மொழி பெயர்ப்புக் கருவி

Monday, October 3, 2011

எனது கருத்தொத்தவர்கள் பாகம்(2)

எனது சீடர்களில் ஒருவர்:-
அன்புள்ள பதிவு வாசகர்களே,
இந்தப் பதிவில் என்னிடம் மருத்துவம் கற்க வந்த சீடர்களில் எனது தலையாய சீடர் திரு தமிழவேள் என்பவரைப் பற்றி கூற இருக்கிறேன்.


அவரது வலைப்பூ இணைப்பு இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.ஒரு முறை பார்த்துவிட்டு கட்டுரையை தொடருங்கள்.

http://siddhahealer.blogspot.com/2011/09/blog-post_23.html


திரு தமிழவேள் அவர்களின் அலைபேசி எண்கள்
93458 12080, 94447 76208
அவரின் முகவரி 
ந.தமிழவேள்,
மரபு வழி நலவாழ்வு மையம்,
எண் 31,அண்ணா தெரு,காந்தி நகர்,
ஆவடி,சென்னை-600 054


திரு தமிழவேள் என்னிடம் முதல் முதலாய் வைத்தியம் கற்க வேண்டும் என்றபோது , அகத்தியரின் மஹா திராவக பாடலின்படி உங்களுக்கு வைத்தியம் கற்க தகுதி இல்லை என்று கூறுகிறதே என்ன செய்ய என்று கேட்டேன். அவரை மீண்டும் வேறோர் நாள் பார்ப்போம் என்று திருப்பி அனுப்பிவிட்டேன்.


பின்னர் அவர் எங்கள் பாண்டியூர் சபை உபதேசம் பெற்று உறுப்பினரும் ஆனார்.உபதேசம் பெற்றால் தேவர்கள் ஆவர்.பாண்டியூர் சபை தேவ சபை.மச்ச முனிவரின் சித்த ஞான சபை உறுப்பினர் ஆவது அவ்வளவு எளிதல்ல.எனவே எனது பார்வை மாறியது.ஆனாலும் அவர் கேட்ட அனைத்து கோரிக்கைகளும் மறுக்கப்பட்டது(சித்த ஞானிகளால் கட்டளை எனக்கு இடப்படாததால்). 


ஆனால் அவர் என்னை விடவில்லை,முயற்சி திருவினை ஆக்கும் என்ற வாக்கிக்கிணங்க,குரு பார்த்த சாரதி அவர்கள், அவருக்கு கற்றுக் கொடுக்க ஆணையிட்டார்.தமிழவேளின் முயற்சி சித்தர்கள் ஞான சபையை தளர்த்தியது.எங்களது சித்த ஞான சபை அவரை ஏற்றது. அதாவது தவிர்க்கப்பட்டவர் எனது தலை சிறந்த சீடரானார். (திருவிளையாடல் படத்தில் வருமே,விறகு விற்பவர் பாணபத்திரரின் ஒதுக்கப்பட்ட சீடர் என்று கூறிக் கொண்டு, ஹேம நாத பாகவதரை தோற்கடித்தது போல், இறையருள் தமிழவேளுக்கு பல சக்திகளை கூட்டுவித்தது )


அவர் பற்பல சித்த வைத்திய மருத்துவ பிரயோகங்களையும் கற்றார்.பல ஞானியர்களின் தொடர்பு கிட்டியது.அவர் ஆங்கில வைத்தியத்தை எதிர் முறையம் என்று பெயரிட்டார். பல சித்தர் விடயங்களில் தேர்ந்தார். எனது பிரியத்துக்குரிய சீடராகவும் ஆனார்.


பல சித்த மருந்துகளை செய்து பார்த்தார்.கடைசியில் ஒன்று கேட்டார்.ஏன் ஐயா(என்னை அப்படித்தான் அழைப்பார்) இத்தனை சித்த மருந்துகள் இருந்தும் ஏன் நோயாளியை முழுதாக குணப்படுத்த முடியவில்லை என்று கேட்டார்.


