ஒரு கண்ணீர் அஞ்சலியுடன் கூடிய இரங்கல்
திரு. மூ. ஆ. அப்பன் அவர்களின், மனைவி சென்ற வாரம் இயற்கை எய்தினார்கள். அன்னாரின் பிரிவால் வாடும் திரு. மூ. ஆ. அப்பன் அவர்களின் குடும்பத்தாருக்கு, நமது வலைப்பூவின் சார்பாகவும், நமது வலைப்பூ வாசகர்களின் சார்பாகவும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று ஞாயிற்றுக் கிழமை(03-04-2011)அன்னாரின் எட்டாம் நாள் இரங்கல் காரியங்கள் நடைபெற உள்ளது. நமது வலைப்பூ அன்பர்கள் அவருடன் பேசி ஆறுதல் படுத்த வேண்டுகிறேன்.அவரின் அலை பேசி எண்கள் 9944042986, 9380873645.
ஊருக்கு உழைப்பவர்கள் என்றும் உறங்குவதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அவர் இயற்கை நல வாழ்வு முகாம் முடிவு செய்திருந்ததை மாற்றவில்லை. எனவே கீழ்க்கண்டவாறு இயற்கை நலவாழ்வு முகாம் நடை பெறும்.
திரு. மூ .ஆ . அப்பன் அவர்களின் அலை பேசி தகவலின் பேரில் இயற்கை நல வாழ்வு முகாம் மே மாதம் 5 முதல் 11 ம் தேதி முடிய என்றிருந்த இயற்கை நல வாழ்வு முகாம் மாற்றப்பட்டு மே மாதம் 1 முதல் 7 ம் தேதி முடிய, ஆகிய 7 நாட்களில் நடை பெற இருக்கிறது, குலசேகரபட்டணம் சென்று பயனடையவும்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
மூ.ஆ. அப்பன் அவர்களின் துணைவியார் ஆன்மா சாந்தி அடைய எல்லா வல்ல இறையிடம் வேண்டுகிறேன்.
ReplyDeleteவருத்தமான செய்தி
ReplyDeleteஅவர்களது ஆன்மாவின் மேன்மைக்கு
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
அவர்களின் ஆன்மா மகரிஷிகளின் அருள் ஒளியால் ஒளி நிலை பெறட்டும்.
ReplyDeleteமனைவியை இழந்து வாடும் திரு. மு.ஆ. அப்பன் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். துன்பத்திலும் தாம் ஏற்றுக்கொண்ட கடமையை மறவாத அந்த மாமனிதருக்கு தலைவணங்குகிறேன்.
ReplyDeleteதிரு மூ.ஆ.அப்பன் அவர்களின் துணைவியாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.இதற்கு முன் இதே தேதியில் மற்றொரு பதிவு இட்டிருக்கிறேன்.அனைவரும் பார்த்தீர்களா.கருத்துரையிடவும்.
ReplyDeleteமிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Dear Sir,
ReplyDeleteKindly convey my regrets on Shri A Appan's wife and I pray God to bless him and guide him in making such naturopathic programs. Also God be with you in giving us such useful information.
ji adutha pathivu podave illa ???
ReplyDeleteஎல்லாம் வல்ல இறை அருட்கருணை இடந்தரவில்லை. அது இடந் தந்தால் அடுத்த பதிவுக்கும் இடம் உண்டு. மக்களின் விருப்பமே மஹேசன் விருப்பம்.அதிக மக்கள் விரும்பி இருந்தால் மஹேசனும் விரும்பி இருப்பான்.அதிக மக்கள் விரும்பவில்லை. எனவே மஹேசனும் விரும்பவில்லை. எனவே அதற்கான சூழல் எனக்கு உருவாகவில்லை. எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!
ReplyDeleteமிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
வருத்தமான செய்தி
ReplyDeleteஅவர்களது ஆன்மாவின் மேன்மைக்கு
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்