLERGY ) சரி செய்யும்,17 வது புள்ளி உதர விதானத்தையும்( DIAPHRAGM ) இரத்தத்தையும் சரி செய்யும்,18வது புள்ளி ஈரலை சரிசெய்யும்(LIVER),19வது புள்ளி பித்தப்பையை(GALL BLADDER) சரிசெய்யும்,20 வது புள்ளி மண்ணீரலை(SPLEEN),21 வது புள்ளி இரைப்பை மற்றும் வயிற்றை (STOMACH) சரி செய்யும்,22 வது புள்ளி முக்குழி வெப்பப் பாதையை(TRIPLE WARMER) சரி செய்யும்,23 வது புள்ளி சிறு நீரகங்களை(KIDNEYS) சரி செய்யும்,24 வது புள்ளி இரத்தம் ஒழுகுவதை(LUMBAGO, HEMORRHOIDS) கட்டுப்படுத்தும்,25 வது புள்ளி பெருங்குடலைச்(LARGE INTESTINE) சரி செய்யும்,26 வது புள்ளி அதீத மலப் போக்கு, மற்றும் பல வியாதிகளைப் போக்கும்(LUMBAGO, DIARRHEA, INCONTINENCE, CYSTITIS), 27 வது புள்ளி சிறு குடலைச் சரி செய்யும்(SMALL INTESTINE),28 வது புள்ளி சிறுநீர்ப்பையை சரி செய்யும்(URINARY BLADDER),29 வது புள்ளி இரத்தப் போக்கு,முறையற்ற மாதவிடாயை சரி செய்யும்(HEMORRHOIDS,IRREGULAR MENSES).


எனவே மேற்கண்ட சிறுநீர்ப்பையின் அக்குபஞ்சர் புள்ளிகள் பீஷ்மப் புள்ளிகள் என இந்திய அக்குபஞ்சர் மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.


இதே அக்கு புள்ளிகளைத் தூண்ட யோகாவில் பவன முக்தாசனம் என்ற ஒரு அற்புத ஆசனம் உள்ளது.அதையும் கீழே கொடுத்துள்ளேன்.பவனம் என்றால் காற்று அல்லது வாயு முக்தா என்பது விடுவிப்பு ஆசனம் என்பது யோக நிலை. எனவே இது வாயு விடுவிப்பு ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. இதை பயிற்சி செய்யும் ஒருவர் சீரண உறுப்புகளை மசாஜ் செய்வதோடு வயிறு மற்றும் குடல்களில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்றுகின்றனர்.மேலும் அதிக பயனாக உடலின் உள்ளுறுப்புக்களுக்கு அதீத பலத்தையும் அளிக்கின்றனர்.அத்துடன் மேலதிக ஆயுளையும் பெறுகின்றனர்.



இத்துடன் முதுகை நன்கு தரையில் உருட்டினால் மிக மிக நன்று.பக்கவாட்டுப் புறளல் செய்தால் அது மிக மிக நன்று.  

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Post Comment

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 10

பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.

மகாபாரத யுத்தம் மார்கழியில் அமாவாசையில் தொடங்கியது. பீஷ்மர் கௌரவப்படைக்குத் தலைமையேற்றார். அர்ச்சுனன் அம்புகள் அவர் உடல் முழுவதும் துளைத்தன.


ஆனாலும் தனக்கு எப்போது மரணம் வேண்டுமோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும் என்ற வரம் அவர் தந்தை சந்தனு கொடுத்ததால் அவர் உயிரைப் பிடித்தபடி நாட்கள் உயிரோடு கிடந்தார். அவருக்கென்று அம்புகளால் படுக்கை அமைத்துக்கொடுத்தான் அர்ச்சுனன்.

