எனது நண்பர் ஒரு அல்லோபதி மருத்துவர்(அவர் பெயர் வேண்டாம்,ஏனெனில் அல்லோபதி மருத்துவர்களுக்கு ஒன்றும் தெரியாவிட்டாலும் அவர்கள் பெயர் வெளியே தெரிந்து மூக்குடைபடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள்). அவர் என்னிடம் ஒரு நாள் சித்த வைத்தியத்தைப் பற்றி பெருமையாக சொல்லுகிறீர்களே!நான் ஒரு நபரை கூட்டிக் கொண்டு வருகிறேன்,அவருக்கு 15 வருடங்களாக மாலைக்கண் நோய்.மாலை 6 மணியானால் கண் தெரியாது.அவரை குணப்படுத்த முடியுமா என்று கேட்டார்.
குணப்படுத்த எனக்கு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால்,நான் குணப்படுத்துகிறேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் அதற்கு அவர் எவ்வளவு செலவாகிறதோ அதற்கு தகுந்தாற்போல் பணம் தரச் சொல்கிறேன் என்று கூறினார்.நான் அதற்கு ஒரு SCAN,M.R.I இதற்கு எவ்வளவு வாங்குகிறீர்கள்.ஒன்றும் குணப்படுத்தாமல் வெறும் படங்காண்பிப்பதற்கே ரூ30,000/= வரை வாங்கும் நீங்கள் ஏன் குணப்படுத்துவதற்கு ஒரு லட்சம் ஏன் கொடுக்கக் கூடாது என்று கேட்டேன்.
கடைசியில் பெரும் வாக்கு வாதத்துக்குப் பின் அதற்கு ஒத்துக் கொண்டார்.அவரை ஒரு ஞாயிற்றுக் கிழமை நோயாளரை வரச் சொல்லுங்கள் என்று கூறினேன்.அவர் எங்கே இருக்கிறார் அவர் ஆணா,பெண்ணா என்ற விவரங்களைக் கேட்டேன்.
அந்த நோயாளர் ஒரு ஆண்.அவர் திருச்சியைச் சேர்ந்தவர். அவரை அரியலூருக்கு வரும்போது ஒரு பெட்டை வெள்ளாட்டின் ஈரலை (ஆணுக்குப் பெண் வெள்ளாடு,பெண்ணுக்கு ஆண் வெள்ளாடு) வாங்கி வரச் சொன்னேன்.
இங்கு ஞாயிற்றுக் கிழமை மதியம் மூன்று மணிக்கு வந்தார்.அவர் கொண்டு வந்த பெண் வெள்ளாட்டின் ஈரலை நன்கு கீறி மேலும் கீழும் ஆவாரை இலை பரப்பி நன்கு வெதுப்பி எடுத்துக் கொண்டு,நன்றாக பசுவின் நெய் விட்டு வதக்கி,அப்படி வதக்கும்போது,காட்டுச் சீரகம் என்ற (சன்னி நாயகம்),நன்கு சுத்தி (தண்ணீரில் கழுவி,கல் மண் நீக்கி நிழலில் உலர வைத்தது)செய்தது.10 முதல் 20 கிராம் வரை தூவி கொடுத்தோம்.
அன்று மாலை அந்த நோயாளர் எனக்கு எல்லாம் தெரிகிறது என்றார்.விட்டமின் A&D எல்லாம் கொடுத்துப் பார்த்திருக்கிறேனே!ஒருவேளை வெள்ளாட்டு ஈரலில் உள்ள விட்டமின் A&D தான் இது போல பார்வைக் குறைபாட்டை நீக்குகிறதா!இது இன்னும் எத்தனை வேளை சாப்பிட வேண்டும் என்றெல்லாம் அந்த நோயாளர்,கேட்டுக் கொண்டே இருந்தார். எனக்கு பல்பை சுற்றி சிறு வெளிச்சம் தவிர எனக்கு எதுவும் தெரியாது.ஆனால் எனக்கு இன்று எனக்கு எல்லாம் தெரிகிறது என்றார்.டாக்டர் என்னிடம் இது சாத்தியமில்லை, இது மாய மந்திரம் போல இருக்கிறது.இவருக்கு தொடர்ந்து பார்வை தெரியுமா?நீங்கள் வேறு ஒரு லட்சம் கேட்டு இருக்கிறீர்கள் என்று கேட்டார்.
