கண்களுக்கு அருகில் ஆரம்பித்து சிறுநீர்ப்பை சக்திப் பாதை முதுகு வழியாக சுழன்று இரு முறை ஓடி பின் காலில் முடைவடைகிறது.படங்களில் காண்க.
கண்களுக்கு அருகிலிருந்து ஆரம்பிப்பதால் கண் பார்வைக் குறைவையும் இது போக்கும்.
கண்களுக்கு அருகிலிருந்து ஆரம்பிப்பதால் கண் பார்வைக் குறைவையும் இது போக்கும்.
சிறுநீர்ப்பை சக்திப் பாதையின் 11 வது புள்ளி எலும்புகளை சரி செய்யும்(INFLUENTIAL POINT FOR BONE),12 வது புள்ளி தோல் அழற்சிகளை(SKIN ALLERGY) சரி செய்யும்,13 வது புள்ளி நுரையீரலை(LUNGS) சரி செய்யும்,14 வது புள்ளி இதய உறையை சரி செய்யும்,15 வது புள்ளி இதயத்தை(HEART) சரி செய்யும்,16 வது புள்ளி அனைத்து விதமான ஒவ்வாமையையும்(ALL ALLERGY ) சரி செய்யும்,17 வது புள்ளி உதர விதானத்தையும்( DIAPHRAGM ) இரத்தத்தையும் சரி செய்யும்,18வது புள்ளி ஈரலை சரிசெய்யும்(LIVER),19வது புள்ளி பித்தப்பையை(GALL BLADDER) சரிசெய்யும்,20 வது புள்ளி மண்ணீரலை(SPLEEN),21 வது புள்ளி இரைப்பை மற்றும் வயிற்றை (STOMACH) சரி செய்யும்,22 வது புள்ளி முக்குழி வெப்பப் பாதையை(TRIPLE WARMER) சரி செய்யும்,23 வது புள்ளி சிறு நீரகங்களை(KIDNEYS) சரி செய்யும்,24 வது புள்ளி இரத்தம் ஒழுகுவதை(LUMBAGO, HEMORRHOIDS) கட்டுப்படுத்தும்,25 வது புள்ளி பெருங்குடலைச்(LARGE INTESTINE) சரி செய்யும்,26 வது புள்ளி அதீத மலப் போக்கு, மற்றும் பல வியாதிகளைப் போக்கும்(LUMBAGO, DIARRHEA, INCONTINENCE, CYSTITIS), 27 வது புள்ளி சிறு குடலைச் சரி செய்யும்(SMALL INTESTINE),28 வது புள்ளி சிறுநீர்ப்பையை சரி செய்யும்(URINARY BLADDER),29 வது புள்ளி இரத்தப் போக்கு,முறையற்ற மாதவிடாயை சரி செய்யும்(HEMORRHOIDS,IRREGULAR MENSES).
எனவே மேற்கண்ட சிறுநீர்ப்பையின் அக்குபஞ்சர் புள்ளிகள் பீஷ்மப் புள்ளிகள் என இந்திய அக்குபஞ்சர் மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.
இதே அக்கு புள்ளிகளைத் தூண்ட யோகாவில் பவன முக்தாசனம் என்ற ஒரு அற்புத ஆசனம் உள்ளது.அதையும் கீழே கொடுத்துள்ளேன்.பவனம் என்றால் காற்று அல்லது வாயு முக்தா என்பது விடுவிப்பு ஆசனம் என்பது யோக நிலை. எனவே இது வாயு விடுவிப்பு ஆசனம் என்று அழைக்கப்படுகிறது. இதை பயிற்சி செய்யும் ஒருவர் சீரண உறுப்புகளை மசாஜ் செய்வதோடு வயிறு மற்றும் குடல்களில் உள்ள தேவையற்ற வாயுவை வெளியேற்றுகின்றனர்.மேலும் அதிக பயனாக உடலின் உள்ளுறுப்புக்களுக்கு அதீத பலத்தையும் அளிக்கின்றனர்.அத்துடன் மேலதிக ஆயுளையும் பெறுகின்றனர்.

இத்துடன் முதுகை நன்கு தரையில் உருட்டினால் மிக மிக நன்று.பக்கவாட்டுப் புறளல் செய்தால் அது மிக மிக நன்று.
அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்