மொழி பெயர்ப்புக் கருவி

Tuesday, January 31, 2012

முக்கிய அறிவிப்பு

இனி எமது வலைத்தளம் http://www.machamuni.com/ இன்று முதல் செயல்படத்துவங்கி உள்ளதால்,எமது வலைப்பூவில் http://machamuni.blogspot.in/ }பதிவுகள் படித்து வந்த வாசகர்கள் இனி வலைத்தளத்தை பார்வையிட்டு தங்களின் அதே மேம்பட்ட ஆதரவை நல்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இன்று ஆகாச கருடன் கிழங்கு பற்றிய பதிவு வலைத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதன் இணைப்பு இதோ
http://www.machamuni.com/?p=442
http://www.machamuni.com/?p=459
இந்த வலைத் தளத்தை வடிவமைத்துக் கொடுத்த விண்மணி வேர்டு பிரஸ்  http://winmani.wordpress.com/அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

Sunday, January 29, 2012

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 55)சதுரகிரி மாவூத்து 2

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 54)சதுரகிரி மாவூற்று 1என்ற பதிவைப் படித்துவிட்டு இந்த பதிவுக்கு வரவும்.அப்படி படித்தால் மட்டுமே தொடர்பு விட்டுப் போகாது புரியும்.


இந்த  மாவூற்று என்ற தீர்த்தத்தில் நீராடி,அந்தத் தீர்த்தத்தை குடித்து வந்தால் தீராத நோயெல்லாம் தீரும் என்பது சித்தர் வாக்கு.இது பல்லாயிரம் வருடங்களாய் இறை அருளால் வற்றாமல் பொங்கிப் பெருகி வந்து கொண்டிருக்கிறது.அந்த ஊற்றைப் பற்றிய படங்கள் இதோ கீழே.


 மாவூற்று
மாவூற்றில் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்
மாவூற்றுப்பாதை

 மாவூற்றுப் படங்கள்





சதுரகிரித் தல புராணத்தில் முதல் பாடலில் குறிப்பிட்டுள்ள சடாதாரி அம்மன் சன்னதி இதோ கீழே!!!!!.(முற்பிறவியில் தேவமாதாக இருந்து யாழ் வல்ல தேவரை(மறு பிறப்பில் பச்சைமால்) காமுற்றதால் மானிடப் பிறவி எடுத்தவர்) 
சடாதாரி அம்மன்

மாவூற்றில் சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன்  ஷண்முக சுவாமிகளிடம் ஆசிபெறும் காட்சி

சதுரகிரி ஹெர்பல்ஸ் கண்ணன் அவரது மலைவாழ் நண்பர்களுடன்(பளியர்கள்)

ஷண்முக சுவாமிகள்
மேற்கண்ட ஷண்முக சாமிகள் யோகா போன்றவற்றால் உடலை உறுதி செய்தவர்.பல திவ்விய தேசங்களில் சுற்றியவர்.மேலும் பல அரிய மூலிகைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
மாவூற்றில் உதயகிரிநாதர் கோவிலில் நான் ஷண்முக சுவாமிகளிடம் ஆசிபெறும் காட்சி

உதயகிரிநாதர்

மேற்கண்ட கடைசிப் படத்தில் சூலாயுதத்தில் குமிழுக்குக் கீழ் ஒரு ஒளி வட்டம் தெரிகிறதா.அது சித்தர்களின் ஒளியுடல் தரிசனம்.பல்லாண்டுகளாக சித்தர்கள் இங்கு வந்து உதய கிரி நாதரை அல்லும் பகலும் தரிசித்துச் செல்கின்றனர்.அந்தச் சித்தர்களின் அருள் பெற்று எல்லோரும் நீடூழி வாழ்க!!!

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment