மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, November 30, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 49)வர்மம்


அன்புள்ள பதிவு வாசகர்களே,
வர்மம் என்றால் என்ன.அது எப்படி செயல்படுகிறது,போன்ற விடயங்களை தெரிந்து கொள்வதற்கு முன் வர்மத்திற்கு பால பாடமான கைபிடி விளையாட்டு என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

கைபிடி விளையாட்டு என்றால் ஏதோ விளையாட்டு என்று எண்ண வேண்டாம். அது கை மூட்டுகளை பிரிப்பது (ஒடிப்பது).மற்றும் சேர்ப்பது பற்றிய பாடமே.எனது தாத்தா பல ஓலைச் சுவடிப் பிரதிகளிலும் கையெழுத்துப் பிரதிகளிலும் எழுதி உள்ளார்.இதை நம் முப்பாட்டன் போதி தர்மா கற்றுக் கொடுத்து சீனர்களான நம் அண்ணாச்சிகள் பாதுகாத்து வைத்துள்ள விடயம்தான் அது.

அதாவது கை கால்கள் மடங்கும் திசைக்கு எதிராக ஒரு முறுக்கை கை கால்களில் ஏற்றும் தந்திரம்தான்தான் அது.முறுக்கு மீண்டும் அவிழ்க்கப்படாமல் எதிர்க்கப்படுமானால் கை கால்களில் உள்ள மூட்டுக்கள் முறியும்.கை கால்கள் மட்டுமல்ல முதுகு கழுத்து ஆகிய மூட்டுக்களும்தான்.

எச்சரிக்கை அனுபவமில்லாமல் பரீட்சித்து பார்க்க வேண்டாம்.உயிரையே இழக்க நேரிடலாம்.













இதை அவர்கள் "SHAOLIN CHIN NA"என்று அழைக்கிறார்கள்.இது நம் நாட்டிற்கு கற்றுக் கொடுக்க யாரேனும் வந்தால் ஓடிப்போய் நாமும் கற்றுக் கொள்ள வரிசையில் நிற்போம்.நம் நுண்கலைகளை நாம் எவ்வளவு அழித்துவிட்டு வரிசையில் நிற்க தயாராகிவிட்டோம் பார்த்தீர்களா????

இது பற்றி நாம் மிகவும் பெருமை கொள்ளலாம்.

இனிமேலாவது நம் சித்தர் கலைகளை போற்றிப் பாதுகாப்போம்.


இதோ இந்த இணைப்புக்களை பார்வையிடுங்கள்.

http://www.shaolin.org/shaolin/chin-na.html
http://legendskarate.com/category/chin-na/shaolin-chin-na/
http://www.youtube.com/watch?v=Yvt5CHWC-Ag&feature=related

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Wednesday, November 23, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 48)ஞானம் 3


ஞானம் என்றால் என்ன?????(பாகம்3):-

அன்புள்ள பதிவு வாசகர்களே,
ஞானம் என்றால் என்ன????ஞானம் அடைவது எப்படி??????நான் ஞானியாகிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது எப்படி????இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.அல்லது எழாமலும் இருக்கலாம்.


மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள சித்தர் விஞ்ஞானம் பாகம்(44),ஞானம் என்றால் என்ன?(பாகம் 2) என்ற பதிவை படித்துவிட்டு இந்தப் பதிவுக்கு வந்தால் நன்கு புரியும்.


மாயா உலகத்தில் மதி மயங்கி வாழ்நாளை வீணாக்காதீர்கள். பெறற்கரிய மனிதப் பிறவி கிடைத்துள்ளது,என்பதை உணருங்கள்.


எட்டடிக் கோயிலான இந்த உடம்புக்குள் இறைவன் இருப்பதை உணருங்கள்.அங்கே நிஷ்டையில் அமர்ந்து இறைவனை காணுங்கள்.இதனால் மாயா நித்திரை மறைந்து தூங்காமல் தூங்கிச் சுகம் காணலாம்.அகங்காரத்தின் பிடியில் அகப்படாமல் இறைவன் நம் உள்ளத்தில் இருப்பதை உணருங்கள்.


தேகம் அழியாமல் என்றும் நிலைத்திருக்கும் என்றெண்ணி, வாழ்நாளை வீணிலே கழிக்காமல் திகட்டாத அருட்பெருஞ்ஜோதியில் கலந்து இருந்திருந்து,இறைவனை காணாமல் கண்டு கழிக்கும் நாள் எந்நாளோ?????


ஆசையின் கயிற்றினில் கட்டப்பட்டு,பம்பரம் ஆடுவதுபோல மனித மனமும் ஆடியபடியே இருக்கிறது.அந்த மனம் ஐம்புலன்களில் மனம் போனபடி இருக்கிறது.அது சுதந்திரமல்ல.மன ஆற்றல் வீணடிப்பதால்,ஆத்ம பலம் வீணடிக்கப்படுகிறது.ஐம்புலன்களையும் சிறைதனில் தள்ளி நீ அமர்ந்தால் அமைதி உன்னைத் தேடி வரும்.

