மதிகெட்ட மத்தியஅரசும், அரசாங்கத்துக்கு(ஆரோக்கியம் பற்றி) ஆலோசனை கூறும் மதியில்லா அரசியல் ஆலோசகர்களும்(பாகம்2)
அன்புள்ள பதிவு வாசகர்களே,
என்டோ சல்பானை 177 நாடுகளில் தடை செய்ய ஒத்துக் கொண்டபோது இந்தியா மட்டும் இதை தடை செய்ய ஒத்துக் கொள்ளாததே, மேற்கண்ட தலைப்பை நான் வைக்கக் காரணம்.மேலும் என்டோ சல்பானின் வீரியம் கொண்ட வேறொரு பூச்சி மருந்தைக் கண்டு பிடிக்கும் வரை இந்த மருந்தை தடை செய்யக் கூடாது என்பதே இந்திய அரசாங்கத்தின் வேண்டு கோள்.
என்டோ சல்பான் பயங்கரத்தை இங்கே சற்று பாருங்கள்.நான் இதைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் படித்திருந்தாலும்,இந்த மருந்தை பல வேதியியல் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி அதன் விளைவுகளைக் கண்டாலும்,நானும் இந்த விஷமூட்டப்பட்ட உணவுகளையே உண்ணும் கையறு நிலையிலேயே உள்ளேன்.
இதை கடந்த 40 வருடங்களாக விவசாயிகள் உபயோகித்து வந்ததின் பலன் அடுத்த நமது தலைமுறை பாவம் வெகுவாக கஷ்டப்படப் போகிறது(எனது மகள்கள் உட்பட). கடந்த போக அரிசி விளைச்சலில் தஞ்சாவூர் பகுதிகளில் தெளிக்கப்பட்ட என்டோசல்பானின் அளவு என்ன தெரியுமா? 2,75,000 லிட்டர்.இவையெல்லாம் எங்கே போகப் போகிறது தெரியுமா? நம் வயிற்றுக்குள்தான்!!!!!!!!!!!!!!!!!!!!
நன்றி பூவுலகு
என்டோ சல்பான் என்ற பூச்சி மருந்தை தெளித்ததன் விளைவை முதன்முதலில் கண்டு கொண்டது அரசோ அல்லது அரசு இயந்திரங்களோ இல்லை.ஒரு பொதுத் தொண்டு நிறுவனமே இதை ஆராய்ச்சி செய்து வெளிக் கொண்டு வந்தது.
கேரளாவில் என்டோசல்பான் தெளித்ததால் விளைந்த கடுமையான விளைவுகளை அனுபவித்ததை பார்த்த பின் அங்குள்ள கேரள அரசு இதை தடை செய்துள்ளது.
ஹிட்லர் விஷவாயுக் கூண்டுக்குள் அடைத்து பலரை கொன்றதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நாம் நம் நாட்டிலேயே இரண்டாந்தரக் குடிமக்கள் போல நம் அரசாங்கத்தாலேயே விஷம் புகட்டப்படுகிறோம்.நம் மரணத்தைத்தான் இந்த அரசாங்கம் விரும்புகிறதா??????????மரணம் என்றாலும் பரவாயில்லை, மேற்குறிப்பிட்டவாறு பல அங்க ஹீன குறைபாடுகளினால் துன்புற்று வாழும் வாழ்வை பரிசாக கொடுத்தால்?????????
மேலும் நம் வயிற்றில் பால் வார்க்கும் விடயம்,தமிழ்நாட்டிலும் நம் தமிழக அரசும் இப்போது(நேற்று நடந்த விவசாய மானியக் கோரிக்கையின்போது) இந்த கடும் விஷமான என்டோ சல்பானை தடை செய்துள்ளது.வாழ்க!!!! தற்போதைய தமிழக அரசு.