தட்சிணாயணம் என்பது தேவர்களுக்கு இரவு பீஷ்மர் இந்தக்காலததில் மரணத்தைத் தழுவ விரும்பவில்லை.
தேவர்கள் விழித்து வரும் நாளான உத்தராயணக் காலம் வரை அம்புப் படுக்கையில் இருந்தார். அந்த நேரத்தில் தான் தருமருக்கு அறங்கள் பற்றி உபதேசித்தார். இந்தச்சந்தர்ப்பத்தில் தான் பிறந்தது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்.

பீஷ்மர் இறைவனடி சேர்ந்த நாள் ரதசப்தமி. அந்த மகானின் நினைவாக அர்க்கியம் விடுவது வழக்கம். மாக மாதம் என்று சொல்லும் தை லிருந்து மாசி பத்து வரை மாக ஸ்னானம் செய்வது வழக்கம்.பீஷ்ம நிர்யாணம் அஷ்டமி நாளாகக் கொண்டு பீஷ்மாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.

சக்தியுள்ள சிறு நீர்ப்பை சக்திப் பாதையைப் பற்றிய பதிவே இது. உடலில் உள்ள உறுப்புக்களை, உறுப்புக்களாக மட்டுமே பார்க்கும் அல்லோபதி வைத்திய முறை.அது அறிவற்ற மருத்துவம்.அது அதீத வயது முதிர்ச்சியில்லாத அனுபவமில்லாத வைத்திய முறை.சமீபமாக சுமார் 200 வருடங்களே அதன் வயது.


ஆனால் அக்கு பஞ்சர் என்பது மிகப் பழைமையானது.சுமார் 5000 வருடங்கள் பழைமையானது.நமது சித்த வைத்தியம் அதைவிட பழைமையானது.நமது சித்த வைத்தியத்திலும் குத்தூசி வைத்தியம் என்ற பெயரில் கையாளப்பட்டு வந்துள்ளது.

உடலின் உள்ளுறுப்புக்களை பஞ்ச பூத சக்திப் பிறப்புகளின் இருப்பிடமாகவும்( ORGANS ),இன்றியமையாச் சக்தியோட்டங்களின் வாய்க்கால்களாவும் இருக்கின்றன.

பீஷ்மரின் மரணத்தை தள்ளிப் போட்டது அவர் தகப்பனாரின் வரமென்றால் அர்ச்சுனரின் அம்புப்படுக்கை தேவையில்லையே!


அந்த அம்புப் படுக்கையால்தான் சிறுநீர்ப் பையின் சக்திப்பாதையில் உள்ள உள்ளுறுப்புக்களின் புள்ளிகள் துளைக்கப்பட்டு அதன் மூலம் உடலின் இன்றியமையாச் சக்தி(VITAL FORCE) பெறப்பட்டு அதன் மூலமே ஆயுள் நிலை நாட்டப்பட்டு வந்துள்ளது புலனாகும்.   


படங்கள் உதவி மற்றும் தகவல் உதவிக்கு  http://www.educationalservice.net/2010/february/es20100212_beeshma-ashtami.php  இணைய தளத்துக்கு மிக்க நன்றி.

இணைய தளத்துக்கு மிக்க நன்றி.


சிறுநீர்ப்பையின் உட்புறத் தோற்றம்.


பதிவு பெரியதாகப் போனதால் அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 10,அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 11 இரட்டைப் பதிவாக ஒரே நாளில் வெளியிடுகிறேன்.பார்த்துப் பயன் பெறுங்கள். 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன் 

Post Comment

Thursday, January 27, 2011

அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 9

அக்கு பஞ்சர் அறிவோமா:-
பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.

நான் ஒரு முறை ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு சிறு கைக்குழந்தையை தூக்கி வந்திருந்தார்கள்.அப்போது அங்கு கிராமத்து மருத்துவச்சி அங்கே வந்திருந்தார்.

அந்தக் குழந்தைக்கு குடல் ஏறியிருக்கிறது என்று குழந்தையின் தாய் கூறினாள்.அந்த மருத்துவச்சியும் குழந்தையின் முழங்கையின் மேல் பகுதியில் கையின் பின் பக்கத்தை பிடித்தவுடன் குழந்தை வீரிட்டு அழுதது.

ஆமாம் குடல் ஏறியிருக்கிறது. இனிமேல் குழந்தையைப் யாரையும் பார்த்து தூக்கச் சொல்லுங்கள்.சிறு குழந்தைகளைவிட்டுத் தூக்கச் சொல்லாதீர்கள் என்றார் மருத்துவச்சி.

நான் இதைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.அந்த மருத்துவச்சியைப் பார்த்துக் கேட்டேன்.குடல் ஏறி இருந்தால் வயிற்றையல்லவா பார்க்க வேண்டும், நீங்கள் மேற்கையின் புறத்தை அழுத்தி பார்த்துவிட்டு குடல் ஏறி இருக்கிறது என்று கூறுகிறீர்களே! என்று கேட்டேன்.

அதற்கு அந்த பெண்மணி கூறினார்கள்,இது போன்றே நாங்கள் பல தலைமுறையாக வைத்தியம் பார்த்து வருகிறோம்.நாங்கள் சொன்ன சொல் தப்பினது இல்லை,மிகச் சரியாக இருக்கும் என்றார்கள்.அதன் பிறகு அந்தக் குழந்தைக்கு வயிற்றின் மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் விளக்கெண்ணெய் தடவி மேலிருந்து கீழ்ப்புறமாக மட்டும் சீவினாற் போல அழுத்தி தேய்த்து தடவி விட்டவுடன் குழந்தை குணமானது.பிறகு அதே இடத்தை தொட்டால் அழவில்லை. குழந்தை குணமானதைப் புரிந்து கொண்டோம்.  

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின் அக்கு பஞ்சர் கற்றுக் கொண்ட பின் இதற்கான விளக்கம் கிடைத்தது.

பெருங் குடல் சக்தி நாளம் 
சிறு குடல் சக்தி நாளம்

படத்தைப் பாருங்கள்.சிறு குடல் மற்றும் பெருங்குடல் சக்தி நாளங்கள் கையின் மேல் புறம் மற்றும் கீழ்ப் புறம் ஓடுவதைக் கவனியுங்கள்.

அக்கு பஞ்சரில் அஹ் - ஷி புள்ளி (AH - SHI POINT) எனக் கூறுவார்கள்.அதாவது அந்தப் புள்ளியைத் தொட்டாலோ அழுத்தினாலோ அஹ் வலிக்கிறதே என்ற  வேதனையொலி வாயிலிருந்து கிளம்பும்.இதே சிறு குழந்தையாக இருந்தால் வீரிட்டு அழும்.

சிறுகுடல் மற்றும் பெருங்குடலுக்கான அஹ் - ஷி புள்ளிகள் (AH - SHI POINT) இந்த இடத்தில் நிலை கொண்டிருப்பதையே இது காட்டுகிறது.

மேலும் பெருவிரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்கும் இடைப்பட்ட வர்மப் பகுதியை கவளி வர்மம் என்று கூறுவார்கள்.வெற்றிலைக் கவளி என்று கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.கைக்கட்டை விரலுக்கும் மற்ற நான்கு விரல்களுக்குமிடையே வைத்திருக்க முடியும் அளவு வெற்றிலையே ஒரு கவளி வெற்றிலை என்பார்கள்.

இந்த கவளி வர்மம் எல்லா வர்மங்களை இளக்கும் பகுதியாகும்.இது அக்குபஞ்சரில் பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளியாகும்(HOKU).அதை LI 4 என்பார்கள்.அதற்கு உடம்பில் உள்ள கெட்டதை நீக்கும் பெரிய புள்ளி(GREAT ELIMINATOR) என்றழைக்கிறார்கள்.

