பழந்தமிழர் வாழ்வியலில் உள்ள விடயங்களைக் கண்டால் அதிலும் எந்தக் கருத்து உள்ளது என்பதை அலசி ஆராய்ந்து பார்க்கத் துவங்கி, நான் கண்டறிந்ததையே இங்கு பதிவுகளாக பதிந்து வருகிறேன்.
மகாபாரத யுத்தம் மார்கழியில் அமாவாசையில் தொடங்கியது. பீஷ்மர் கௌரவப்படைக்குத் தலைமையேற்றார். அர்ச்சுனன் அம்புகள் அவர் உடல் முழுவதும் துளைத்தன.
ஆனாலும் தனக்கு எப்போது மரணம் வேண்டுமோ அப்போதுதான் மரணம் சம்பவிக்கும் என்ற வரம் அவர் தந்தை சந்தனு கொடுத்ததால் அவர் உயிரைப் பிடித்தபடி நாட்கள் உயிரோடு கிடந்தார். அவருக்கென்று அம்புகளால் படுக்கை அமைத்துக்கொடுத்தான் அர்ச்சுனன்.

தட்சிணாயணம் என்பது தேவர்களுக்கு இரவு பீஷ்மர் இந்தக்காலததில் மரணத்தைத் தழுவ விரும்பவில்லை.தேவர்கள் விழித்து வரும் நாளான உத்தராயணக் காலம் வரை அம்புப் படுக்கையில் இருந்தார். அந்த நேரத்தில் தான் தருமருக்கு அறங்கள் பற்றி உபதேசித்தார். இந்தச்சந்தர்ப்பத்தில் தான் பிறந்தது ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம்.
பீஷ்மர் இறைவனடி சேர்ந்த நாள் ரதசப்தமி. அந்த மகானின் நினைவாக அர்க்கியம் விடுவது வழக்கம். மாக மாதம் என்று சொல்லும் தை லிருந்து மாசி பத்து வரை மாக ஸ்னானம் செய்வது வழக்கம்.பீஷ்ம நிர்யாணம் அஷ்டமி நாளாகக் கொண்டு பீஷ்மாஷ்டமி என்றும் சொல்லப்படுகிறது.
சக்தியுள்ள சிறு நீர்ப்பை சக்திப் பாதையைப் பற்றிய பதிவே இது. உடலில் உள்ள உறுப்புக்களை, உறுப்புக்களாக மட்டுமே பார்க்கும் அல்லோபதி வைத்திய முறை.அது அறிவற்ற மருத்துவம்.அது அதீத வயது முதிர்ச்சியில்லாத அனுபவமில்லாத வைத்திய முறை.சமீபமாக சுமார் 200 வருடங்களே அதன் வயது.
ஆனால் அக்கு பஞ்சர் என்பது மிகப் பழைமையானது.சுமார் 5000 வருடங்கள் பழைமையானது.நமது சித்த வைத்தியம் அதைவிட பழைமையானது.நமது சித்த வைத்தியத்திலும் குத்தூசி வைத்தியம் என்ற பெயரில் கையாளப்பட்டு வந்துள்ளது.
ஆனால் அக்கு பஞ்சர் என்பது மிகப் பழைமையானது.சுமார் 5000 வருடங்கள் பழைமையானது.நமது சித்த வைத்தியம் அதைவிட பழைமையானது.நமது சித்த வைத்தியத்திலும் குத்தூசி வைத்தியம் என்ற பெயரில் கையாளப்பட்டு வந்துள்ளது.
உடலின் உள்ளுறுப்புக்களை பஞ்ச பூத சக்திப் பிறப்புகளின் இருப்பிடமாகவும்( ORGANS ),இன்றியமையாச் சக்தியோட்டங்களின் வாய்க்கால்களாவும் இருக்கின்றன.
பீஷ்மரின் மரணத்தை தள்ளிப் போட்டது அவர் தகப்பனாரின் வரமென்றால் அர்ச்சுனரின் அம்புப்படுக்கை தேவையில்லையே!
அந்த அம்புப் படுக்கையால்தான் சிறுநீர்ப் பையின் சக்திப்பாதையில் உள்ள உள்ளுறுப்புக்களின் புள்ளிகள் துளைக்கப்பட்டு அதன் மூலம் உடலின் இன்றியமையாச் சக்தி(VITAL FORCE) பெறப்பட்டு அதன் மூலமே ஆயுள் நிலை நாட்டப்பட்டு வந்துள்ளது புலனாகும்.

படங்கள் உதவி மற்றும் தகவல் உதவிக்கு http://www.educationalservice.net/2010/february/es20100212_beeshma-ashtami.php இணைய தளத்துக்கு மிக்க நன்றி.
இணைய தளத்துக்கு மிக்க நன்றி.
சிறுநீர்ப்பையின் உட்புறத் தோற்றம்.
பதிவு பெரியதாகப் போனதால் அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 10,அக்கு பஞ்சர் அறிவோமா!பாகம் 11 இரட்டைப் பதிவாக ஒரே நாளில் வெளியிடுகிறேன்.பார்த்துப் பயன் பெறுங்கள்.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
No comments:
Post a Comment
உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்