நான் சொன்னேன்.இது பழந்தமிழர்களான சித்தர்களின் விஞ்ஞானம் இது.உங்கள் அல்லோபதி வைத்தியக் கண்ணோட்டதில் இதைப் பார்த்தால் இது உங்களுக்கு புரியாது.ஆயுளுக்கும் இந்த ஒரு வேளை மருந்தே போதுமானது . நீங்கள் எங்கள் சித்த வைத்தியத்தின் பெருமை உணரவே இதை செய்தேன். வாழ்நாள் முழுவதும் இரவு நேரத்தில் கண் தெரியாமல் இருக்கும் ஒருவர் அதற்கு எத்தனை லட்சம் கொடுத்தாலும் தகும்,அல்லவா! சொல்லப் போனால் இது வைத்தியமே அல்ல.இது மூலிகைகளின் சக்தி ஊட்டப்பட்ட சிறப்பு உணவேதானே தவிர மருந்தொன்றுமில்லை.இதன் அருமை தெரிய வேண்டித்தான் இது போன்றதொரு கட்டுப்பாட்டினை நான் விதித்தேன் என்று கூறினேன்.
எனக்கு பணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
எனக்கு பணமே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
நாளது தேதி வரை அந்த நபருக்கு அன்று போன மாலைக்கண் நோய் திரும்ப வரவே இல்லை.இந்த பதிவு இதன் முன்னர் உள்ள பதிவில் திரு அனாதி கேட்ட கேள்வியின் பலனாக எனது அனுபவத்தை கொடுத்துள்ளேன்.நான் தெரிந்து கொண்ட பல விடயங்களை நமது வலைப்பூ அன்பர்களுக்கு தொடர்ந்து தந்து கொண்டே இருப்பேன்.
இதே போலவே மாலைக் கண் நோய்க்கு ஆண் நோயாளருக்கு(கலப்படமில்லாத நாட்டுக் கோழிதான் உபயோகிக்க வேண்டும்) பெட்டைக் கோழியின் பித்தையும்,பெண் நோயாளருக்கு சேவலின் பித்தையும் வாழைப் பழத்துக்குள் வைத்துக் கொடுக்க அன்றே மாலைக் கண் நோய் தீரும்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பரே ,
ReplyDeleteஆஹா !!!., பலே !!! .., வார்த்தைகளில்லை கருத்துரை எழுத ...,
" காகம் கூட தீட்டு விட்டு சோறு கிடைக்கும் பொழுதுதான் மற்ற காகங்களை கூப்பிடும் ., தானாக இறை தேடும் நாட்களில் மற்ற காகங்கள் வந்தால் துரத்தும் " -- இது இயற்க்கை
சித்தர் தன்மையுடைய காரியங்களே தாங்கள் செய்தது ., இது போன்ற சித்தர்களின் பதிவிற்கு கருத்துரை எழுதுவதால் பெருமையடைகிறேன் ..!!!
இப்படிக்கு
புலிப்பாணி சித்தர் அடிமை ,
சித்தர் பைத்தியம்
chance illa saami ji
ReplyDeletearumai arumai
ungal anban anaathi
மிக்க நன்றி திருபுலிப்பானி சித்தர் அடிமை,சித்தர் பைத்தியம் அவர்களே,
ReplyDeleteநான் செய்தேன் என்பது என்ன.சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.காரணம் விளங்கியது.காரியம் நடத்தப்பட்டது.கவிதை எழுதியதற்காக தான் கவிதை எழுதியதாக பேனா சந்தோஷப்படக் கூடாது.எழுதியது இறைவன் என்றொரு கவிஞன்.நான் வெறும் பேனா மட்டுமே!
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பர் அனாதி அவர்களே நீங்கள் யாரோ நான் அறியேன்,
ReplyDeleteஆனால் உங்களால் ஒரு சித்தர் ரகசியம் வெளிப்பட்டது.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
நன்றி எனக்கா ??
ReplyDeleteஎன்ன சாமீ ஜி
இது போல் நடக்குமா என்று
எண்ணி நாங்கள் வியந்து வாயடைத்து போய் இருக்கின்றோம்
இதை படிக்க ஒரு வாய்ப்பை அளித்த இறைவனுக்கும், உங்களுக்கு அல்லவோ
நாங்கள் காலமெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்
உள்ளத்திலிருந்து
நன்றி! நன்றி!! நன்றி!!!
உங்கள் அன்பன் அனாதி
என்னை போன்ற சித்தா் தேடல் உள்ளவா்களுக்கு அவசியம் படிக்க வேண்டிய விக்ஷயங்கள் உங்களிடம் நிறைய உள்ளது.நன்றி......
ReplyDeleteமிக்க நன்றி திரு ஈஸ்வரி அவர்களே,நம் நாட்டுச் சித்தர்களின் பெருமையையும் விஞ்ஞானத்தையும் பேச ஆரம்பித்தால் என்னை நான் மறந்துவிடுகிறேன்.இன்னும் வரும்.
ReplyDeleteமிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அன்பர் அனாதி அவர்களே,
ReplyDeleteஎதுவும் வெளிப்பட ஒரு காரணம் இருக்கும்.காரணம் இன்றி காரியம் இல்லை.நீங்களும் நானும் ஒரு சமயம் இறைவனுடன் இரண்டறக் கலந்து இருந்தவர்கள்தான்.எனது பாதையில் தெரிந்தவற்றை உங்களுக்கு சொல்வதால் நன்மை விளையும் என்றால் அது எனக்கே நான் செய்து கொள்ளும் நன்மை. ஏனென்றால் நீங்களே நான்.நானே நீங்கள்.புரிகிறதா?
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
பதிவிற்கு நன்றி சாமீ அழகப்பன் அவர்களே
ReplyDeleteயோகாசனம் பயில மிக்க அவா, தங்களுக்கு தெரிந்த
குரு இருப்பின் அன்புள்ளம் கொண்டு அறியத் தருவீரா
நன்றி
அன்புள்ள திரு ஜெய் மணிகா அவர்களே,
ReplyDeleteநல்லவிதமாகவும்,எளிமையாகவும்,குறைந்த செலவிலும் கற்றுக் கொள்ள சகஜ சமாதி யோக நிலையம்,பெங்களூருவில் சென்று கற்றுக் கொள்ளலாம்.அல்லது அங்கு கற்றுக் கொண்டவர்கள் ஆசிரியப் பயிற்சி நிலை முடித்தவர்கள்(B.S.P) யாரேனும் இருந்தால், யோகா கற்றுக் கொள்ள ஏற்றவர்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
ஐயா,வணக்கம்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா மணி கண்டன் அவர்களே,
ReplyDeleteமிக்க நன்றியுடன் கூடிய வணக்கம்.ஏன் வணக்கத்துடன் நின்றுவிட்டீர்கள்.பேசுங்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
அய்யா மாலை கண்ணுக்கு வெள்ளை ஆட்டின் ஈரல் மருந்து ஆச்சு. அதே போல் மாமிசம் அறவே சாபிடாத சுத்த சைவர்களுக்கு ஏதேனும் உபாயம் உண்டா?
ReplyDeleteகருத்துரைக்கு மிக்க நன்றி திரு HOLISTIC அவர்களே,
ReplyDeleteஉண்டு.கடுக்காய் பிரபாவ போதினி என்ற பதிவை கவனித்து வாருங்கள்.அதில் வரும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
Nalai ithai muyarchi seithu paarka pogirom,,, nallathu kandippaga nadakkum entru mulumaiyaga nambukirom
ReplyDelete