மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, March 9, 2011

இயற்கை உணவு இன்றியமையாத செல்வம் 7

திருமதி இரதி லோகனாதன் அவர்கள் கூறியுள்ள கருத்துக்களை இந்த இயற்கை உணவே இன்றியமையாத செல்வம் பகுதியில் சற்று பார்ப்போம்.



இவர்கள் திரு மு.ஆ.அப்பன் அவர்கள் எழுதிய புத்தகமான ''இயற்கை உணவே நோய் தீர்க்கும் மருந்து'' என்ற நூலில் இவர் சிந்தனைக்கு விடை கிடைத்தவுடன்,புத்தருக்கு ஞானம் பிறந்தது போல் இவருக்கு நோய்களில் இருந்து விடுபட வழி கிடைத்தது,என்கிறார்.

சிறந்த உணவு முட்டையும் பாலும் என எண்ணிய,எண்ணம் மாற்றமடைந்ததையும் விவரிக்கிறார்.
இந்த நூலுக்கு நீங்கள் தரும் நன்கொடை ரூபாய்
20/= மீண்டும் இந்த நூல் அச்சடிப்புக்கு மட்டுமே உபயோகிக்கப்படப் போகிறது என்கிறார்.

இவர் ஒரு அரசுத் துறையில் 12 மணி நேரப் பணியில் உள்ளார்.இரவுப்பணியும் உண்டு.அப்படி இருந்தும் பலமான வேலைப் பழுவுக்கும் இடையே பொதுப்பணி செய்ய வேண்டும் என்ற ஆர்வம் பாராட்டத் தக்கது.

இவர் விருப்பம் இவர் பெற்ற இன்பம் எல்லோரும் பெற வேண்டும் என்பதே.அவர் விருப்பம் நிறைவேற நம் வலைப்பூ அன்பர்கள் இவர் புத்தகத்தை வாங்கி எல்லோரும் பயன் பெற வேண்டுகிறேன். இந்தப் புத்தகம் மதிப்போ பல கோடி, கொடுக்கும் தொகையோ நன்கொடை 

ரூபாய் 


20/= தான்.








தேங்காயின் மகத்துவத்திற்கு மேலும் ஒரு உதாரணம். கிராமத்தில் தேள் கொட்டிவிட்டாலோ, வேறு விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டாலோ ஒரு அரை மூடி தேங்காயைத் தின்றுவிட்டால் விஷம் முறிந்துவிடும். இதை இன்றும் பல கிராமங்களில் உயிரைக் காப்பாற்ற, வழக்கமாக வைத்துள்ளார்கள். 

அவ்வளவு விஷ முறிவு சக்தியுள்ளது தேங்காய்.இப்படிப்பட்ட தேங்காய் இயற்கையான வடிவத்திலேயே சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள நஞ்சுக்கள் நீங்கி உடல் பல்லாண்டு காலம் நோயின்றி வாழும்.இதனாலேயே காலஞ் சென்ற உயர்திரு ஜட்ஜ் பலராமயா அவர்களின் குரு தேங்காயை கற்பமாக்கி உண்டு வெகுகாலம் வாழ்ந்து வந்து பின் ஞான சித்தி அடைந்தார்.

கற்றிடுவோம் சாகாத கல்வி!!!  
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

11 comments:

  1. Very Nice Informative Post.

    Thanks for sharing.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அருமையான பதிவு
    பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  3. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சங்கர் குருசாமி அவர்களே,
    ஞான உணவே இயற்கை உணவு.உணவு உண்பதையே ஞானத்தின் பாதையாக மாற்றிக் கொள்ளலாம்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரீஃப் அவர்களே,
    தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.சித்தர் விஞ்ஞானம் 28 பதிவை பார்த்தீர்களா!!!எப்படி இருக்கிறது என்று கருத்துக் கூறுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. வனக்கம் ஐயா,

    தங்களின் பதிவு மிகவும் அருமை உஙகளின் பணி தொடர வாழ்த்துகள்

    ந.ராஜசேகர்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ந.ராஜ சேகர் அவர்களே, தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.என்னுடைய அனைத்து பதிவுகளையும் படித்துப் பாருங்கள்.மொத்தம் 97 பதிவுகள் ஆகிவிட்டன.சதம் அடித்துவிட இருக்கிறேன்.தொடர்ந்து பதிவுகளைப் படித்து வாருங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. Where can i Get this book please give me guide.My E-Mail id is madasamy167@gmail.com

    Thanks,

    M.Madasamy

    ReplyDelete
  8. Please give your email & bank details so that we can pay and get the book.

    ReplyDelete
  9. சாமீ அழகப்பன் அவர்களுக்கு வணக்கம். அருமையான செய்திகளை உங்கள் வலைப்பூவில் தந்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். தங்களது ஒய்வு நேரத்தில் எனது கீழ்க்கண்ட வலைப்பூக்களை படித்து தங்கள் மேலான கருத்துக்களை அதில் இடுமாறு வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  10. சாமீ அழகப்பன் அவர்களுக்கு வணக்கம். அருமையான செய்திகளை உங்கள் வலைப்பூவில் தந்து வருகிறீர்கள். பாராட்டுக்கள். தங்களது ஒய்வு நேரத்தில் எனது கீழ்க்கண்ட வலைப்பூக்களை படித்து தங்கள் மேலான கருத்துக்களை அதில் இடுமாறு வேண்டுகிறேன். நன்றி

    ReplyDelete
  11. Here are those blogs:
    www.frutarians.blogspot.com
    www.vedantavaibhavam.blogspot.com

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்