பெருங்குடல் சக்தி நாளத்தின் நாலாவது புள்ளி(HOKU)
LI 4 (LARGE INTESTINE 4)
மேற்கண்ட புள்ளியில் சிகிச்சை அளிப்பதன் மூலம் கீழ்க்கண்ட வியாதிகளைக் குணப்படுத்தலாம்.இது உடலிலுள்ள முக்கியமான 6 தொலைவுப் புள்ளிகளில் ஒன்று.
(1)HEADACHE தலைவலி(2)TOOTHACHE பல்வலி 3)MIGRAINEஒற்றைத் தலைவலி(4)TRIGEMINAL NEURALGIA கடும் நரம்பு வலியால் ஏற்படுவது (5)PAIN AND PARALYSIS OF THE UPPER EXTREMITY இடுப்பின் மேல் பகுதியில் ஏற்படும் வலிகள் மற்றும் வாதம்.  (6)RHINITIS(7)PHARYNGITIS(8)FACIAL PARALYSIS முகவாதம்(9)GOUTமுன் கழுத்து கழலை(10)PAINFUL CONDITIONS OF EYE கண்வலி (11)HYPERHYDROSIS (12) MANDIPULAR ARTHRITIS(13)LARYNGITIS(14)BRONCHITIS சுவாச காசம்(இரைப்பிருமல்)

IF YOU WANT TO USE SINGLE POINT IN THE BODY FOR PAIN LI 4 IS THE POINT.IT IS USEFUL IN ALL TYPES OF ARTHRITIS.IT TONES UP THE ENTIRE LARGE INTESTINE FUNCTION.IT ACTS AS AN ELIMINATOR OF PHYSICAL AND MENTAL TOXINS OR TENSIONS. IT IS USED FOR PAIN AND PARALYSIS OF UPPER LIMB.
IT IS ALSO USEFUL IN
(1)ALL KIND OF HEADACHE ARISING OUT OF FAULTY ELIMINATION
(2) INFLAMMATION OF MOUTH, EYES, NOSE, SINUSES, AND TEETH.
(3) FEVER WITH THIRST AND FEVER WITH SHIVERING.
(4) IN SKIN CONDITIONS LIKE BOILS AND ACNE.
(5) PAIN RELIEF POINT IN SURGICAL ANESTHESIA.
(6) IT IS USED AS A MAJOR ANALGESIC POINT IN PAINLESS CHILDBIRTH.

சித்த வைத்தியத்தில் எந்த வியாதிக்கும் முதலில் நாடி பார்க்கும் போது கால் பங்கு வியாதி குணமாகும் .அந்த வியாதியும் வைத்தியன் உடம்பில் சேராமல் இருக்க வேண்டுமானால்,நாடி பார்க்கும் கையில்  பட்டுத் துணி போர்த்தே பார்க்க வேண்டும்.பார்த்த பின் நாடி பார்த்த கையை தரையில் மூன்று முறை தட்ட வேண்டும்.அப்போதுதான் அந்த வியாதி வன்மை (NEGATIVENESS OF THE PATIENTS BODY) வைத்தியரைத் தாக்காது பூமிக்குப் போய்விடும் (GROUNDED) என்று அகத்தியர் நாடி சாஸ்திரம் கூறுகிறது.

மலக் குடலான பெருங்குடலைச் சுத்தப்படுத்த பெரு மலம் போக்கிகளைக் (PURGATIVES) கொடுத்து மீதி வியாதியில் அரைப் பங்கை குணம் ஆக்குகிறார்கள் சித்த வைத்தியர்கள்.பின் மீதி உள்ள கால் பங்கு வியாதியைத்தான் சித்த வைத்தியர் மருந்தைக் கொடுத்து குணம் அளிக்கிறார்கள்.

பெருங்குடலை ஏன் சித்த வைத்தியர்கள் ஏன் சுத்தப்படுத்தினார்கள் என்று எனக்குப் புரிந்துவிட்டது. உங்களுக்கு புரிந்ததா! கருத்துரையிடுங்கள்! 


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment