இதற்கு முந்தைய பதிவு சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 51) கலிக்கம் 2 படித்த பின் இந்தப் பதிவையும் சேர்த்துப் படிக்கவும்.
கண்ணுக்கு இடும் முக்கிய கலிக்க(கண்ணிலிடும் மருந்து) மருந்தை இங்கே விவரிக்கிறேன்.
(1)தும்பைப் பூ- 60 எண்ணம்
(2)களாப் பூ - 60 எண்ணம்
(3)மிளகு (சுத்தி செய்தது) - 20 கிராம்
(4) நல்லெண்ணெய் - 200 மி லிட்டர்
மிளகை ஒன்றிரண்டாகத் தட்டி, மேற்படி எல்லாச் சரக்குகளையும் ஒரு கலரில்லாத ஒரு பாட்டிலில் ஊற்றி,இரண்டரை அடி ஆழத்தில் வெயில் படும் இடத்தில் மண்ணில் புதைக்கவும்.நான்கு நாட்கள் கழிந்தவுடன்,எண்ணெயை மட்டும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.வெள்ளியினால் செய்த கம்பியியில் தோய்த்து ஓரிரு துளிகள் வீதம் கண்ணுக்கு கலிக்கமாக விட்டு வர,சிரசில் உள்ள நீர் கண்கள் வழியாகவும்,நாசிகள் வழியாகவும் வெளியேறும்.கண்ணெரிச்சல், வெப்பம் , வாத, பித்த,சிலேற்பனமாகிய முக்குற்றங்களும் நீங்கும்.ஆரோக்கியமான தேகமுடையவர்கள்,வருடத்திற்கு இரு முறையாவது இம்முறையைக் கடைப் பிடிக்க வேண்டும்.
அடுத்த கட்டுரையில் ஆரோக்கிய வாழ்விற்கான நசியம் (மூக்கில் மருந்து)இடுதலை பார்ப்போம்.