காயாகி ,கனியாகி கனிந்திடும் நிலையாகி கண்ணான ஜோதியிலே கலப்பதுநான் எக்காலம். இறைவனான சிவனின் குஞ்சித பாதத்தின் சதங்கையில் (திருவடி தீட்சை) ஓம்கார நாதம் இசைக்கிறது. கேட்டு இன்புறுங்கள்.சுய நலமற்று பக்குவ நிலையடைந்தால் எல்லோர் வாழ்வும் இனிக்கும்.   


நந்தனார் தினமும் எல்லோரிடமும் நான் சிதம்பரத்திற்கு போகப் போகிறேன் என்று கூறிக் கொண்டே இருப்பார்.ஆனால் ஒரு நாளும் போவில்லை.எனவே எல்லோரும் அவரை திருநாளைப் போவார் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.


ஒருநாள் அவர் வேலை பார்க்கும் அந்தணரிடம் போய் நான் சிதம்பரத்திற்கு போக வேண்டும் என கேட்கிறார்.அந்தணர் அவருக்கு ஒரு நிபந்தனை விதிக்கிறார்.அவரது அம்பத்தியோரு வேலி நிலத்தையும் உழுது கொத்தி பண்படுத்தி,தொழி அடித்து,பரம்பை அடித்து, நட்டு,நெல்லை முழுவதும் வளர்த்து அறுவடைக்கு சித்தம் செய்துவிட்டு போகச் சொல்லுகிறார்.


வருந்தி நிற்கும் நந்தனாருக்காக இறைவன் தனது பூத கணங்களினால் ஒரே நாள் இரவில் இத்தனை பணிகளையும் முடித்து வைக்கிறார்.இத்தனை பேறு பெற்ற மக்கள் பிறந்த நம் நாட்டில்,நந்தனார் நுழைந்த தெற்கு வாயில், இன்றும் சிதம்பரத்தில் மூடியே வைக்கப்பட்டுள்ளது.நந்தனார் தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த காரணத்தால் இறைவன் அவரை ஒதுக்கவில்லை.நாம் ஏன் ஒதுக்க வேண்டும்????????    
சிவலோகநாதனான இறைவனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர். அற்ப சுகத்தை நினைந்தோம்,அரனான சிவனின் திருவடிகளை (திருவடி நம் உடலில் எது என்று தெளிந்திடுவீர்) மறந்துவிட்டோம். ஆசைக்கடலில் வீழ்ந்து நல் அறிவுக்கறிவான சாகாக்கலையை மறந்துவிட்டோம். பாசமகல வழிதேடாமல் (யமப் பாசமகல வழிதேடாமல் {மரணம்} ) பரதவிக்கும் பாவியாகி விட்டோம்.சிவலோகநாதனான இறைவனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர். 


பவ பயங்களைப் போக்கி சிவன் பரம பதத்தைக் கொடுப்பார்.அப்படிப்பட்ட சிவலோகநாதனான இறைவனைக் கண்டு சேவித்திடுவோம் வாரீர்.   



சிவலோகநாதனான இறைவனைக் காண வேண்டாமோ????சிவனைக் காண வேண்டாமோ???தில்லையைக் காண வேண்டாமோ??? இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரத்தைக் காண வேண்டாமோ????


வீணில் சேரியைச் சுற்றி சுற்றி வந்தால்{இதற்கு ஆழ்ந்த பொருள் வேறு} (மேதினி) உலகம் போற்றும் சிதம்பர சேவனைக் காண வேண்டாமோ??? ஓட்டைச் சடலம் ஒடுங்க, எலும்புக் கூட்டில் இருந்து உயிர் ஓட்டம் பிடிக்கும் முன்னால் சிவனைக் காண வேண்டாமோ???????
வையத்திலே(இந்த உலகத்தில்) கருப்பையில் கிடந்து,பிறந்து பிறந்து உழலும் இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபட வழி தெரியாது உள்ளம் நைந்து போகாமல் காக்கும் ஐயனான சிவன் திருநடனத்தைக் கண்டு இன்றே தெளிந்து கொள்ளுங்கள். இரு கண் இருக்கும் போதே விண்ணுயர் கோபுரத்தைக் காண வேண்டாமோ????




ஐயே! மெத்தக் கடினம்!!!சிவனடிமையாய் இருப்பது உமதடிமையாய் இருப்பதைவிட மெத்தக் கடினம். பொய்யாத பொன்னம்பலக்கையாய் இருக்குமிடம் அது.மெய்யை மெய்யாக்கிய மனிதருக்கு பொய்யாது கண்டு கொள்ளும் இடம் அது.


ஐயே! மெத்தக் கடினம்!!மானாபிமானம் விட்டு தானாகி நின்று அவதூதராய் ஆனவருக்கு தேனாகும் பதி அது.ஞானாதி பதியும் அதுதான். அந்தப் பதிக்கு வாருங்கள்.கதி பெருங்கள். இறைவனின் ஆற்றலை உள்ளே சேருங்கள்.அது போதும் இந்த உடலெடுத்த புண்ணியத்தை அடைய!!!