உங்களுக்கு மருந்து வேண்டுமா நோயாளியின் குணம் வேண்டுமா??? என்று கேட்டேன். நோயாளர் குணம்தான் வேண்டும் என்றார். அதற்கேற்றாற் போல பல விடயங்களை விளக்கினேன். அதன் அடிப்படையில் அவர் இறை வழி மருத்துவம் என்ற ஒரு வழியை அவரது போக்கில் உண்டாக்கிக் கொண்டார்.


அவருக்கு தற்போது சித்த மருத்துவம், இறை வழி மருத்துவம், வர்மம், டாய் சீ, அக்கு பஞ்சர்(மெடிசினா ஆல்டெர்னேட்டிவா),அக்கு தொடு கலை,மற்றும் சீனத் தற்காப்புக் கலைகளிலும் விற்பன்னர்.


சித்தர் மரபு வழி மருத்துவம் என்ற பெயரில்,அவரது முறையில், வழியில் பல நோய்களுக்கு அற்புதமான சிகிச்சைகள் புரிந்து வருகிறார்.


மற்றொரு நபரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். திருமதி ரத்னா வேல்முருகன் அவர்கள் திரு தமிழவேள் மூலம் அறிமுகமானவர்கள். அவர்கள் அக்கு பஞ்சர் கலையை பதஞ்சலி யோகா மையம் மூலம் கற்றுக் கொடுத்து வருகிறார்கள். நிறைய அன்பர்கள் அக்கு பஞ்சர் கற்க விரும்பி எனது மின்னஞ்சல் முகவரிக்கு முகவரி கேட்டு நிறைய மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள்.அவர்களுக்கு பதில் அனுப்பும் முகமாகவே இந்தப் பதிவு.அவர்கள் திருமதி ரத்னா வேல்முருகன் அவர்களின் யோகா மைய முகவரியை அணுகலாம்.அவர்கள் யோகா மைய முகவரி இதோ கீழே


பதஞ்சலி யோக மையம்,
3/7, செந்தமிழ் நகர்,
வேளச்சேரி முக்கிய சாலை, 
மேடவாக்கம்.
சென்னை-100


அக்கு பஞ்சரில் ஒரு தத்துவம் கூறுவார்கள் ""THERE  IS NO MEDICINE IN THE NEEDLE.THERE IS A TECHNIC TO CONNECT THE UNIVERSE AND THE PATIENTS BODY.  THE POWER OF THE NEEDLE HOLDERS HAND SHOULD BE MOST POWERFUL TO CONNECT THE UNIVERSAL FORCE. SO THE MAN BEHIND THE NEEDLE SHOULD BE MOST POWERFUL."


இந்த வாக்கியங்களுக்கு தகுந்த மருத்துவர்களே மேற் சொன்ன இருவரும்.பதஞ்சலி யோக மையம் நடத்தும்  பயிற்சி வகுப்புக்கள் மத்திய அரசின் ஒப்புதலோடு நடத்தப்படுகின்றன என்பது கூடுதல் சிறப்பு.    


அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.


மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

4 comments:

  1. அன்புள்ள சாமீ ஜி

    எனது முன்னோர்கள் செய்த நன்மைகளால்
    தங்களின் தொடர்பு எனக்கு கிடைத்தது
    மிகப் பெரிய பாக்கியமே

    நன்றி ஜி

    ReplyDelete
  2. அன்புள்ள பாவா ஷெரீஃப் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி,
    அனைத்தும் தீர்மானிக்கப்பட்டவையே.இறைவனால் எனக்கு அறிவிக்கப்பட்டு,அவை என்னால் தெரிவிக்கப்பட்டு உங்களுக்கு, தெரிவிக்கப்பட்டதும் இறைக்கருணையினாலன்றி வெறொன்றில்லை.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. தங்களின் ரசமணி குறித்த விபரம் இன்னும் கொஞ்சம் தெளிவாக இருந்தால் நலம்.
    என்றும் அன்புடன். அருள்நிதி கனகராஜ்.மங்களம் யோக தவமையம்.(வேதாத்திரி மகரிஷி)

    ReplyDelete
  4. ayya vanakkam sidha maruthuvathil udal uyaramaka valara ethum marunthu ullatha?

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்