பங்குனி உத்தரம் ஸ்பெஷல்
(அலகு குத்துதல்)
அன்பார்ந்த பதிவு வாசகர்களே,
நான் இராமனாதபுரத்தில் முதலில் தொடக்கக் கல்வி சபா நடேசய்யர் தொடக்கப்பள்ளியிலும், மேல்நிலைக்கல்வி இராஜா மேல்நிலைப் பள்ளியிலும்தான் படித்தேன். அப்போது பங்குனி உத்திரம் என்பது இராமநாதபுரத்தில் எங்களது மிகப் பெரிய திருவிழா.இராமநாதபுரத்திற்கு நாங்கள் மாறிச் சென்ற புதிதில், அந்த பங்குனி உத்திரத் திருவிழாவில் நீர்மோர்ப் பந்தல்களில் இலவசமாக வழங்கப்படும் நீர் மோரையும், பானக்காரத்தையும் (புளிக்கரைசலும், வெல்லமும் தண்ணீரில் கரைத்தது )மாறி மாறிக் குடித்து மாலையில் காய்ச்சல் வந்து அம்மா,அப்பாவிடம் அடி வாங்கியது தனிக்கதை.
அந்த பங்குனி உத்திரத்தின் போது சர்ப்பக்காவடி, மச்சக்காவடி, இளநீர்க்காவடி, ரதக் காவடி, பறவைக் காவடி, உடலெங்கும் 108 இடங்களில் அலகு குத்திக் (வேல் குத்தி)காவடி, 1008 இடங்களில் அலகு குத்திக் (வேல் குத்தி)காவடி, 108 தீச்சட்டி காவடி என்று பல வகைக் காவடிகள்வரும்.அவை நீல கண்டியூரணி அருகில் உள்ள கோவிலில் இருந்து தொடங்கி கேணிக்கரை அருகில்(புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள) வழிபடு முருகன் கோவில் வரை(கிட்டத்தட்ட இரண்டரை கிலோ மீட்டர்) ஊர்வலமாக வருவார்கள்.
இதில் அக்கு பஞ்சர் எங்கு வருகிறது. அலகு குத்தும் கொக்கிகளும்,வேல்களும் அக்கு பஞ்சர் புள்ளிகளில் குத்தப்படுவதைக் கவனியுங்கள். முதுகில் குத்தப்பட்டுள்ள அலகுகலும், கொக்கிகளும் சிறுநீர்ப்பாதையில் உள்ள சக்திப் பாதையில் குத்தப்பட்டுள்ளன.அதனால் அந்தப் புள்ளிகளுக்கு உரிய உள்ளுறுப்புக்கள் சக்தியூட்டப்பட்டு பலம் பெறுகின்றன.
சிறுநீர்ப்பை சக்திப் பாதை கண்களுக்கு அருகில் ஆரம்பித்து முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.
கன்னத்தில் குத்தப்படும் அலகுகள், இரைப்பை, பித்தப்பை, இதயம், பெருங்குடல் சக்தி நாளங்களில் சக்தியூட்டுகின்றன.
இதயம் சக்தி நாளம் வாயில் முன் நாக்கில் திறக்கிறது. ஸ்பிளீன் (மண்ணீரல்) சக்தி நாளம் வாயில் நாக்கின் பின் பகுதியில் திறக்கிறது. நாக்கில் அலகு குத்தும் நபருக்கு இதயத்தாக்குதல் (HEART ATTACK) வருவதேயில்லை. மண்ணீரல் சக்தி நாளமும் தூண்டப்படுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்பட்டு உடலில் உள்ள நோய்களும் குணமாக்கப்பட்டு, எதிர்காலத்தில் வரவிருக்கும் நோய்களும் வர விடாமல், அலகு குத்துதலினால் உடல் காக்கப்படுகிறது.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்