மொழி பெயர்ப்புக் கருவி

Friday, March 4, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(27)

அன்புள்ள பதிவு வாசகர்களே,
உலகில் நாம் பிறந்தது எதற்காக என்று சிந்தித்திருக்கிறோமா!!! ஆனால் நாளை காலை எழுந்தவுடன் செய்யப் போகும் வேலைகளைப் பட்டியலிடுங்கள்.


அவை என்றாவது யாராவது செய்யாத புதிய வேலையாக இருக்கப் போகிறதா!!!.அவை இந்த உலகில் பணம் சம்பாதிப்பதற்கு நீங்கள் கைக் கொண்ட வேலைப் பணியாகவோ அல்லது உங்கள் தந்தையோ உங்கள் முன்னோர்கள் பொருள் தேட உண்டான பணிகளாகவோ இருக்கலாம்.


படிப்பது வேலைக்குப் போய் பொருள் தேடவே!!!வேலைக்குப் போவதும் பொருள் தேடவே!!!இப்படிப் பொருள் தேடுவதற்காகவே வாழ்க்கையில் எல்லா வழிகளையும் கடைப் பிடித்து பொருள் தேடி வைக்கிறீர்கள்.அது நீங்கள் அனுபவிக்கவா!!! உங்கள் பிள்ளைகளோ,வேறு யாராவது அனுபவிக்கவேதான்.


இதற்கு,எதற்கு முடிவற்ற முயற்சியில் பொருள் தேடி கடைசியில் தேடிய பொருளை அனுபவிக்க இயலாமல் ஆசைகளுடன் மடிந்து,அவற்றை அனுபவிக்க மீண்டும் பிறவி எடுத்து,மீண்டும் பழைய பிறவியில் செய்த வேலைகளைப் போல், மீண்டும் பொருள் தேட வேலைகள் செய்து, அந்தப் பிறவியில் மீந்து போன ஆசைகளுடன் மீண்டும் அந்த ஆசைகளை அனுபவிக்க பிறவியெடுத்துக் கொண்டே இருக்கிறோம்.


மனம் விரும்பும் ஆசையின் பின் ஓடிக் கொண்டே இருக்கிறோம்.முதலில் வெறுங்காலுடன் நடந்தால் செருப்பு வேண்டும் என்று எண்ணுகிறோம்.பின் ஒரு சைக்கிள் இருந்தால் நன்றாக இருக்குமே.எங்கும் விரைவாகப் போய் வரலாமே என்று நினைப்போம் பிறகு அதற்குப் பொருள் தேடத் துவங்குவோம்.பிறகு ஒரு மோட்டார் பைக் இருந்தால் இன்னும் விரைவாகப் போய் வரலாமே என்று நினைப்போம் பிறகு அதற்குப் பொருள் தேடத் துவங்குவோம்.பிறகு ஒரு கார் இருந்தால் மழை வெயிலில் பாதிப்பாகாமல் விரைவாகப் போய்  வரலாமே என்று நினைப்போம் பிறகு அதற்குப் பொருள் தேடத் துவங்குவோம்.


இப்படியே பொருள் தேடத் துவங்குவற்கு ஒரு காரணம் நமக்குத் தேவை.மேலே கூறப்பட்டது ஒரு எடுத்துக்காட்டுக்காகவே!!!இது போல பல விடயங்கள்.அவற்றின் பின்னணியில் இருப்பது ஆசையே!!!!இதுதான் நம் துன்பம் அனைத்திற்கும் காரணம் என சித்தர்கள்,புத்தர்கள் என எத்தனை ஞானிகள் வந்தாலும்,சொன்னாலும் நமக்கு ஆசையின் பின் ஓடுவதே வழக்கமாகி உயிரில் ஊறிவிட்டது. ஆசையின் முடிவு மரணத்தில் முடிவதில்லை.விரும்பப்பட்ட ஆசை நிறைவேறும் வரையில் உயிரை பிறவியில் ஆழ்த்துவதில் இருந்து ஆசை ஓய்வதில்லை.


ஆனால் இப்படி ஆசைகளின் பின்னால்,மனதால்  ஓட வைக்கப்படும் உயிர் எதற்காக பிறவி எடுக்க ஆரம்பித்தது.அது எதை விரும்புகிறது,அதை எப்படி நிறைவேற்றுவது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா!!!!!


இந்தப் பிறவிப் பெருங்கடலுக்கு முடிவே இல்லையா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


வள்ளுவர் என்ன சொல்கிறார்.


பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்


இதை மஹாஞானிகள்தான் சொல்ல வேண்டும்,செய்ய வேண்டும், கடைப்பிடிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.நம் ஒவ்வொருவருக்கும் இது சிந்திக்க அளிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பம்தான் இந்த தற்போதைய பிறவி.இந்தப் பிறவிச் சுழலில் இருந்து விடுபட இந்தப் பிறவியை பயன்படுத்திக் கொள்ள வாருங்கள்.வீணான இந்த உடலாசைகளை முடிந்த வரையில் ஒதுக்கி வையுங்கள்.வாருங்கள் யோசிப்போம்.
      




ஆசைகளின் பின்னால் மனிதன் எப்படி ஓடுகிறான் என்பதைப் பாருங்கள்.பாடல்களில் வரும் கதா பாத்திரங்கள் சில கேள்விகளைக் கேட்டு பதில் கொடுத்து விளக்குவதைக் கொஞ்சம் கவனியுங்கள்.





அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்  

Post Comment

8 comments:

  1. Dear Sir, Very Nice Post.. But in today's context, money makes and breaks everything. So inevitably everybody are running behind it. Only those who attained certain level of Gyan are exceptions.

    In this Kaliyuga survival of genuine people will always be in Troublesome waters.

    Leaving the AASAI by all is the best aim. But in reality it is far from truth.Let us make an attempt. I appreciate your genuine attempt in attaining that. Keep posting..

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. அய்யா தங்கள் மொபைல் எண் அலிக்க முடியுமா? எனது தொடர்பு எண் 9841667805

    ReplyDelete
  3. மெல்ல அடி எடுத்து
    மெதுவான நடை நடந்து
    கண்ட உண்மை யெல்லாம்
    கானகம்விட்டு அவனவன்- அகம்புக
    விளம்புங்கள் ஞானத்தை வரவேற்கிறேன்...

    இந்த இழையை தொடர்ந்து எழுதுங்கள்...
    மிக்க நன்றி,

    என்றும் அன்புடன்
    தேவன்

    ReplyDelete
  4. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சங்கர் குருசாமி அவர்களே,
    ஆசையைத் துறந்த மனிதன் மஹா மனிதனாகி இறைவனிடம் இறண்டறக் கலக்கிறான்.இதற்கு எல்லோரும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே என் அவா.கலியுகம் ஆனாலும் சரி,எந்த யுகம் ஆனாலும் சரி,நல்லது 5%தான் இருக்கும் என்பதை பாண்டவர்கள் 5 பேர்,கௌரவர்கள் 100 பேர்,என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அல்லவா.ஆசையைத் துறக்க நினைப்பதே முதல் படி.பெரும் மஹான்களும் இந்த முதல் படியைத் தாண்டித்தான் வந்துள்ளனர்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு ரா சின்னதுரை அவர்களே,
    தங்களின் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவிட்டது.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு தேவன் அவர்களே,
    நிறைய அன்பர்கள் தங்கள் அலை பேசியில் இந்த வலைப்பூவை காண்பதாக கூறியுள்ளார்கள்.அவர்களால் ஒளிப்படக் காட்சிகளைக் காண இயலாது.தாங்கள் ஒலிபெருக்கி இல்லாத கணினியில் இந்த ஒளிப்படக் காட்சியைக் கண்டால் அதன் முழுத் தாக்கமும் கிடைக்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இந்த காணொளிக் காட்சிகளை ஒலி பெருக்கி இணைக்கப்பட்ட கணினியில் கண்ட பின் மீண்டும் கருத்துரை இடுங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. Very hard hitting article.. I'm reminded by the song from our Bharathiyar.."thedi soru..."
    br

    ReplyDelete
  8. ஐயா திரு பாஸ்கரன் அவ்ர்களே,
    தங்களது கருத்துரைக்கு நன்றி,
    காலா என் காலருகே வாடா உனைச் சற்றே உதைக்கின்றேன் என்று சொன்ன பாரதியின் வழியில் வந்த நாம் கண்டதற்கும் பயந்து தினம் தினம் சாகிறோமே! இதை நினைத்தால் எனக்கு கோபம் வெறுப்பு இந்த பயந்து சாகும் மனிதரைப் பார்த்து!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்