ஒரு கண்ணீர் அஞ்சலியுடன் கூடிய இரங்கல்
திரு. மூ. ஆ. அப்பன் அவர்களின், மனைவி சென்ற வாரம் இயற்கை எய்தினார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் திரு. மூ. ஆ. அப்பன் அவர்களின் குடும்பத்தாருக்கு, நமது வலைப்பூவின் சார்பாகவும், நமது வலைப்பூ வாசகர்களின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று ஞாயிற்றுக் கிழமை(03-04-2011)அன்னாரின் எட்டாம் நாள் இரங்கல் காரியங்கள் நடைபெற உள்ளது. நமது வலைப்பூ அன்பர்கள் அவருடன் பேசி ஆறுதல் படுத்த வேண்டுகிறேன்.அவரின் அலை பேசி எண்கள் 9944042986, 9380873645.
ஊருக்கு உழைப்பவர்கள் என்றும் உறங்குவதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அவர் இயற்கை நல வாழ்வு முகாம் முடிவு செய்திருந்ததை மாற்றவில்லை. எனவே கீழ்க்கண்டவாறு இயற்கை நலவாழ்வு முகாம் நடை பெறும்.
திரு. மூ .ஆ . அப்பன் அவர்களின் அலை பேசி தகவலின் பேரில் இயற்கை நல வாழ்வு முகாம் மே மாதம் 5 முதல் 11 ம் தேதி முடிய என்றிருந்த இயற்கை நல வாழ்வு முகாம் மாற்றப்பட்டு மே மாதம் 1 முதல் 7 ம் தேதி முடிய, ஆகிய 7 நாட்களில் நடை பெற இருக்கிறது, குலசேகரபட்டணம் சென்று பயனடையவும்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்