மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, November 10, 2010

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(5)

மனம் என்பது பொறிகளின் வழியே புலன்களை இயக்கி உயிரானது இந்த உலகத்தோடு தொடர்பு கொள்ள வைக்கும் ஒரு கருவியே.உயிரின் கருவிகளான முக்கியுடற் தத்துவங்கள் 96 ல் அந்தக்கரணங்கள் 4 ம் முக்கியமானவை.


ஆன்மாவின் அனுபவத் தேடலின் ஒரு பகுதியே இது.
இதில்தான் எத்தனை எத்தனை அனுபவங்கள். எத்தனை இன்பம் என நினைக்கிறோம்.எத்தனை துன்பம் என நினைக்கிறோம்.இவை அனைத்தும் மாயையே!இவற்றை ஆன்மாவின் கருவிகளாய் இருந்து நிகழ்த்துபவையே அந்தக்கரணங்கள்.


இருட்டான,சப்தமில்லாத,ருசி,வாசனைகள்,தொடுதல் அற்ற உலகத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா!அப்போது உங்களுக்கு இந்த உலகத்தை புலப்படச் செய்வதால்தான் கண், செவி, வாய், மூக்கு, மெய்) இவற்றுக்கு புலன்கள் என்று பெயர்.


மனம் இல்லையேல் பொறிகளில் இயங்கும் புலன்கள் இல்லை.புலன்கள் இல்லையேல் உலகம் நம்மால் உணரப்படுவது இல்லை.எனில் உலகம் என்பது நம் குறைபட்ட புலன்கள் வழியே உணரப்படுவதே. 

அந்தக் கரணங்கள் நான்கும் மனம்,சித்தம்,புத்தி, அகங்காரம் என்பன. மனம் என்பது கம்யூட்டரில் உள்ள ப்ராசஸ்சர்(PROCESSOR) போன்றது.புத்தி என்பது கம்யூட்டரில் உள்ள மெமரி(MEMORY)போன்றது.சித்தம் என்பது கம்யூட்டரில் உள்ள ஓஎஸ்(OPERATING SYSTEM).அகங்காரம் என்பது ஆன்மாவின் முகவரியைப்(I.P ADDRESS) போன்றது. 

இதில் மனத்தை மட்டும் வைத்து புத்தி நிலைக்கே செல்ல இயலாது.புத்தியில் உள்ளதை மனது போய் பார்த்து அடுத்த செயல்களை தீர்மானிக்க,சித்தம் அகங்காரத்தின் துணை வேண்டும்.


மனதை மட்டும் வைத்து இயங்கும் நிலை மனிதன் நிலை.சித்தத்தின் வாயிலாக காரியம் ஆற்றத் துவங்கும் போதுதான் மனிதன் சித்தர் ஆகிறார்.அகங்காரம் என்பது சிற்றுயிர் பேருயிராக பரிணமிக்க கொடுக்கப்பட்டிருப்பது,இதுவே பின்னர் ஆன்மீகத்தில் மேல் நிலை அடைய தடையாக அமைவது.


புத்தி என்பது இது வரை இந்தப் பிறவியில் கற்ற படிப்பறிவு,பட்டறிவு,அனுபவ அறிவு இவற்றின் தொகுதியே.
படிப்பறிவு என்பது நாம் படிப்பதனால் வரும் அறிவு.பட்டறிவு என்பது நாமே அனுபவப்பட்டுத் தெரிந்து கொள்வதனால் வரும் அறிவு.அனுபவ அறிவு என்பது நம் அனுபவத்தாலும்,பிறர் அனுபவத்தாலும் பெறும் அறிவு.


எனவே மனம் என்பது ஞானத்திற்குப் போகும் வழி அல்ல.ஞானத்தின் நிலையும் அல்ல.உயிரின் படித்தரமும் அல்ல.

மனதைக் கடந்து உள்கட உள்கட,என்று உள்கடந்து சென்றால் அதுவே கடவுளைக் காணும் வழி.சொல்லப் போனால் மனமே முக்தி நிலைக்குப் போகும் வழிக்குத் தடை.தடையை கடந்தால் முக்தியே!



நமது முன் பதிவான இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் http://machamuni.blogspot.com/2010/10/blog-post.html என்ற பதிவில் குறிப்பிட்டது போல இம்மாதம் 19,20,21 ம் தேதி நடக்க இருக்கும் இயற்கை நல வாழ்வு முகாமில் கலந்து கொள்ள இருக்கிறேன்.
கலந்து கொள்ளும் அன்பர்கள் இயற்கை உணவு நிபுணர்: திரு.மூ.ஆ.அப்பன் அவர்கள்,
இயற்கை நல வாழ்வு நிலையம் (Natural Life Centre ) 
125, கீழத் தெரு, குலசேகரன்பட்டினம்
தூத்துக்குடி மாவட்டம் - 628206
செல்பேசி: +91 - 9944042986, 9380873645
நடக்கும் இடம் பற்றிய கூகுள் மேப்ஸ் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.கலந்து கொள்பவர்கள் முன்னரே அவரிடம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து பதிவு செய்த பின் வரவும். http://maps.google.co.in/maps?q=GA&um=1&ie=UTF-8&sa=N&hl=en&tab=wl
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்                    

Post Comment

14 comments:

  1. சிறப்பான பதிவு தொடருங்கள்

    ReplyDelete
  2. கருத்துரைக்கு மிக்க நன்றி திருஆர்.கே.சதீஷ்குமார் அவர்களே,தங்கள் வலைப் பூவையும் பார்வையிட்டேன்.மிக நன்றாக உள்ளது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. மாயை அல்ல அது......மா ஐ....

    எதையும் தமிழில் யோசித்தால் சித்தர்கள் தெரிவார்கள்.
    சித்தம் தெளிவடையும்.

    மனம், குணம் அனைத்தும் மூளையின் செயல்பாடுகள்.

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ராவணன் ஐயா அவர்களே,
    இந்தப் பதிவு உண்மையில் திருதோழி சித்தர்கள் ராச்சியம் அவர்களின் பதிவில், மனத்தை வைத்து ஞான நிலை பற்றிக் கூறி இருந்தார்கள்.அதற்கு விளக்கம் கூற அவர்கள் வலைப் பூவில் எழுதினால்,அதிக இடம் பிடிக்கும் என்பதால்,பதிவை இங்கே வெளியிட்டுவிட்டு,என் பதிவின் இணைப்பை தோழியின் பதிவில் போட்டுவிட்டேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்ப

    ReplyDelete
  5. எனக்காக தாங்கள் உஜிலாதேவி தளத்தில் நீண்ட விளக்கத்தையும்,
    வழியையும் கட்டியதற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திருஅனாதி அவர்களே,
    மக்கள் குறை தீர்க்க என்று இறைவன் விதித்த பின் எங்கு மக்கள் துயர் கண்டவுடன் துடைக்கவே நான் தயாராக உள்ளேன்.அறிந்ததை அறிவிப்பதே கடமை என்னும் கடன். தங்கள் வருகையை என் தளத்திலும் எதிர்பார்க்கின்றேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. !!! மனமே மனமே !!! . ,
    அய்யா ,
    நல்லதொரு பதிவு ,சரியாக சொன்னிர்கள் !!!

    இப்படிக்கு ,
    புலிப்பாணிச் சித்தர் அடிமை .
    சித்தர் பைத்தியம் ,

    ReplyDelete
  8. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே.தங்களின் கருத்துக்கள் தெரிவித்தலில் ஒரு இனிமை காண்கிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. மிக்க நன்றி அன்பரே ,
    ( எனக்கும் , தங்களுடைய பதிவிற்கு கருத்துரை எழுதுவதில் அலாதி பிரியம்..., ).., இதையும் படியுங்கள்
    http://pulipanisithar.blogspot.com/2010/11/blog-post_15.html

    இப்படிக்கு ,
    புலிப்பாணிச் சித்தர் அடிமை .
    சித்தர் பைத்தியம் ,

    ReplyDelete
  10. மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே.தங்களின் வலைப் பூவில் என் கருத்துக்களை பதிவு செய்திருக்கிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. உங்கள் பதிப்புகள் அத்தனையும் அருமையாக உள்ளது உங்கள் நற் பனி சிறக்க இறைவனை வேண்டுகிறேன்

    ReplyDelete
  12. மிக்க நன்றி திரு பாலாஜி அவர்களே,
    வாய்ப்புக்கள் கொடுத்த இறைவனுக்கும்,வலைப் பூ நடத்தும் நிறுவனத்திற்கும் என் நன்றி.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  13. அன்பிற்கினிய நண்பர் அவர்களுக்கு , கனகராஜா ஆகிய நான் எழுதிக்கொள்வது, தங்களின் வலை முகவரியை சொடுக்கி பல தகவல்களை அறிய முடிந்தது. மகிழ்ச்சி . அதில் சித்தர்களின் சாக கலை என்பதில் மூச்சு பற்றிய தகவல் அளித்ததில் அது வெறும் மூச்சு மட்டும் அல்ல அது ஒரு பயிற்ச்சி. அந்த பயிற்சி மூலம் சாகா கலையை கற்றுக்கொள்ள முடியும். எனக்கு அந்த கலை தெரியும்.
    ஒரு சித்தர் பாடலில் " உரு தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவை கருதினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல் விருத்தரும் பாலராகலாம் மேனியும் சிவந்திடும், அருள்தரித்த நாதர் பாதம் உண்மை உண்மை உண்மையே.''
    என்ற பாடல் வரிகள் விளக்குகிறது.
    மூலமான மூச்சதில் என்ற பாடலும் அதையே விளக்குகிறது.

    ReplyDelete
  14. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மன வளக்கலை அவர்களே,மக்களை சிந்திக்கும் நிலைக்குத் தூண்ட முயற்சி செய்து வருகிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்