முப்பாழும் தாண்டி வந்து அப்பாலே நின்றவர்க்கு இப்பாதை(சுடுகாட்டுக்கு செல்லும் சாதாரண இறப்புப் பாதை) கிடையாது.தப்பாமல் இறைவன் திருநடனம் காணலாம்.அன்பர்களெல்லாம் கூடி இதைப் பாடுவார்கள்.


இதைக் கண்டார் யாரும் இங்கே (சாலோகமான {சாகும் லோகம்} பூலோகத்தில்) இருப்பது கிடையாது. விண்டு எடுத்து விளக்கி யாரும் சொன்னதில்லை.அண்டாண்ட கோடியெல்லாம் ஒன்றாய்ச் சமைந்தது போல் நிற்கும் அந்த பெரும் ஜோதி வடிவான இறைவனை, இந்த ஏழையான நான் எப்படி வருணிப்பேன்.அங்கே செல்ல நேரமாகுதல்லவோ???வீணில் காலங் கழிக்காதீர்கள் இறைவனைக் காண முயலுங்கள்.



இறைவனை என்னப்பனல்லவா!!என் தாயுமல்லவா!! பொன்னப்பனல்லவா!!!பொன்னம்பலத்தவா!!!! என்று அழைக்கிறார்.அவருக்கு 52 வேலி நிலமும் விளைவித்துக் கொடுத்ததைப் பார்த்தும் நம்பிக்கை வரவில்லை.சொப்பனமோ எந்தன் அப்பன் திருவருள்,கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே!!!!!!!ஆடிய பாதனே!!அம்பல வாணனே நீ ஆண்ட கருணையை ஏழை அறிவேனோ!!!! என்று பலவாறாக பாடி மகிழ்ந்து துதிக்கிறார்.




இப்படிப்பட்ட ஞானிகள் பிறந்த திருநாட்டில் லஞ்சம் ஊழல் பெருத்தாடுவது எதனால்???ஆசை அதிகம் வைப்பதனால்!!!!!விளைவு துன்பங்கள்.ஆசை கொள்ளாதீர்கள்.ஆசையே துன்பத்திற்குக் காரணம்.
அறுமின் அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்
என்று கூறிய திருமூலர் வழி வந்த நாம் ஆசையை அறுத்தால் இறைவனோடு இறண்டறக் கலக்கலாம்.




வள்ளுவர் வழங்கிய குறளில் மூன்று குறள்கள் உதடு ஒட்டாதவை,அதில் துறவு என்ற தலைப்பில் உள்ள குறள் உதடு ஒட்டாதது.ஏனெனில் துறவியும் இது போல் ஒட்டாமல் இருக்க வேண்டும் என்றுதான் இப்படிக் குறளை அமைத்துள்ளார்.
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
எதை எதை எல்லாம் விலக்குகிறோமா,அதனதன் மூலம் வரும் துன்பமும் நமக்கில்லை.


உதாரணத்துக்கு ஒரு பைக்கை வாங்குகிறோம் என்றால்,(1)அதற்கு பெட்ரோல் போடவேண்டும் அதற்கு(பேருந்தில் செல்வதைவிட) அதிக பணம் வேண்டும்.அதற்காக வேறு அதிகம் சம்பாதிக்க வேண்டும்.(2)பஞ்சர் ஆனால் அதை உருட்டிக் கொண்டு சென்று பஞ்சர் பார்க்க வேண்டும்(3)அது ரிப்பேர் ஆனால் அது நம்மை சுமந்தது போக நாம் அதை சுமக்க வேண்டும்.


இப்போது பைக்கை வாங்கவில்லையானால் இந்த தொல்லைகளையும்,துன்பங்களையும் சேர்த்து வாங்கவில்லை அல்லவா???
யோசியுங்கள்.ஆசைகளை துறங்கள் துன்பங்களை தொலையுங்கள்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Thursday, November 17, 2011

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 9


திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.


திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.இவ்வரிய நோய் நீக்கும் உணவுக் கலையையும், நோய் வருமுன் காக்கும் நோயணுகா விதியைத் தெரிந்து கற்க ஓர் அரிய வாய்ப்பு இதோ கீழே காத்திருக்கிறது.


வரும் டிசம்பர் மாதம் 01-12-2011 முதல் டிசம்பர் மாதம் 07-12-2011 வரை ஆகிய தேதிகளில் யோகா மற்றும் இயற்கை நல வாழ்வு முகாம் குலசேகரபட்டணத்தில் நடக்க இருக்கிறது.






இந்த முகாமில் சூரிய ஒளி தியானப் பயிற்சி சிறப்புப் பயிற்சியாக வழங்கப்படுகிறது. பயன் பெற்றுய்க!!!!!!!


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment