மொழி பெயர்ப்புக் கருவி

Wednesday, February 2, 2011

சித்தர்களின் விஞ்ஞானம் பாகம்(26)

தாம்பூலம் தரித்தல்;-தாம்பூலம் தரித்தல் என்றால் வெற்றிலை போடுவது, என்று அழைக்கப்படுகிறது.


ஒரு தாம்பூலம் என்பது
(1)ஐந்து வெற்றிலை(குறைந்த பட்சமாக)
(2)சிறு துண்டு சாதிக்காய்
(3)மொட்டு நீக்கிய கிராம்பு 2
(4)சாதிப் பத்திரி
(5)ஒரு ஏலக்காய்
(6)கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு
(7)தேவையான அளவு சுண்ணாம்பு
(8)குல்கந்து
(9) சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்)
(10)பவள பற்பம்
வெற்றிலையை ஒவ்வொன்றாக எடுத்து(வெற்றிலை பற்றிய பழ மொழிகள்(1)வெல மேல வெல வச்சுக் கொடுத்தாலும் இல மேல இல வச்சு வெற்றிலை போடக்கூடாது,(2)ஆனை மேல அம்பாரியில் போனாலும் குப்புற விழுந்த வெற்றிலையை குனிஞ்சு எடுக்கணும்) சுண்ணாம்பு தடவி நடு நரம்பு, வெற்றிலை நுனி,வெற்றிலைக் காம்பு இவற்றை நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும்(இவற்றை நீக்காவிட்டால் வயிற்றுப் புண்ணான அல்சர் உண்டாகும்.)


முதலில் சிறு துண்டு சாதிக்காய், மொட்டு நீக்கிய கிராம்பு, சாதிப் பத்திரி, ஒரு ஏலக்காய், கொட்டைப் பாக்கு அல்லது சுருள் பாக்கு இவைகளை வைத்து,சுண்ணாம்பு தடவிய வெற்றிலைகளை வாயில் போட்டு நன்கு மென்று
(1)முதலில் ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்
(2) இரண்டாவதாக ஊறும் எச்சில் ஆலகால விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(3) மூன்றாவதாக ஊறும் எச்சில் விடம், அதைத் துப்பிவிட வேண்டும்.
(4)நான்காவதாக ஊறும் எச்சில் சமம், அத்துடன் குல்கந்து,சிருங்கி பற்பம்(மான் கொம்பு பற்பம்),பவள பற்பம் வைத்து நன்றாக வெற்றிலையை மென்று
(5)முதலில் ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(6)இரண்டாவதாக ஊறும் எச்சில் தேவாமிர்தம் அதை விழுங்கிவிட வேண்டும்.
(7)மூன்றாவதாக ஊறும் எச்சில் அமிர்தம் அதைத் விழுங்கிவிட வேண்டும்.
(8)நான்காவதாக வருவது சக்கை.அதைத் துப்பிவிட வேண்டும்.


இவ்வாறு வெற்றிலை போட்டால் வயிற்றில் உற்பத்தியாகிற அதிக அமிலம், அதனால் உண்டாகும் வயிற்றுப் புண்,வாயு,அதிக செரிமானமின்மை அனைத்தும் போகும்.


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்        

Post Comment

13 comments:

  1. Very Nice to know about the Tranditional Thanboolam procedure.

    Thanks for sharing.

    http://anubhudhi.blogspot.com/

    ReplyDelete
  2. Sir, Vanakkam
    intha information romba nalla erukku. sir only you can give such a valuable information for us.

    Thank you..

    Manjula srirangam

    ReplyDelete
  3. வெத்தலைல இதனை விஷயமா
    சூப்பர் சாமீ ஜி

    இந்த மான் கொம்பு பற்பம், பவள பற்பம்
    இதெல்லாம் எங்க கிடைக்கும் ஜி

    ReplyDelete
  4. தாங்கள் எழுதியதை படிக்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது. நன்றாக வெற்றிலை போட்ட திருப்த்தி ஏற்பட்டது, மிக்க நன்றி.

    ReplyDelete
  5. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு சங்கர் குருசாமி அவர்களே,
    நமது பாரம்பரிய தமிழ் முறைகள் பல காரணம் தெரியாமலும்,பல இது அசிங்கம் என்றும்,கேவலம் என்றும் கருதப்பட்டு அழியும் அவலம் உள்ளது. இந்த நிலை மாறவே பல விடயங்களை நான் மிக விளக்கமாக கொடுக்க வேண்டி உள்ளது.மிக விவரமாக உள்ளவர்கள் இவ்வளவு விளக்கம் தேவையில்லை என்று கருதலாம்.இருந்தாலும் விளக்கம் தேவை என்று கேட்பவர்களைக் கருத்தில் கொண்டு அதிக விளக்கத்தை பொருத்தருள்க!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  6. கருத்துரைக்கு மிக்க நன்றி திருமதி மஞ்சுளா,திருவரங்கம் அவர்களே, எழுத வேண்டியது அதிகம் இருக்கிறது.நேரம் கிடைப்பது மிகக் கொஞ்சமாக இருக்கிறது.வயிறு இருக்குதுங்களே!!!
    மிக்க நன்றி
    என்றென்றும்
    பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  7. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மருத்துவர் சுனில் கிருஷ்ணன் அவர்களே,
    தாம்பூலம் தரித்தல் என்றுதான் சொல்வார்களே தவிர,தாம்பூலம் மெல்லுதல்,அல்லது சாப்பிடுதல் என்று கூற மாட்டார்கள்.காரணம் தாம்பூலம் தரித்தலால் உடலில் சுண்ணாம்புச் சத்து சேருவதோடு,இரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரிக்கிறது.எலும்பு மச்சையின் அளவு அதிகரிக்கிறது.வயிற்றின் சீரண சக்தி அதிகரிக்கிறது.வெற்றிலையின் மகத்துவம் இன்னும் நிறைய இருக்கிறது.இன்னும் வரும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  8. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு பாவா ஷெரிஃப் அவர்களே, மான் கொம்பு பற்பத்தை சிருங்கி பற்பம் என்ற பெயரில் இம்ப்காப்ஸ்(IMPCAOPS(INDIAN MEDICAL PRACTIONERS SOCIETY,ADYAAR)) மருந்துக் கடைகளில் வாங்கலாம்.பவழ பற்பமும் அங்கேயே கிடைக்கும்.ஆனால் இந்திய அரசும்,தமிழக அரசும் இந்தப் பொருட்களுக்கு வன விலங்குப் பொருட்கள் தடைச் சட்டத்தை வைத்து மிரட்டுவதால்.இது தயாரிப்பில் குறைந்து வருகிறது.சித்த மருத்துவத்தை அரசு ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டே அழித்து ஒழிக்கவே வழி செய்து வருகிறது!!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  9. கருத்துரைக்கு மிக்க நன்றி திரு மணி அவர்களே,
    நான் இவ்வாறுதான் வெற்றிலை போடுகிறேன்.மிகவும் சுவையாக இருப்பதோடு,உடலுக்கும் ஆரோக்கியம்!!!!
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  10. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். தாம்பூலம் போடுவது மிகவும் நல்லது.தங்களின் பதிவு எனக்கு சில குழப்பம் ஏற்படுத்துகிறது.

    ஒரு வெற்றிலை எடுத்து சுண்ணாம்பு தடவி,பாக்கு வைத்து,சிறிது சாதிக்காய், சாதி பத்திரி,கிராம்பு,ஏலக்காய் வைத்து மடித்து வாயில் வைத்து சிறிது மென்றுவிட்டு, பின் இரண்டாவது வெற்றிலை எடுத்து அதில் மேற் சொன்னது போல் செய்து மீண்டும் வாயில் வைத்து மென்று,பின் மூன்றாவது வெற்றிலையில் அது போல், பின் 4,5 என்று போட வேண்டுமா? நீங்கள் அழகாக ஒருமுறை தாம்பூலம் போட்டு வீடியோ எடுத்து you tube ல் பதிவேற்றினால் உபயோகமாக இருக்கும்.
    அல்லது முதலில் சிறிது சாதிக்காய்,சாதிபத்ரி, பாக்கு,ஏலக்காய், கிராம்பு இவைகளை வாயில் போட்டு சிறிது மென்று விட்டு, பின் ஒவ்வொரு வெற்றிலையாக போடவேண்டுமா?
    தெளிவு படுத்துங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  11. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். தாம்பூலம் போடுவது மிகவும் நல்லது.
    தங்களின் பதிவு எனக்கு குழப்பம் ஏற்படுத்துகிறது.

    ஒரு வெற்றிலை எடுத்து சுண்ணாம்பு தடவி,பாக்கு வைத்து,சிறிது சாதிக்காய், சாதி பத்திரி,கிராம்பு,ஏலக்காய் வைத்து மடித்து வாயில் வைத்து சிறிது மென்றுவிட்டு, பின் இரண்டாவது வெற்றிலை எடுத்து அதில் மேற் சொன்னது போல் செய்து மீண்டும் வாயில் வைத்து மென்று,பின் மூன்றாவது வெற்றிலையில் அது போல், பின் 4,5 என்று போட வேண்டுமா?
    அல்லது முதலில் சிறிது சாதிக்காய்,சாதிபத்ரி, பாக்கு,ஏலக்காய், கிராம்பு இவைகளை வாயில் போட்டு சிறிது மென்று விட்டு, பின் ஒவ்வொரு சுண்ணாம்பு தடவிய வெற்றிலைய போடவேண்டுமா?
    தெளிவு படுத்துங்கள். நீங்கள் அழகாக ஒருமுறை தாம்பூலம் போட்டு வீடியோ எடுத்து you tube ல் பதிவேற்றினால் உபயோகமாக இருக்கும்.
    நன்றி.

    ReplyDelete
  12. அன்புள்ள அய்யா அவர்களுக்கு,
    வணக்கம். தாம்பூலம் போடுவது மிகவும் நல்லது.தங்களின் பதிவு எனக்கு சில குழப்பம் ஏற்படுத்துகிறது.

    ஒரு வெற்றிலை எடுத்து சுண்ணாம்பு தடவி,பாக்கு வைத்து,சிறிது சாதிக்காய், சாதி பத்திரி,கிராம்பு,ஏலக்காய் வைத்து மடித்து வாயில் வைத்து சிறிது மென்றுவிட்டு, பின் இரண்டாவது வெற்றிலை எடுத்து அதில் மேற் சொன்னது போல் செய்து மீண்டும் வாயில் வைத்து மென்று,பின் மூன்றாவது வெற்றிலையில் அது போல், பின் 4,5 என்று போட வேண்டுமா? நீங்கள் அழகாக ஒருமுறை தாம்பூலம் போட்டு வீடியோ எடுத்து you tube ல் பதிவேற்றினால் உபயோகமாக இருக்கும்.
    அல்லது முதலில் சிறிது சாதிக்காய்,சாதிபத்ரி, பாக்கு,ஏலக்காய், கிராம்பு இவைகளை வாயில் போட்டு சிறிது மென்று விட்டு, பின் ஒவ்வொரு வெற்றிலையாக போடவேண்டுமா?
    தெளிவு படுத்துங்கள்.
    நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்