மொழி பெயர்ப்புக் கருவி

Sunday, September 25, 2011

சித்தர்களின் விஞ்ஞானம்(பாகம் 44)ஞானம் 2


ஞானம் என்றால் என்ன?????(பாகம்2):-

அன்புள்ள பதிவு வாசகர்களே,
ஞானம் என்றால் என்ன????ஞானம் அடைவது எப்படி??????நான் ஞானியாகிவிட்டேனா என்று தெரிந்து கொள்வது எப்படி????இப்படி உங்களுக்கு பல கேள்விகள் எழுந்திருக்கலாம்.அல்லது எழாமலும் இருக்கலாம்.


மேலும் இது பற்றி தெரிந்து கொள்ள சித்தர் விஞ்ஞானம் பாகம்(42),ஞானம் என்றால் என்ன? என்ற பதிவை படித்துவிட்டு இந்தப் பதிவுக்கு வந்தால் நன்கு புரியும்.


சிவஞான சித்தியாரில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்,
""திடம் இது பூஜை ஜபமும் தியானம்
  உடல் வாக்கு உளத்தொழில் உந்தீ பற
  உயர்வாகும் ஒன்றில் ஒன்று உந்தீ பற""
என்றும் 
""சன்மார்க்கம் சக மார்க்கம் சற்புத்திர மார்க்கந்
  தாத மார்க்கம் என்றும் சங்கரனை அடையும் 
  நன்மார்க்கம் நாலவை தாம்""
என்றும் சிவ ஞான சித்தியாரில் குறிப்பிடுகின்றார்.


1)சரியை-தாசமார்க்கம்-சாலோகம்-திருநாவுக்கரசர்
2)கிரியை-சற்புத்திர மார்க்கம்-சாமீபம்-திருஞான சம்பந்தர்
3)யோகம்-சக மார்க்கம்-சாரூபம்-சுந்தரர்
4)ஞானம்-சன்மார்க்கம்-சாயுச்சியம்-மாணிக்கவாசகர் குருசிஷ்ய மார்க்கம் என்றும் கூறுவார்கள்


சாலோகம் என்பது நாம் இப்போது செத்துக் கொண்டிருக்கிறோமே (சா+லோகம்) அந்த உலகமே சாலோகம்,சாமீபம் என்பது இறைவனுக்கு சமீபமாக(அருகாமை) செல்வது,சாரூபம் என்பது இறைவன் ரூபமாகவே ஆவது(இறை சக்தியை அடைவது),சாயுச்சியம்(இறையே நான் எனும் நிலை அடைவது) என்பது இறைத்தன்மையின் உச்சியை அடைவது.அதுவே முத்தீ(மூன்று தீ) அதுவே ஜீவன் முக்தி.


விரும்பும் சரியை முதல் மெய்ஞானம் நான்கும்
அரும்பு மலர் காய் கனி போல் "அன்றோ பராபரமே"


என்று தாயுமானவர் கூறியுள்ளார்.அதாவது ஞானம் என்ற படிப்பில்,சரியை முதல் வகுப்பு,கிரியை இரண்டாம் வகுப்பு,யோகம் நான்காம் வகுப்பு.நான்காம் வகுப்பான ஞானம் கடைசி வகுப்பு.இதில் தேர்ந்தால் முக்தி.


யோக மார்க்கம்.(சக மார்க்கம்):-
இறைவனுடன் இறைவனுக்கு நண்பன் போன்று பழகுவதே சக மார்க்கம் அல்லது யோக மார்க்கம் என்று அழைக்கப்படுவது.


அதாவது யோகம் என்பது {தச வாயுக்களையும் (பிராணனையும், உப பிராணன்களையும்)} பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி முழு ஜோதியை நினைவிலும், கனவிலும் நினைத்து இருத்தல். இது சக மார்க்கம்(தோழ நெறி). இறைவன் எனது தோழன் என்றால் இயற்கையின் அனைத்து விதி முறைகளும் எனக்காக தளர்த்தப்படும் மீறப்படும்.


இந்த நிலைக்கு எடுத்துக் காட்டு சுந்தரர்,மற்றுள்ள ஞானியர்,யோகியர்,சித்தர்கள்.



 


ஞான மார்க்கம்.(சன்மார்க்கம் மார்க்கம்):-
இறைவனுடன் இறைவனுக்கு மற்றோர் இறை போல பழகுவதே சன்மார்க்கம் என்ற ஞான மார்க்கம்.அல்லது குரு சிஷ்ய மார்க்கமென்றும் கூறுவார்கள்.


புறத்தொழில்,அகத் தொழில் இன்றி அறிவு மாத்திரமாகவே செயல்படும் வழிபாடு ஞானம்.
இதன் மூலம் நிச்சயமாகச் சொல்லக் கூடியது என்னென்றால்,பூஜை,ஜெபம்,தியானம், என்பன மூன்றும் முறையே மனம், வாக்கு, மற்றும் உள்ளத்தால் செய்யப்படும் தொழில்கள்தான்.மேலும் அவை முறையே ஒன்றைவிட ஒன்று உயர்வானது.அதாவது மூன்றில் தியானமே உயர்வானது.அதிலும் உயர்வானது ஞானமே.



இப்படி உயர்வான ஞானத்தைப் போதித்த மாணிக்கவாசகரானாலும் சரி, திருஅருட்பிரகாச வள்ளலார் ஆனாலும் சரி இறைவனை அருவமாகவும் வழிபடலாம் என்ற கொள்கை, கோவிலை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்கு பிடிக்காததால் 63 நாயன்மார்களில் மூவர் முதலி என்று ஞான சம்மந்தர்,அப்பர்,திருநாவுக்கரசர் என்ற மூவரைத்தான் அழைப்பார்கள்.மாணிக்க வாசகரை முக்கியப்படுத்த மாட்டார்கள்.மேலும் மாணிக்க வாசகர் எழுதிய முழுதும் ஞானத்தைச் சொல்கின்ற பழக்கத்தில் இல்லாத ஒரு பதிகமான ஞானத்தாழிசை என்ற பதிகத்தை அடுத்து வரும் பதிவுகளில் வெளியிடுகிறேன்.


இறைவனுடன் இவ்வாறான முறைகளில் பழகி ஞானம் அடைந்ததுடன்,ஞானம் அடைந்த வயதுகளை கீழ்க்கண்ட பாடலில் காணலாம்.


"அப்பருக்கு என்பத்தொன்று அருள் வாதவூரருக்கு
செப்பிய நாலெட்டில் தெய்வீகம் :-இப்புவியில்
சுந்தரருக்கு மூவாறு தொன் ஞானசம்மந்தருக்கு
அந்தம் பதினாறு என் றறி"


அப்பருக்கு எண்பத்தோரு வயதிலும்,வாதவூரரான மாணிக்க வாசகருக்கு 32 வயதிலும்,சுந்தரருக்கு 18 வயதிலும், ஞான சம்மந்தருக்கு 16 வயதிலும் இறைவன் முக்தி அளித்தான்.

அடுத்து ஒரு முக்கிய விஷயத்தோடு அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Post Comment

5 comments:

  1. அன்புள்ள சாமீ ஜி
    பதிவு மிக அருமை

    இதே போல் இஸ்லாமிலும் இருக்கிறது
    (தாங்கள் அறியாதது அல்ல )

    1. ஷரியத்
    2. தரீகத்
    3. ஹகீகத்
    4. மஃரிபத்

    வழிகள் வேறாயினும்
    சேருமிடம் அந்த இணையில்லா
    ஒருவனின் திருவடி மட்டுமே

    நன்றி ஜி

    ReplyDelete
  2. அன்புள்ள பாவா ஷெரீஃப் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி,
    இதே கருத்தை எம்மதமும் ஓர்மதமே,என்ற பதிவில் வலியுறுத்தி இருக்கிறேன்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  3. சாமீ ஜி

    அடுத்த பதிவு முடி உதிர்வு பிரச்சினைக்கு
    தீர்வு சொல்லும் பதிவாக அமைந்தால்
    அடியேன் மிகுந்த சந்தோசம் அடைவேன்

    எனக்கு மட்டும் அல்ல அனைவருக்கும்
    பயனாக நிச்சயமாக அமையும்

    ReplyDelete
  4. அன்புள்ள பாவா ஷெரீஃப் அவர்களே,
    கருத்துரைக்கு நன்றி,
    அடுத்த பதிவு முடி உதிர்வு பிரச்சினைக்கு தீர்வு சொல்லும் பதிவாகவே இருக்கும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  5. திரு பாலு அவர்களே!!!
    திருமிகு சிவ செல்வராஜ் அவர்களை நன்கறிவேன்,இது மட்டுமல்ல,அவர்கள் கொடுக்கும் அதே தீட்சையைத்தான்,வடலூர் ராமலிங்க வள்ளலாரும்,எங்களது பாண்டியூர் சித்த ஞான சபையிலும்,திருச்சி மெய்வழி ஆண்டவர் சபையிலும், உலக சமாதான ஆலயம்,திருவிண்ணத்துப் பாலம்,தேனியிலும் கொடுக்கப்படுகிறது.இதில் இன்னம் தெளிவு பெறவும், இதற்கு மேல் விளக்கம் பெறவும் வேண்டுமெனில் எனது தனி மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete

உங்கள் கருத்துரைகளால் எம் வலைப்பூ செழுமைப்படட்டும்