மொழி பெயர்ப்புக் கருவி

Monday, May 9, 2011

ஒரு பழம் பெரும் புத்தகம் (கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 6)

ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 5) என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படிப் படித்தால்தான் தொடர்பு விட்டுப் போகாமல் புரியும்.


சிகிச்சர்கள் அல்லது மருத்துவர்கள் இக்கால பேதத்தின் விகற்பத்தைக் கவனத்தில் வைத்து மற்ற வியாதிகளின் சிகிச்சைகளிலும் , இவ்விதியை அனுசரித்து அவுடதப் ( மருந்துகள் கொடுத்தல் ) பிரயோகம் செய்வார்களாயின் கடவுளின் கிருபையால் எந்த வியாதியையும் சவுக்கியப்படுத்துவதில் சித்தி பெறுவார்களென்பது நிச்சயம்.

இதனுடன் அவரவர்களின் தேகசுபாவ விகற்பங்களையும் ( வாத தேகம் ,பித்த தேகம், சிலேற்பன தேகம், வாத பித்த தேகம், பித்த வாத தேகம், பித்த சிலேற்பன தேகம், சிலேற்பன பித்த தேகம், வாதசிலேற்பன தேகம், சிலேற்பன வாத தேகம் ) கவனிக்க வேண்டுமென்பதும் அவசியமாகையால், அதனையும் கவனித்துச் சமயோசிதமாக அனுபானாதிகளை மாற்றியும் அதிகப்படுத்தியும் கொள்வது சிகிச்சர்களாகிய மருத்துவர்களின் கடமையாகும்.

தை சாதாரண நபர்களும் இவற்றை கருத்தில் கொண்டு உணவுகளில் தன்மையைப் பொறுத்து கால பேதங்களில் சரியாக உண்டு வந்தால் நோய் அணுகாது. இதையே வள்ளுவர் தன் குறளில் மருந்து என்ற தலைப்பில் ( மருந்து என்ற அதிகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாடல்கள் எதிலும் மருந்து பற்றியே இராது ) வலியுறுத்தி உள்ளார். தை சாதாரண நபர்களும் கருத்தில் கொள்ள வேண்டும்.

     

இதன் தொடர்ச்சி ''ஒரு பழம் பெரும் புத்தகம்,(கடுக்காய் பிரபாவ போதினி பாகம் 7)'' என்ற பதிவில் தொடரும்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

  1. ஜி கடுக்காய் பத்தி எழுதிட்டு
    எங்களுக்கு டேக்கா குடுத்துறாதீங்க
    தொடர்ந்து எழுதுங்க ஜி

    ReplyDelete
  2. எனக்குத் தெரிவித்த இறைவன் உங்களுக்கும் தெரிவிக்க மாட்டானா.என்னுள் இருந்து பல விடயங்களை உங்களுக்கு உணர்த்த இறைவன் தீர்மானித்திருந்தால் என்னிலிருந்து அவை வெளிப்படும்.நான் ஒரு பேனா மட்டுமே.செய்பவன், செயல்படுத்துபவன் எல்லாம் இறைவனே!!!!!என் செயலாவது யாதொன்றுமில்லை,இனித்தெய்வமே!!!!எல்லாம் இறைச் செயலே என்று உணரப்பெற்றேன்!!!!!!!!! மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. மிக அருமையான அரியதொரு வலைப்பூவினை இறையருளால் இன்று கண்டோம்...

    இத்தகைய அரிய பகுதிக்கு எம்மை நாடி வந்து ஆட்கொண்ட அழகப்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

    சிவயசிவ
    http://sivaayasivaa.blogspot.com

    அன்பன் - சிவ.சி.மா..ஜா

    ReplyDelete
  4. அன்புமிக்க திரு சிவ.சி.மா.ஜானகிராமன் அவர்களே,
    இறைவன் உணர்த்தினாலன்றி நம்மால் எதையும் உணர்த்த இயலாது,இதை சிவ ஞான போதத்தில் உணர்த்த உணர்தலின் என்று கூறுகிறார்.நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளில் உத்தாரம் தாரும் தாரும் எனக் கூறுவதும் இதையே!!!மீண்டும் சொல்கிறேன் நான் ஒரு பேனா மட்டுமே.எழுதுபவன் இறைவன்.நான் இறைவனின் கருவி மட்டுமே.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்